How to Remove Black Marks on Face in Tamil
ஹாய் பிரண்ட்ஸ்..! பெரும்பாலும் பெண்கள் முதல் ஆண்கள் என இருவருக்கும் வர கூடியது கரும்புள்ளிகள். முகத்தில் பருக்கள் வர தொடங்கி அடுத்தது கரும்புள்ளியாக மாறி முகத்தில் அழகை கெடுத்து விடுகிறது. அதே போல் முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளி வருவதற்கு நாமும் ஒரு காரணமாக இருக்கிறோம். முகத்தில் உள்ள கரும்புள்ளி நீங்குவதற்கு கடைகளில் விற்கும் சோப்புகள் மற்றும் கிரீம் வகைகளை பயன்படுத்தி வருவதனால் சருமத்தில் பாதிப்புகள் ஏற்படுகிறது. அதனால் இயற்கையான முறையில் வீட்டிலேயே பருக்கள் மற்றும் கரும்புள்ளியை நீக்குவதற்கு இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளதால் முகத்தில் ஏற்படும் பருக்கள், கரும்புள்ளியை முற்றிலுமாக நீக்குவதற்கு உதவுகிறது. உருளைக்கிழங்கு தோலை நீக்கி விட்டு சிறியதாக நறுக்கி, பருக்கள் மற்றும் கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
இல்லையென்றால் உருளைக்கிழங்கின் தோலை சீவி மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ளவும். அரைத்த உருளைக்கிழங்கை வடிக்கட்டி சாறை மட்டும் முகத்தில் தடவ வேண்டும்.
இதை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் கரும்புள்ளிகள் நீங்கி விடும்.
முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பளபளப்பாக தெரிய பாலுடன் இதை கலந்து தடவுங்க..!
கற்றாழை:
கற்றாழை நமது சருமத்தில் இருக்கும் பிரச்சனையை குறைக்க உதவுகிறது. கற்றாழையை நல்ல மருந்தாக பயன்படுத்துகிறார்கள். கற்றாழையை நீரில் அலசி விட்டு அதில் உள்ளே இருக்கும் ஜெல்லை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் சருமத்தில் இருக்கும் கரும்புள்ளியை மறைய செய்கிறது.
இதே போல் 15 நாள் செய்து வருவதனால் கரும்புள்ளி நீங்கி விடும்.
எலுமிச்சை சாறு:
எலுமிச்சை சாறில் சிட்ரிக் அமிலம் உள்ளதால் முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. எலுமிச்சை சாறில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளதால் நோய் தொற்றுகளை அழிக்க உதவும்.
எலுமிச்சை சாறு 4 டீஸ்புன் எடுத்து கொண்டு அதனுடன் தண்ணீரை கலந்து கொள்ளவும். இதில் சுத்தமான காட்டன் துணியை நனைத்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளி குறைய தொடங்கும். உங்களுடைய சருமம் வறட்சியாக இருந்தால் எலுமிச்சை சாறோடு ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தலாம்.
2 நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து முகம் அழகாக தோன்ற இந்த பேஸ் பேக்கை போடுங்க..!
சந்தனம்:
சந்தனம் சருமத்தில் இருக்கும் அழற்சியை குறைக்க உதவுகிறது. சந்தனப் பொடியை முகத்தில் பயன்படுத்துவதனால் முகம் பொலிவாக காணப்படும். முகம் வறட்சியாக இருந்தால் சந்தனத்துடன் சிறுது பால் கலந்து சருமத்தில் பயன்படுத்தினால் கரும்புள்ளி வேகமாக மறைய கூடும்.
மஞ்சள்:
தூய்மையான மஞ்சளை முகத்தில் தடவி வர சருமத்தில் எந்த விதமான பிரச்சனையும் ஏற்படாது. அதோடு சருமத்தை பளபளப்பாகவும், வயதான தோற்றத்தை மறைக்கவும் மஞ்சள் பெரிதும் உதவுகிறது. கரும்புள்ளி லேசாக தெரியும் போதே மஞ்சள் தூளை குழைத்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து சுத்தமான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
பால்:
பால் கரும்புள்ளியை மறைப்பதற்கு பெரிதும் உதவுகிறது. ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்து கொண்டு அதில் காட்டன் துணியை நனைத்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் விரைவில் கரும்புள்ளி மறைந்து விடும். இந்த பேக்கை இரண்டு அல்லது மூன்று முறை ட்ரை செய்ய வேண்டும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |