சருமம் பளபளப்பாக
அழகாக இருக்க வேண்டும் தான் அனைவரும் நினைக்கின்றனர். இதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தி முகத்தின் அழகை கெடுத்து கொள்கிறார்கள். யாராவது இந்த கிரீம் நல்லா இருக்கிறது என்று Refer செய்தால் அதையும் வாங்கி பயன்படுத்துகிறார்கள். கடையில் விற்கும் பொருளில் கெமிக்கல் நிறைந்துருப்பதால் பயன்படுத்தியவுடன் ரிசல்ட்டை கொடுத்தாலும், நாளடைவில் முகத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் தான் இயற்கையான முறையில் முகத்தை பளபளப்பாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
முகத்தை பளபளப்பாக மாற்ற அரிசி தண்ணீர்:
அரிசி ஊற வைத்த தண்ணீரிலிருந்து 4 தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய் 2 தேக்கரண்டி சேர்த்து பால் போல வரும் வரை கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவ வேண்டும். இதை செய்வதால் முகத்தில் உள்ள சுருக்கம், வெயிலால் ஏற்பட்ட கருமை போன்றவை நீங்கி விடும்.
வறண்ட சருமம் உள்ளவர்கள்:
ஒரு பவுலில் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், 1 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் 5 நிமிடத்திற்கு மசாஜ் செய்யவும். பிறகு முகத்தை கழுவ வேண்டும். கற்றாழையில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் இருப்பதால் முகத்தில் ஏற்படும் கிருமிகளை அகற்றி முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. தேன் இயற்கையாக முகத்தில் உள்ள பாக்ட்ரியாக்களை அழித்து முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்க உதவுகிறது.
கரும்புள்ளிகளை ஒரே நாள் இரவில் மறைய செய்யலாம்.. ரொம்ப சிம்பிள் இதை மட்டும் ட்ரை பண்ணுங்க |
ஆயில் ஸ்கின் உள்ளவர்கள்:
ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் ஒரு பவுலில் 1 தேக்கரண்டி தக்காளி சாறு, 1 தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி 5 நிமிடத்திற்கு மசாஜ் செய்யவும். அதன் பிறகு 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
சென்சிட்டிவ் ஸ்கின் உள்ளவர்கள்:
ஒரு பவுலில் 1 தேக்கரண்டி சர்க்கரை, 1 தேக்கரண்டி காய்ச்சாத பால் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் எழுந்து கழுவி விடவும்.
செம்பருத்தி பூ மட்டும் போதும்.. 3 நாட்களில் முடி 3 மடங்கு அதிகமாக வளரும் |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |