Palm Tree Uses in Tamil
நாம் தினமும் நிறைய வகையான மரங்களை பார்த்து இருப்போம். ஆனால் அந்த மரங்களை பற்றி எல்லாம் நமக்கு தெளிவாக தெரியுமா என்று கேட்டால் அதற்கான பதில் இல்லை என்று தான் இருக்கும். ஒரு மரத்தை பற்றி தெரிந்துகொள்வதை விட ஒரு சில மரத்தில் மிகவும் சாத்தியமான சில பயன்கள் இருக்கும். அது என்னவென்றால் ஒரு மரம் என்றால் அதில் கட்டாயமாக பூ, காய், இலை மற்றும் பழம் என நிறைய இருக்கும். அப்படி இருந்தாலும் கூட அவை அனைத்தும் பயனளிக்கும் வகையில் இருக்காது. ஆனால் இவற்றிற்கு எதிர்மாறாக Multi-Purpose கொண்ட சில மரங்கள் உள்ளது. அத்தகைய மரங்களில் ஒன்றான பனை மரத்தை பற்றி தான் இன்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
இதையும் படியுங்கள்⇒ உங்களுடைய வீட்டில் வாழைமரம் இருக்கா..! அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!
பனை மரம்:
பனை மரத்தினை யாரும் பயிர் செய்ய வேண்டியது இல்லை. ஏனென்றால் அது தானாகவே வளர்ந்து விடும். இத்தகைய பனை மரங்கள் வளர்ந்து அதற்கான பருவத்தினை பெறுவதற்கு 15 வருடங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.
மேலும் இது 30 அடி உயரத்திலும், 30 முதல் 40 வரையிலான விசிறி போன்ற ஓலைகளும் கொண்டிருக்கும்.
இத்தகைய பனை மரத்தில் மொத்தம் 34 வகைகள் உள்ளது.
- ஆண் பனை
- பெண் பனை
- கூந்தப் பனை
- தாளிப் பனை
- குமுதிப்பனை
- சாற்றுப்பனை
- ஈச்சம்பனை
- ஈழப்பனை
- சீமைப்பனை
- ஆதம்பனை
- திப்பிலிப்பனை
- உடலற்பனை
- கிச்சிலிப்பனை
- குடைப்பனை
- இளம்பனை
- கூறைப்பனை
- இடுக்குப்பனை
- தாதம்பனை
- காந்தம்பனை
- பாக்குப்பனை
- ஈரம்பனை
- சீனப்பனை
- குண்டுப்பனை
- அலாம்பனை
- கொண்டைப்பனை
- ஏரிலைப்பனை
- ஏசறுப்பனை
- காட்டுப்பனை
- கதலிப்பனை
- வலியப்பனை
- வாதப்பனை
- அலகுப்பனை
- நிலப்பனை
- சனம்பனை
பனை நுங்கு:
மற்ற மரங்களில் உள்ள பழங்களில் கிடைக்காத நிறைய சத்து இந்த பனை நுங்கில் உள்ளது. கோடைகாலத்தில் ஏற்படும் உடல் சூட்டினை குறைக்கவும், வயிறு வலி மற்றும் வாய்ப்புண், வியர்க்குரு போன்றறையினை சரிசெய்ய உதவுகிறது.
பனை வெல்லம்:
பனை மரத்தில் இருந்து கிடைக்க கூடிய பனை வெல்லமானது உடலின் இரத்த சர்க்கரையின் அளவினை குறைக்கவும், மலச்சிக்கலை பிரச்சனையை சரிசெய்யவும் மற்றும் உடல் எடை குறைவு என எண்ணற்ற நன்மைகளை பனை வெல்லம் அளிக்கிறது.
பனங்கற்கண்டு:
- கண்பார்வையினை அதிகரித்தல்
- சிறுநீரத்தில் கல் வராமல் தடுத்தல்
- உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரித்தல்
- ஞாபக சக்தியினை அதிகரித்தல்
- இருமல் மற்றும் சளி பிரச்சனையை சரி செய்தல்
பனை மரத்தில் இருந்து தயார் செய்யக்கூடிய சாதாரணமான பனங்கற்கண்டு நிறைய வகையான பிரச்சனைக்கு ஒரு தீர்வினை அளிக்கிறது.
உங்கள் வீட்டில் மாமரம் இருக்கா..! அப்போ அதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் |
பனங்கிழங்கு நன்மைகள்:
உடலில் ஏற்படும் உஷ்ணத்தை குறைப்பதற்கு ஒரு மிக சிறந்த பலனை பனங்கிழங்கு அளிக்கிறது. உடலில் அதிகப்படியான உஷ்ணம் இருக்கும் போது பனங்கிழங்கு சாப்பிட்டால் போது உடல் சூடு முழுவதும் குறைந்து விடும்.
பனை ஓலை:
பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய ஒலையானது அதிக அளவிலான குளிர்ச்சியினை அளிக்கிறது. அது மட்டும் இல்லாமல் இது தென்னை கீற்றில் இருக்கும் குளிர்ச்சியினை விட அதிகமான குளிர்ச்சியினை அளிக்கிறது என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் இத்தகைய ஓலைகளை கொண்டு கட்டுமான பொருட்களையும் தயாரிக்க முடியும்.
பனங்கள்ளு நன்மைகள்:
- உடல் வலிமை பெற
- வயிற்று மற்றும் வாய் புண் குணமாக
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |