வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தொகைச் சொற்கள் பட்டியல் | Thogai Sorkal in Tamil..!

Updated On: November 21, 2025 5:41 PM
Follow Us:
thogai sorkal
---Advertisement---
Advertisement

தொகைச் சொற்கள் 25 | Thogai Sorkal in Tamil..!

தமிழ் என்ற சொல் மூன்று எழுத்துக்களை கொண்டிருந்தாலும் கூட அதில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சொற்கள் ஆனது நிறைந்து உள்ளது. இதுநாள் வரையிலும் தமிழில் உள்ள அனைத்தினையும் கற்று தேர்ந்த நபர்கள் இன்று யாரும் இடம் பெற முடியவில்லை. ஏனென்றால் அதில் நாம் கற்றதை விட கல்லாததே கடல் அளவு நிறைந்து இருக்கிறது. அதில் குறிப்பாக நாம் சொல்ல வேண்டும் என்றால் செய்யுள், உரைநடை, இலக்கண இலக்கியம், துணைப்பாடம் என இத்தகைய முறையில் தான் கற்று இருப்போம். இலக்கண இலக்கியத்தை பொறுத்தவரை ஒவ்வொன்றிலும் எண்ணற்ற வகைகளும், எடுத்துக்காட்டுகளுமே உள்ளது.

இதன் படி பார்க்கும் போது நாம் தொகைசொற்கள், மரபு சொற்கள் மற்றும் கலைச்சொற்கள் என இவற்றை பற்றி கேள்வி பட்டி இருப்போம், ஆனால் நினைவில் வைத்து இருக்க மாட்டோம். அதனால் இன்று தமிழில் உள்ள தொகைச்சொற்கள் என்னென்ன என்ற பட்டியலை பார்ப்போம் வாங்க..!

தொகைச் சொற்கள் என்றால் என்ன..?

ஒரு சொல்லுக்கான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட வகையினத்தை சுட்டிக் காட்டும் பொதுவான சொல்லே தொகை சொற்கள். மேலும் வரையறுக்கப்பட்ட சில சொற்களுக்கான சொல்லாகவும் இது அமைகிறது. எனவே இதுவே தொகை சொற்கள் எனப்படும்.

ஊ வரிசை சொற்கள்

தொகைச் சொற்கள்:

தொகைச் சொற்கள்

தொகை சொற்கள்  விரித்து எழுதுதல் 
இருசுடர் ஞாயிறு, திங்கள்
இருவினை நல்வினை, தீவினை
இருதிணை  உயர்திணை, அஃறிணை
இருமை  இம்மை, மறுமை
ஈரெச்சம்   வினையெச்சம், பெயரெச்சம்
முத்தமிழ்  இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்
முக்காலம் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்
முப்பால்  அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்
முக்கனி மா, பலா, வாழை
முந்நீர்  ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்
மூவிடம்   தன்மை,முன்னிலை, படர்க்கை
மூவேந்தர்  சேரன், சோழன், பாண்டியன்
நாற்றிசை  கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, நாற்பால்
நாற்குணம்  அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
நாற்படை  தேர், யானை, குதிரை, காலாள்
நான்மறை   ரிக், யசூர், சாம, அதர்வணம்
ஐம்பொறி  மெய், வாய், கண், காது, மூக்கு
ஐம்பால்  ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்.
ஐம்பூதங்கள்  நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு
ஐந்திணை  குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல்
ஐம்பெரும் காப்பியம்  சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி , வளையாபதி , குண்டலகேசி
ஐஞ்சிறு காப்பியம்  நீலகேசி, சூளாமணி, யசோதர காவியம், உதயகுமார காவியம், நாககுமாரகாவியம்
ஐம்பொன்  பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம்
ஐந்திலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
அறு பொழுது  வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்
அறுசுவை  இனிப்பு, கசப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு, கரிப்பு,
ஆறு காலம்  கார்காலம், குளிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம்
ஏழிசை  குரல், துத்தம், உழை, கைக்கிளை, இளி, விளரி, தாரம்.
ஏழு வண்ணம்  சிவப்பு, ஊதா, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம், ஆரஞ்சு
ஏழு பருவம்  பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்
எண்வகை மெய்ப்பாடு  நகை, அழுகை, இளிவரல, மருட்கை, அச்சம், வெகுளி, பெருமிதம், உவகை
நவதானியம்  நெல, உளுந்து, தினை, துவரை, அவரை, எள், கொள்ளு, கடலை,சோளம்
நவ மணிகள்  முத்து, பவளம், மாணிக்கம், வைரம், வைடூரியம், மரகதம், புட்பராகம், நீலம், கோமேதகம்.
நவ கிரகம் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, ராகு, கேது, சுக்கிரன்

மரபு சொற்கள் | Marabu Sorkal

தூய தமிழ் வார்த்தைகள்

தமிழ் எழுத்துக்கள் அட்டவணை PDF

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now