Sharbat Tamil Name
வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் சர்பத் என்பதன் தமிழ் பெயர் என்ன என்பதை விவரித்துள்ளோம். நாம் அனைவருமே சர்பத் குடித்து இருப்போம். இந்த வெயில் காலத்தில் அனைவரும் ஜில்லுனு ஒரு சர்பத் குடித்தால் நல்லா இருக்கும் என்று நினைப்போம். இந்த சர்பத்திற்கு தமிழ் பெயர் என்று ஒன்று இருக்கிறது. அதனை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
பொதுவாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்தையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கலந்து தான் பேசுகிறோம். அப்படி நாம் பேசும் சில வார்த்தைகளில் ஒரு சில வார்த்தைகளுக்கான ஆங்கில பெயர் என்ன என்பது தெரியாது. அதில் ஒன்றுதான் இந்த சர்பத். சர்பத் என்ற வார்த்தையை நாம் சுலபமாக கூறி விடுவோம். ஆனால், சர்பத் என்பதன் தமிழ் பெயர் என்ன என்று கேட்டால் நமக்கு சொல்ல தெரியாது. ஆகையால், இதுபோன்ற ஆங்கில பெயர்களுக்கான தமிழ் பெயர்களை நம் பொதுநலம் பதிவில் தினமும் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் சர்பத் என்பதற்கான தமிழ் பெயர் பற்றி கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
சர்பத் என்பதன் தமிழ் பெயர்:
சர்பத் என்றால் தமிழில் நறுமட்டு என்பது ஆகும். அதாவது, சர்ப்பத்தின் தமிழ் பெயர் நறுமட்டு ஆகும்.சர்பத் என்பது பாரசீக மொழி ஆகும். இது ஈரானிய மக்களின் பானம் ஆகும். சர்பத் காக்கேசியா, பால்கன் குடா நாடுகள் மற்றும் தெற்காசியா நாடுகளில் உள்ள மக்களால் அதிகமாக அருந்தப்படுகிறது. சர்பத் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் என்பதால் வெயில் காலங்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சர்பத் ஆனது, பழங்கள், பூ இதழ்கள், நன்னாரி வேர் மற்றும் சர்க்கரைப் பாகு ஆகியவற்றை தண்ணீரில் கலந்து தயாரிக்கப்படுகிறது.
முக்கியமாக, ரமலான் நோன்பு காலத்தில், நோன்பு திறக்கும் போது முஸ்லிம்களால் சர்பத் பானம் பிரபலமாக உட்கொள்ளப்படுகிறது. இதனை தான் பெரும்பாலும் நோன்பு திறக்கும்போது குடிப்பார்கள்.
சர்பத் முதன் முதலில், ஈரானில் (பாரசீகம்) தோன்றியதாக கூறப்படுகிறது. காலப்போக்கில் நவீன காலத்தில் சர்பத் தூள் என்று இங்கிலாந்தில் இன்னும் பிரபலமாக உள்ளது. அதன் பிறகு, 16-ஆம் நூற்றாண்டில் முகலாயர்கள் இந்தியாவிற்கு சர்பத்தை அறிமுகம் செய்தார்கள். சர்பத்தில் பல வகைகள் உள்ளது. சுவைக்கும் இடத்திற்கும் ஏற்ப பல்வேறு வகைகள் உள்ளது. தமிழ்நாட்டில் நன்னாரி சர்பத் பானம் என்றும் பிரபலம் அடைந்து வருகிறது.
ரோஸ் மில்க் என்பதன் தமிழ் பெயர் என்ன..?
இது போன்ற தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | Learn |