How to Turn Grey Hair Into Black Permanently Naturally
மனிதர்களை பொறுத்தவரை தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தினை மிகவும் ட்ரெண்டிங் ஆன காலம் என்று கூறுவார்கள். ஆனால் இத்தகைய ட்ரெண்டிங்கில் சில பிரச்சனைகளும் ஏற்படுகிறது. அதற்கு முதல் உதாரணம் என்றால் அது தலை முடி உதிர்வு, வழுக்கை விழுதல் மற்றும் நரை முடி பிரச்சனை இவற்றை எல்லாம் கூறலாம். ஏனென்றால் ஆண்களும் சரி, பெண்களும் சரி ட்ரெண்டிங்காக இருக்க வேண்டும் என்ற பெயரில் முடியினை சரியாக கவனிக்காமல் விட்டு விடுகிறார்கள். இதனால் நம்முடைய தலை முடியானது மிகவும் மோசமான சூழ்நிலைக்கு உண்டாகுகிறது. அதிலும் சிலருக்கு சிறு வயதிலேயே நரை முடி பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு தீர்வு என்ன தான் என்பது நிறைய நபர்களுக்கு ஒரு பெரிய குழப்பமாக உள்ளது. உங்களுடைய குழப்பத்திற்கு இன்றைய பதிவானது மிகவும் பயன் அளிக்கக்கூடிய வகையில் இருக்கும். ஏனென்றால் வீட்டில் இருக்கும் செம்பருத்தில் இலையுடன் சில பொருட்களை சேர்த்து இயற்கையான முறையில் ஹேர் டை தயார் செய்து முடியை கருப்பாக மாற்றுவது எப்படி என்று தெரிந்துகொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
நரை முடி கருப்பாக இயற்கை டை:
- செம்பருத்தி இலை- 1 கைப்பிடி அளவு
- கரிசலாங்கண்ணி- 1 கைப்பிடி அளவு
- நெல்லிக்காய் பொடி- 1 ஸ்பூன்
- மருதாணி பொடி- 2 ஸ்பூன்
- அவுரி பொடி- 5 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
- உப்பு- மிக சிறிதளவு
மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தினையும் ஹேர் டை தயார் செய்வதற்கு எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
7 நாட்களில் முகம் பளிச்சென்று மாற இயற்கையான முறையில் தயார் செய்த Home Remedies..
இயற்கை ஹேர் டை:
செம்பருத்தி இலை மற்றும் கரிசலாங்கண்ணி இரண்டும் நரை முடியினை கருப்பாக மாற்றுவதோடு மட்டுமில்லாமல் முடிக்கு சத்தினை அளித்து நன்றாக புது முடியினை வளரச் செய்கிறது. அதனால் செம்பருத்தி இலை மற்றும் கரிசலாங்கண்ணி இலையினை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் அலசி வைத்து கொள்ளுங்கள்.
இப்போது மிக்சி ஜாரில் அலசி வைத்துள்ள இரண்டு இலையினையும் சேர்த்து தண்ணீர் கொஞ்சம் விட்டு நன்றாக அரைத்து கொள்ளுங்கள். பின்பு ஒரு காட்டன் துணியில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டினை சேர்த்து சாறு பிழிந்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் பிழிந்து வைத்துள்ள சாற்றினை சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். அதாவது பாத்திரத்தில் உள்ள சாறு பாதி அளவிற்கு வரும் வரை கொதிக்க விடுங்கள்.
அடுத்து அடுப்பில் உள்ள சாற்றுடன் 1 ஸ்பூன் நெல்லிக்காய் பவுடர் மற்றும் 2 ஸ்பூன் மருதாணி பவுடர் இந்த இரண்டினையும் சேர்த்து நன்றாக 2 நிமிடம் வரை கலந்து கொண்டே இருங்கள். பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள்.
மறுநாள் காலையில் தயார் செய்து வைத்துள்ள ஹேர் டையுடன் 5 ஸ்பூன் அவுரி பொடி மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, மிக சிறிதளவு உப்பு மற்றும் சிறிதளவு இவை அனைத்தினையும் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள். உப்பு ஹேர் டைக்கு நிறத்தினை குடுக்க உதவும்.
ஹேர் டை பயன்படுத்தும் முறை:
ஹேர் டை அப்ளை செய்வதற்கு முன்பாக தலையை நன்றாக அலசி கொள்ளுங்கள். அதன் பிறகு தலை முடி காய்ந்த பிறகு தயார் செய்து வைத்துள்ள ஹேர் டையினை தலையில் அனைத்து இடங்களிலும் அப்ளை செய்து 1/2 மணி நேரம் கழித்து ஷாம்பு இல்லாமல் தலை குளித்து விடுங்கள்.
இவ்வாறு நீங்கள் வாரம் முறை என மூன்று மாதத்திற்கு அப்ளை செய்து வந்தால் முடி விரைவில் கருப்பாக மாறிவிடும்.
முகத்தை பளபளப்பாக மாற்றுவதற்கு கிரீம் அப்ளை செய்யமால் இதை பண்ணுங்க
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |