500 சதுர அடி வீடு கட்ட ஆகும் செலவு | 500 sq ft House Construction Cost
சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் ஆசையாக இருக்கிறது. பணம் சேமித்து வைத்திருப்பவரகள் வீடு கட்ட ஆரம்பித்துவிடுவார்கள். அதுவே பணம் இல்லாதவர்கள் வீடு கட்ட என்னென்ன பொருட்கள் வேண்டும் அதை வாங்குவதற்கான செலவுகள் ஆகும் என்பதையெல்லாம் கணக்கு போடுவார்கள். வீடு கட்ட இவ்வ்ளவு இவ்வளவு ஆகும் என்று தெரிந்தால் அதற்கேற்றபடி பணத்தை சேமித்து வைக்கலாம் அல்லவா.! அந்த வகையில் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் 500 சதுர அடி வீடு கட்ட எவ்வளவு பொருட்கள் தேவைப்படும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
500 சதுர அடி வீடு எவ்வளவு பொருட்கள் தேவைப்படும்:
- 500 சதுர அடி வீடு கட்டுவதற்கு சிமெண்ட் 200 மூட்டை தேவைப்படும். ஒரு மூட்டை 400 ரூபாய் என்றால் 200 முட்டையின் விலை 80,000 ரூபாய் தேவைப்படும்.
- அடுத்து ஸ்டீல் 2 1/2 டன் தேவைப்படும். ஒரு டன் 75,000 ரூபாய் அப்போ 2 1/2 டன் ஸ்டீல் விலை 1,87,500 ரூபாய் ஆகும்.
- M சாண்ட் 10 யூனிட் தேவைப்படும். ஒரு யூனிட் 3,800 ரூபாய் என்றால் 10 யூனிட் மணல் வாங்குவதற்கு 38,000 ரூபாய் தேவைப்படும்.
- P சாண்ட் 3 யூனிட் தேவைப்படும். ஒரு யூனிட் 5000 ரூபாய் என்றால் 3 யூனிட் விலை 15,000 ரூபாய் தேவைப்படும்.
- 20 mm aggregate 5 யூனிட் தேவைப்படும். ஒரு யூனிட் விலை 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்போ 5 யூனிட் விலை 15,000 ரூபாய்.
- 40 mm aggregate 2 யூனிட் வேண்டும். ஒரு யூனிட் விலை 2,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்போ 2 யூனிட் விலை 5,600 ரூபாய்.
- செங்கல் 11,000 கல் தேவைப்படும். ஒரு கல் 11 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அப்போ 11000 கல்லின் விலை 1,21,000 ரூபாய் தேவைப்படும்.
- டைல்ஸ் 600 தேவைப்படும். இதற்காக 33,000 ரூபாய் தேவைப்படும்.
- மேல் கூறப்பட்ள்ள பொருட்கள் மட்டும் வாங்குவதற்கு மொத்த தொகையாக தோராயமாக 4,95,100 ரூபாய் தேவைப்படும்.
- மேல் கூறப்பட்டுள்ளவை முக்கியமாக வாங்க கூடிய செலவுகள் மட்டும் தான் பதிவிட்டுள்ளோம். இது இல்லாமல் ஆட்கள் கூலி, கதவு, ஜன்னல், பெயிண்ட் அடிப்பதற்கான செலவு, பைப் போடுவதற்கான செலவுகள் எல்லாம் இருக்கின்றது. இந்த செலவுகள் மேல் கூறப்பட்டுள்ள செலவுகள் என சேர்த்து தோராயமாக 500 சதுர அடி வீடு கட்டுவதற்கு 8 லட்சம் தேவைப்படும்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> |
பொதுநலம்.com |