ஷாம்பு என்பதை தமிழில் எப்படி சொல்லலாம்..

Advertisement

Shampoo in Tamil Word

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சொற்கள் எல்லாம் தமிழில் தான் பேசுகிறோம் என்று நினைத்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் இல்லை..  நாம் ஆங்கில வார்தைகளை தான் பல வார்த்தைகளுக்கு பயன்படுத்துகிறோம். நம்முடைய தாய்மொழி தமிழை வைத்து கொண்டு தமிழ் வார்த்தைகள் தெரியாமல் இருக்க கூடாது. இந்த வார்த்தைகளானது அரசு பொதுத்தேர்வுகளில் கேட்படுகிறது. அதனால் நாம் தமிழ் என்று நினைத்து பேசும் ஆங்கில வார்த்தைகளுக்கான அர்த்தங்களை அறிந்து வைத்திருப்பது அவசியமானது.

நம்முடைய பதிவில் தினந்தோறும் பல்வேறு வகையான வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் மற்றும் தமிழ் வார்த்தைகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஷாம்பூ என்பதற்கான தமிழ் வார்த்தையை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

ஷாம்பு என்றால் என்ன.?

நம்முடைய முன்னோர்களின் காலத்தில் தலையை சுத்தம் செய்வதற்கு சீயக்காய் பயன்படுத்தினார்கள். கடையில் விற்கப்படும் சீயக்காய் அல்லது வீட்டிலேயே தயாரித்த சீயக்காயை பயன்படுத்தி தலை தேய்த்து குளிப்பார்கள்.

ஆனால் இன்றைய காலத்தில் யாரும் தலைக்கு சீயக்காய் பயன்படுத்துவதில்லை, ஏனென்றால் அதற்கு பதிலாக ஷாம்புவை பயன்படுத்துகிறார்கள். இந்த ஷாம்பு ஆனது கெமிக்கல் நிறைந்த பொருட்களால் தயாரிக்கப்பட்ட ஒரு திரவமாக இருக்கிறது.

இந்த ஷாம்புவை தலையில் தண்ணீரை எடுத்து ஊற்றிய பிறகு அதன் பிறகு இந்த ஷாம்புவை பயன்படுத்தி தலை தேய்த்து குளிப்பதன் மூலம் தலையில் உள்ள அழுக்கு நீங்கி பிரஷாக இருக்கிறது.

மேலும் இந்த ஷாம்பு ஆனது தலைமுடியினருக்கு ஏற்றது போல இருக்கிறது, அது போல தலை பளபளப்பாக இருக்க, பொடுகு நீங்க, பேன் மற்றும் ஈர் போன்றவை நீங்குவதற்கு தனித்தனியாக ஷாம்பு இருக்கிறது.

இதனை இதுநாள் வரையிலும் ஷாம்பு என்று தான் அழைத்திருக்கிறோம். இது தமிழ் வார்த்தை என்று நினைத்திருக்கிறீர்கள் என்றால் அது தவறு, ஏனென்றால் இவை தமிழ் வார்த்தை கிடையாது. ஏனென்றால் இவை ஆங்கில வார்த்தை. அதனால் இதனை தமிழில் எப்படி அழைக்கலாம் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

ஷாம்பு தமிழ் வார்த்தை:

  • சீயநெய்
  • நுரைமக் கழுவி
  • முடிக்கழுவி
  • சிகைகழுவி
  • தலை கழுவ உதவும் நீர்மம்
  • முடியை சுத்தம் செய்யும் பொருள்

மேல் கூறப்பட்டுள்ள வார்த்தைகளால் ஷாம்பு என்பதை தமிழில் அழைக்கலாம்.

Mild Shampoo Meaning in Tamil:

பொதுவாக ஷாம்பு என்றாலே கெமிக்கல் நிறைந்ததாக இருக்கும், ஆனால் மைல்டு ஷாம்பு என்பது குறைவான கெமிக்கல் கலந்ததாக இருக்கும்.இதனை தான் மைல்டு ஷாம்பு என்று கூறுகிறோம். இந்த ஷாம்புவை பயன்படுத்தும் போது முடியை சேதப்படுத்தாமல் ஆரோக்கியமாக வளர்வதற்கு உதவுகிறது.

ஒரு மனிதனுக்கு Liabilities அதிகம் இருக்கும்..! 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

 

Advertisement