தகுதித் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள்…!

Advertisement

Aptitude Questions in Tamil

போட்டிகள் நிறைந்த இந்த உலகில் உங்களின் திறமைகள் மூலமே நீங்கள் உங்களுக்கான இடத்தை அடையமுடியும். இன்று உயர்கல்வி முதல் வேலைவாய்ப்பு என அனைத்திற்கும் தகுதித்தேர்வுகள் உள்ளது. அதில் உங்கள் மொழிப்பாடத்திற்கு  எவ்வளவு முக்கியத்துவோம் உள்ளதோ அதே அளவு Aptitute மற்றும் Mental Ability யும் முக்கியத்துவம் வாய்ந்தது. உங்களின் மதிப்பெண்களை உயர்த்த இந்த பகுதி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இங்கு பலருக்கு  Aptitute மற்றும் Mental Ability கொஞ்சம் கடினமாக காணப்படும். காரணம் மொழிபாடத்தை மனப்பாடம் செய்வதுபோல் இவற்றில் செய்ய முடியாது. தெளிவான விளக்கங்கள் இருந்தால் மட்டும் இவற்றை புரிந்துகொள்ள முடியும். நீங்கள் உங்களது Aptitute மற்றும் Mental Ability திறனை அதிகரித்துக்கொள்ள சிறிய அடிப்படைக்கணக்குகளில் இருந்து ஆரம்பிப்பது சிறந்தது. உங்களுக்கு மிகவும் தெளிவான விளக்கங்களுடன் கொடுக்கப்பட்டுள்ள இந்த வினாக்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Aptitude Questions with Answers in Tamil:

  1. மணிக்கு 60 கிமீ வேகத்தில் ஓடும் ரயில் 9 வினாடிகளில் ஒரு கம்பத்தை கடக்கிறது எனில் ரயிலின் நீளம் என்ன?

விளக்கம்:

வேகம் =  (60 x 5/18 )மீ/வினாடி

= (50/3) மீ/வினாடி

ரயிலின் நீளம் = (வேகம் x நேரம்).

ரயிலின் நீளம் = ((50 /3)x 9) மீ

ரயிலின் நீளம் = 150 மீ.

2. சுவரில் சாய்ந்திருக்கும் ஏணியின் கோணம் 60° மற்றும் ஏணியின் அடி. சுவரில் இருந்து 4.6 மீ தொலைவில் உள்ளது எனில் ஏணியின் நீளம் என்ன?

விளக்கம்:

AB என்பது சுவராகவும், BC என்பது ஏணியாகவும் இருக்கட்டும்.

appititude test in tamil

பிறகு, ACB = 60° மற்றும் AC = 4.6 மீ.

AC/BC = cos 60° = 1/2

BC = 2*AC

= (2*4.6) மீ

= 9.2 மீ.

ஏணியின் நீளம் = 9.2 மீ.

3. ஒரு பொருளின் விற்பனை விலை இருமடங்காக இருந்தால், அதன் லாபம் மூன்று மடங்காகும். எனில் அதன் லாப சதவீதத்தை காண்க.

விளக்கம்:

விற்பனை விலை = Rs. X  

லாப விலை = Rs.

3(Y – X ) = (2Y -X )

3Y – 3X = 2Y -X

3Y – 2 Y = – X + 3X

Y = 2X

லாபம்  = லாப விலை (Y) – விற்பனை விலை (X)

= 2X -X

லாபம் = X

லாப சதவீதம் (%) = ((X /X)*100)

= 100 %

லாப சதவீதம் (%)  = 100 % 

 

4. ஒரு பேட்ஸ்மேன் 3 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 110 ரன்கள் எடுத்தார். விக்கெட்டுகளுக்கு இடையே ஓடியதன் மூலம் அவர் தனது மொத்த ஸ்கோரில் எத்தனை சதவீதத்தை பெற்றார்?

விளக்கம்:

ஓடி பெற்ற ரன்களின் எண்ணிக்கை = 110 – ((3*4)+(8*6))

= 110 – 60

= 50 ரன்கள்.

