வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

700 சதுரடியில் மாடி வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவாகும்.! மற்றும் தேவையான பொருட்கள்..

Updated On: January 12, 2026 6:26 PM
Follow Us:
700 sq ft house construction cost in tamil
---Advertisement---
Advertisement

700 sq ft House Construction Cost

பெரும்பாலானவர்களுக்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற கனவு இருக்கிறது. இதற்கான பணத்தை சேமித்து வைத்து வீட்டை கட்ட ஆரமிக்கின்றனர். ஆனால் வீட்டை கட்டி கொண்டிருக்கும் போதே செலவு அதிகமாக வந்து கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். அதனால் வீட்டை கட்டுவதற்கு முன்பே நீங்கள் எத்தனை சதுரடியில் வீடு கட்ட போகிறீர்களா அதற்கான செலவுகளை தெரிந்து கொண்டால் அதற்கேற்றபடி பணத்தை சேமித்து வைத்து கொள்ளலாம். உங்களுக்கு உதவும் வகையில் 700 சதுரடியில் வீடு கட்டுவதற்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் அதற்கான செலவுகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

700 சதுர அடி வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவு ஆகும்:

சிமெண்ட் வாங்குவதற்கான செலவு:

700 சதுர அடி வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவு ஆகும்

700 சதுர அடி வீடு கட்டுவதற்கு சிமெண்ட் வாங்குவதற்கு 400மூட்டைகள் தேவைப்படும். ஒரு மூட்டையின் விலை 430 ரூபாய் என்றால் 400 மூட்டையின் விலை 1,72,000 ரூபாய் செலவு ஆகும்.

கம்பி வாங்குவதற்கான செலவுகள்:

700 சதுர அடி வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவு ஆகும்

கம்பி மொத்தமாக 3 1/2 டன் தேவைப்படும். ஒரு டன் கம்பியின் விலை 42,500 ரூபாய் என்றால் 3 1/2 டன் கம்பியின் விலையானது 1,27,500 ரூபாய் கம்பி வாங்குவதற்கு செலவாகும். கம்பியின் தரத்தை பொறுத்து விளையும் மாறுபடும்.

1200 சதுர அடியில் வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவுகள் ஆகும்..! அதற்கு தேவையான பொருட்கள்..!

மணல் வாங்குவதற்கான செலவு:

700 சதுர அடி வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவு ஆகும்

M சண்ட் மணலானது 12 யூனிட் தேவைப்படும். ஒரு யூனிட் விலையானது 4,000 ரூபாய் என்றால், 48,000 ரூபாய் செலவாகும்.

P சாண்ட் மணலானது 5 யூனிட் தேவைப்படுகிறது, இதன் ஒரு யூனிட் விலையானது 5000 ரூபாய் என்றால் 5 யூனிட் விலையானது 25,000 ரூபாய் வேண்டும்.

700 சதுர அடிக்கு எவ்வளவு ஜல்லி தேவைப்படும்:

700 சதுர அடி வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவு ஆகும்

20 mm aggregate 7 யூனிட் தேவைப்படும். ஒரு யூனிட் விலை 3,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்போ 7 யூனிட் விலை 24,500 ரூபாய்.

40 mm aggregate 3 1/2  யூனிட் தேவைப்படும். ஒரு யூனிட் விலை 2800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்போ 3 1/2 யூனிட் விலை 9,400 ரூபாய்

செங்கல் எவ்வளவு தேவைப்படும்:

700 சதுர அடி வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவு ஆகும்

700 சதுர அடிக்கு 15,000 கல் தேவைப்படும். ஒரு கல்லின் விலையானது 7.3 ரூபாய் என்றால் 1,10,000  ரூபாய் செலவாகும்.

  • மண் தோண்டுதல் மற்றும் சமப்படுத்துதல் – ரூ.10,000 – 15,000
  • அடித்தளம் போடுவதறகு ரூ.50,000 – 80,000
  • செங்கல், சிமெண்ட், மணல் ரூ.1,00,000 – 1,50,000
  • Roofing வேலை – RCC சிமெண்ட் கட்டுமானம் – ரூ. 1,20,000 – 1,50,000
  • உரோமைல் கூரை இருந்தால் – ரூ. 60,000 – 80,000
  • ஜன்னல் மற்றும் கதவுகள் மரம் மற்றும் UPVC ரூ. 40,000 – 60,000
  • மின் வேலை – ரூ. 25,000 – 40,000
  • நீர் குழாய் பொருட்கள் – ரூ. 30,000 – 50,000
  • சுவர் வேலை – ரூ. 50,000 – 80,000
  • நிறைவு வேலை – ரூ. 30,000 – 50,000

மேல் கூறப்பட்ள்ள பொருட்கள் மட்டும் வாங்குவதற்கு மொத்த தொகையாக தோராயமாக 7,02,900 ரூபாய் தேவைப்படும்.

மேல் கூறப்பட்டுள்ள பொருட்கள் வீடு கட்டுவதற்கு முக்கியமான தேவைப்படும் பொருட்களாக இருக்கிறது. இது இல்லாமல் டைல்ஸ் மற்றும் மின்சாரம் இழுப்பதற்கான செலவு, பைப் இழுப்பதற்கான செலவு என இருக்கிறது. ஆக இந்த செலவுகளை வைத்து பார்க்கும் போது 700 சதுர அடியில் வீடு கட்ட தோராயமாக 12 லட்சம்  தேவைப்படும். இந்த தொகையை விட அதிகமாகவும் ஆகலாம், குறைவாகவும் ஆகலாம்.

500 சதுர அடியில் வீடு கட்ட தேவைப்படும் பொருட்கள் மற்றும் செலவுகள் பற்றி தெரியுமா 

மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 Measurement
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now