முடி கருமையாகவும் நீளமாகவும் வளர
பெண்கள் அனைவருமே நீளமான, அடர்த்தியான, கருமையான கூந்தலை பெறவே ஆசைப்படுவர். ஆனால், அவர்களை சுற்றி இருக்கும் தூசியும், மாசும், புறஊதா கதிர்களும், தூய்மையற்ற நீரும் அவர்களின் ஆரோக்கியமான கூந்தல் பாதிப்பு அடைய செய்கிறது. இருந்தாலும், கூந்தல் வேகமாக வளர வேண்டும் என்பதற்காக பெண்கள் பலவித ஷாம்புகளையும், எண்ணெய்களையும், கூந்தலுக்கான பிற தயாரிப்புக்களையும் பயன்படுத்துகின்றனர். இதை தவிர, பல பெண்கள் எண்ணெய் வைப்பது போன்ற பாரம்பரியமான விஷயங்களை செய்தும் கூந்தல் வளர்ச்சிக்கு முயற்சி செய்கின்றனர். ஆனால், நீங்கள் பயன்படுத்தும் பொருட்களில், எவை கூந்தலுக்கு ஊட்டச்சத்தினை அளிக்கும் என்பதை தான் பார்க்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் எந்த பொருள் சரும மற்றும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு உதவும் என்பதை ஆராய்ந்து உங்கள் முடி வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். அப்படி உங்கள் கூந்தலுக்கு வளர்ச்சியை தரக்கூடிய சில குறிப்புகள்:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
நீளமான முடி வளர்ச்சிக்கு சில பாட்டி வைத்தியம்
உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் முக்கியம் சத்தான உணவுகளை உண்ணுவது. நெல்லிக்காய், முருங்கை கீரை, வெந்தயம், கறிவேப்பிலை, பருப்பு வகைகள், வேர்க்கடலை, காய்கறிகள், பழங்கள் போன்றவை உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
1.செம்பருத்தி
முடி வளர்ச்சியை ஊக்குவிக்க செம்பருத்தி ஒரு சிறந்த மருந்தாகும். செம்பருத்தி இலை மற்றும் பூ என இரண்டும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். எனவே பூவின் சாற்றை நீரில் கலந்து தலைக்கு மஜாஜ் செய்யலாம் அல்லது செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தேய்த்துவிட்டு சிறிது நேரம் பிறகு குளித்தால் முடியின் வளர்ச்சி அதிகரிப்பதுடன் கருமையாகவும் காணப்படும்.
2. பூண்டு மற்றும் வெங்காயம்
பூண்டில் பொடுகுத் தொல்லையை போக்க கூடிய துத்தநாகச் சத்து உள்ளது. பொடுகு உச்சந்தலையில் உற்பத்தியாகும் ஹார்மோன்களை குறைக்கிறது. இதனால் பூண்டு மற்றும் வெங்காயத்தை தலையில் அரைத்து தேய்ப்பதால் முடி உதிர்வு குறையும்.
உங்கள் முடி வளர்ச்சியே அதிகரிக்க வெங்காயம் அல்லது பூண்டுடன் சிறிது துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து அதனை கற்றாழை ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தலையில் தேய்க்க வேண்டும். பிறகு சிறிது நேரத்தில் தலையை அலசினால் உங்கள் பொடுகு பிரச்சனை தீர்ந்து முடிவளர்ச்சியை அதிகரிக்கும்.
இயற்கையான முறையில் நரை முடியை போக்க வீட்டு வைத்தியம்….
3. முட்டை
முட்டைகளை கூந்தல்களில் பயன்படுத்துவதால் மென்மையை தலைமுடியை பெறலாம். முட்டையின் மஞ்சள் கருவை இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயுடன் கலந்து, உச்சந்தலையில் மசாஜ் செய்து விட்டு குறைந்தது 10 நிமிடங்கள் வரை உலர்த்திவிட்டு பிறகு தலை குளித்தல் உங்கள் முடி மென்மையாகவும் நீண்ட வளர்ச்சியையும் கொண்டு இருக்கும். முட்டையில் உள்ள வைட்டமின்கள் உங்கள் கூந்தலுக்கு சிறந்த வளர்ச்சியை தரும்.
இது போன்ற பல இயற்கை அழகு குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | இயற்கை அழகு குறிப்புகள் |