Beetroot Tamil Peyar
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Beetroot Tamil Name பற்றி விவரித்துள்ளோம். பொதுவாக நாம் அனைவருமே காய்கறிகள் மற்றும் பழங்களை பெரும்பாலும் ஆங்கிலத்தில் மட்டும் தான் கூறி வருகிறோம். இதனால், ஒரு சில பழங்களின் தமிழ் பெயர் என்ன என்பது நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி நமக்கு தெரியாமல் இருக்கும் தமிழ் பெயர்களில் பீட்ரூட்டும் ஒன்று. அதாவது, பீட்ரூட் தமிழ் பெயர் என்ன என்று நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
எனவே, நீங்கள் பீட்ரூட் என்பதற்கான தமிழ் பெயரை தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இப்பதிவில் Beetroot Tamil Peyar -ஐ கொடுத்துள்ளோம்.
பீட்ரூட் தமிழ் பெயர்:
பீட்ரூட் என்பதன் தமிழ் பெயர் செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு ஆகும். இதனை பெரும்பாலும் தமிழ் செங்கிழங்கு என்று கூறுவார்கள். இது சிகப்பு நிறத்தில் அல்லது நாவல்பழ நிறத்தில் இருக்கும். இது பீட் தாவரத்தின் அடிபகுதியில் காய்க்கும் கிழங்கு ஆகும். பீட்ரூட்டை அமெரிக்காவில் பீட் என்று கூறுவார்கள்.
அதுமட்டுமில்லாமல் மேசைவகைப் பீட், தோட்டவகைப் பீட், சக்கரைப் பீட், சிவப்பு பீட், பொன் பீட் என்ற பெயரிலும் பீட்ரூட்டை கூறுவார்கள். பீட்ரூட் உணவுக்காக மட்டுமின்றி நிறமியாகவும் மருத்துவ மூலிகையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பீட்ரூட் ஆனது, உரோம ஆட்சிக் காலத்தில் கிழங்குகளுக்காகவும் வளர்க்கப்பட்டன. இது ஐரோப்பியர்களால் பெரிதும் உண்ணப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து தற்போது தமிழர்கள் போன்ற இதர மக்களும் இதை உண்ணுகிறார்கள்.
பீட்ரூட் ஜூஸ் அதிகம் குடிக்கிறீங்களா..? அப்போ இதை தெரிஞ்சிக்கோங்க..!
பீட்ரூட் சத்துக்கள்:
- பீட்டா சையனின்
- கரையக்கூடிய நார்ச்சத்துகள்
- இரும்புச் சத்து
- வைட்டமின் பி1
இதுபோன்ற சத்துக்கள் பீட்ரூட்டில் அதிகமாக உள்ளது.
பீட்ரூட் மருத்துவக் குணங்கள்:
- மலச்சிக்கல் பிரச்சனையை போக்குகிறது. மேலும், வயிற்றை சுத்தமாக வைத்து கொள்கிறது.
- இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதை தடுக்கிறது.
- சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கிறது.
- இதில் இல்ல போலிக் அமிலம் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து ஆகும்.
- இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
- எலும்பு சம்மந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.
தொடர்புடைய பதிவுகள் |
கேரட் என்பதன் தமிழ் பெயர் இது தானா..? |
ஆப்பிள் என்பதன் தமிழ் பெயர் இது தானா..? |
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |