homemade neem soap ingredients in tamil | வேப்பிலை சோப் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள்
நம் முன்னோர்கள் காலத்தில் தான் சோப் போடாமல் குளித்தார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் பல வகையான சோப்கள் சந்தையில் விற்கப்படுகின்றன. ஒரு குடும்பத்தில் 5 பேர் இருக்கின்றார்கள் என்றால் 5 வகையான சோப்கள் பயன்படுத்திக்கின்றனர். கடையில் விற்கும் சோப்களில் கெமிக்கல் கலந்திருக்கும். அதனால் வீட்டிலேயே சோப்களை தயாரித்து பயன்படுத்தினால் ஆரோக்கியத்திற்கும் நல்லது, காசும் அதிகமாக செலவாகாது. அதனால் இந்த பதிவில் ஹமாம் சோப் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
1 வேப்பிலை சோப் தயாரிக்க தேவையான பொருட்கள்:
- கிளிசரின் சோப் பேஸ் – 250 கிராம்
- வேப்ப இலை – 25 முதல் 30 இலைகள்
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்.
- வைட்டமின் ஈ எண்ணெய் – 2 முதல் 3 காப்ஸ்யூல்
- வேப்ப எண்ணெய் – 4 சொட்டு
சோப் தயாரிப்பது எப்படி.?
முதலில் வேப்பிலை எடுத்து மிக்சியில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். தண்ணீர் சேர்த்து மென்மையாக்க வேண்டாம்.
வேப்ப இலையுடன் மஞ்சள் தூள் சேர்க்கவும். இப்போது, வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை உடைத்து, கலவையில் கரைசலை சேர்க்கவும்.
கலவையில் ஆர்கானிக் வேப்பெண்ணெய் சேர்க்கவும்.
இதை டபுள் பாய்லிங் முறையில் வேக வைக்க வேண்டும். அதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விடவும், அதன் உள்பகுதியில் நறுக்கி கலந்து சோப்பை வைத்து உருக விடவும். உருகியதும் அரைத்து வைத்த வேப்பிலை சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். அதில் வைட்டமின் ஈ மாத்திரையை ஒன்று சேர்த்து 2 நிமிடம் அடுப்பில் வைத்து கலந்து விடவும்.
பிறகு அடுப்பில் இருந்து இறக்கி ஆறியதும், ஒரு வட்ட உள்ள பாக்ஸில் சேர்த்து குளிர்சாதன பெட்டியில் வைத்து 4 மணி நேரம் வைக்கவும். பிறகு பாக்சில் இருந்து பார்த்தால் சோப் தயார்..!
மேலும் இதுபோன்ற பதிவுகளை பற்றி தெரிந்துகொள்ள 👉👉 | Measurement |