பள்ளிக்கூடம் வேறு சொல் | Pallikoodam Veru Sol in Tamil

Advertisement

Pallikoodam Veru Sol in Tamil

அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! தினமும் நம் பதிவின் வாயிலாக ஒவ்வொரு வார்த்தைக்கான வேறு சொல் மற்றும் வேறு பெயர்கள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவின் வாயிலாக பள்ளிக்கூடம் என்பதன் வேறு சொல் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். இப்பொழுதும் நம் கண்களை கலங்க வைக்கும் வார்த்தை என்றால் அது பள்ளிக்கூடம் தான்.

நம் வாழ்வில் மறக்க முடியாத அழகிய நினைவுகள் கொண்ட இடம் என்றால் அது பள்ளிக்கூடம் தான். அவ்வளவு ஏன் நாம் அதிகளவு சந்தோசமாக இருந்த இடமும் அது தான். இன்னும் சொல்லப்போனால் பள்ளிக்கூடத்திற்கு நிகர் வேறு வேறு எதுவுமே இல்லை. சரி நாம்  பள்ளிக்கூடத்தை ஸ்கூல் என்று சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பள்ளிக்கூடத்திற்கு வேறு பெயர்கள் பல இருக்கின்றன. அதை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.

மாவட்டம் வேறு சொல்

பள்ளி பெயர் காரணம்:

Pallikoodam Veru Sol

பொதுவாக பள்ளிக்கூடம் என்றால் என்ன என்று நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் பள்ளிக்கூடம் என்ற வார்த்தை எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி தற்போது காண்போம்.

பள்ளி என்ற சொல் கிரேக்கத்தின் (scholē) என்பதிலிருந்து பெறப்பட்டது. பின்னர் இது முதலில் “ஓய்வு” என்றும் “ஓய்வு நேரம் பயன்படுத்தப்படும் இடம்” என்றும் பொருள்பட்டது.

அதாவது ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகள் குருகுலத்திற்கு செல்ல முடியாது.

அதனால், சமண, பௌத்த மதங்கள் வளர்ந்தோங்கிய காலத்தில் துறவிகள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று தங்களது படுக்கை இருக்கும் பகுதிக்கு கல்வி கற்க குழந்தைகளை அனுப்புமாறு கேட்டுக்கொண்டனர்.

ஆகவே தமிழில் படுக்கும் இடத்தைத் தான் பள்ளி என்று அழைத்து வந்துள்ளனர். அவ்வாறு முதன் முதலாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகள் நாங்கள் பள்ளிக்குப் போகிறோம் என்று கூறி செல்வார்கள்.

அதாவது, சமண, பௌத்த படுகைகளுக்கு செல்கிறோம் என்று சொன்னதன் வழியாகவே தமிழில் கல்வி கற்கும் இடம் பள்ளி என்றானது என்று சொல்கிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால், பள்ளிகொள்ளுதல் என்றால் படுத்தல் என்று பொருள். சமணர் படுக்கும் குகைகள் பள்ளிகள் என்று அழைக்கப்பட்டன. அந்த இடத்தில் கல்வி கற்பிக்கப்பட்டதால் பள்ளி என்ற சொல் உருவானது.

தானிய குவியல் வேறு சொல்

பள்ளிக்கூடம் வேறு சொல்:

சரி இப்போது பள்ளிக்கூடம் என்பதற்கு வேறு சொல் என்ன என்று காண்போம்.

  • பள்ளி
  • வகுப்பறை
  • பாடசாலை
  • பள்ளியறை
  • பள்ளியெழுச்சி
  • பள்ளிவாசல்
  • பள்ளிமாடம்
  • பள்ளிக்கல்வி
  • பள்ளிக்கட்டு
  • பள்ளிகொள்
  • பள்ளியெழு
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> Learn
Advertisement