சதவீதம் = ((50/110)*100)

= 0.45*100

= 50 %

ஓடி பெற்ற ரன்களின் சதவீதம் = 50 சதவீதம்.
5. ஒரு பழ வியாபாரி சில ஆப்பிள்களை வைத்திருந்தார். அவர் 40% ஆப்பிள்களை விற்கிறார், இன்னும் 420 ஆப்பிள்களை வைத்திருக்கிறார். முதலில், அவரிடம் இருந்த ஆப்பிள்களின் எண்ணிக்கை என்ன?
விளக்கம்:
வியாபாரிடம் இருந்த ஆப்பிள்களின் எண்ணிக்கை X என்க.
             (100 – 40)% * X = 420
                     60/100 * X = 420
                                 
                                       =  700
வியாபாரியிடம் இருந்த ஆப்பிள்களின் எண்ணிக்கை = 700 ஆப்பிள்கள்.
6. 15, 25, 40 மற்றும் 75 ஆல் வகுபடும் நான்கு இலக்கங்களின் மிகப்பெரிய எண் என்ன ?

விளக்கம்:

4 இலக்கங்களின் பெரிய எண் 9999 ஆகும்.

15 = 3 × 5

25 = 5 × 5

40 = 2 × 2 × 2 × 5

75 = 3 × 5 × 5

LCM (15, 25, 40, 75) = 2 × 2 × 2 × 3 × 5 × 5 = 600

9999 ஐ 600 ஆல் வகுத்தால், மீதி 399 ஆகும்.

தேவையான எண் (9999 – 399) = 9600.

மிக பெரிய நான்கு இலக்க எண் 9600.

 

7. 10 நாற்காலிகளின் விலை 4 டேபிள்களுக்கு சமம். 15 நாற்காலிகள் மற்றும் 2 மேஜைகளின் விலை ரூ. 4000 எனில் 12 நாற்காலிகள் மற்றும் 3 மேஜைகளின் மொத்த விலை என்ன?

விளக்கம்:

ஒரு நாற்காலி விலை X என்க.

ஒரு மேஜையின் விலை Y என்க.

10X = 4Y                       15 X + 2 Y =4000

Y = 5/2 X

15 X + 2 Y = 4000

15 X + 2 (5/2 X)  = 4000

15 X + 5 X  = 4000

20X = 4000

X = 4000/20

X =200

Y = 5/2 X

Y = 5/2 *(200)

Y = 500

எனவே, 12 நாற்காலிகள் மற்றும் 3 மேஜைகளின் விலை = 12 X + 3 Y

= 12 (200) + 3 (500)

= 2400 + 1500

= 3900

12 நாற்காலிகள் மற்றும் 3 மேஜைகளின் விலை = Rs.3900

 

8. (17)3.5 x (17)? = 178

விளக்கம்:

(17)3.5 x (17)x = 178

(17)3.5 + x = 178

3.5 + x = 8

x = (8 – 3.5)

x = 4.5

                  x = 4.5

9. 8 பேர் கொண்ட குழு விளையாட்டில் 65 கிலோ எடையுள்ள ஒருவருக்குப் பதிலாக புதிய நபர் வரும்போது 8 பேரின் சராசரி எடை 2.5 கிலோ அதிகரிக்கிறது. எனில் புதிதாக இணைந்த நபரின் எடை என்னவாக இருக்கும்?
விளக்கம்:

அதிகரித்த மொத்த எடை = (8 x 2.5) கிலோ

= 20 கிலோ.

புதிய நபரின் எடை = (65 + 20) கிலோ

= 85 கிலோ.

புதிய நபரின் எடை = 85 கிலோ

 

10. 112 x 54 = ?

விளக்கம்:

(112 x 5 4 ) = 112 x (10/2) 4
appititude 2

= 70000

 (112 x 5 4 ) = 70000

 

மேலும் இது போன்ற Aptitute மற்றும் Mental Ability கேள்வி மற்றும் விளக்கங்களுக்கு pothunalam.com தளத்தை பார்த்து பயன்பெறுங்கள்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement