வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்..பொங்கலுக்கு ஊருக்கு செல்ல முடியுமா.!

Updated On: January 9, 2024 10:45 AM
Follow Us:
bus strike in tamilnadu in tamil
---Advertisement---
Advertisement

Bus Strike in Tamilnadu in Tamil

பொதுவாக பண்டிகை நாட்கள் என்றாலே வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு வந்து பண்டிகையை கொண்டாடுவார்கள். இந்த நேரத்தில் பேருந்து நிலையம் எல்லாம் கூட்டமாக இருக்கும். மேலும் பேருந்துகளும் கூட்டமாக தான் இருக்கும்.

ஊருக்கு செல்வதற்கு பேருந்துகளை புக் செய்து போலாம் என்ற நிலையில் இருக்கும் போது போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனை பற்றிய செய்திகளை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்:

போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக கூறியுள்ளனர். இந்த போராட்டம் எதற்காக என்றால் போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க வேண்டும், கருணை அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 9ஆம் தேதி (நாளை) தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளது.

இவர்களுக்கெல்லாம் பொங்கல் பரிசு ரூ.1000 கிடையாதா? அதிர்ச்சி தகவல்!!!

தொழிற்சங்கங்கள் கூறுகின்றதாவது, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.6000 அகவிலைப்படி கடந்த 8 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இந்த முடிவுகள் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அது தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் பேருந்துகள் இயங்காது, மேலும் நீண்ட தூரம் பயணம் செய்யும் பேருந்துகள் காலை பயணிகளை இறக்கி விட்ட பிறகு போராட்டத்தில் ஈடுபடும் என்று கூறியுள்ளார்கள்.

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் இருப்பதால் பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்லும் பயணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.  இதனிடையே, அமைச்சா் சிவசங்கா் கூறுகையில், “தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டாலும் பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மக்கள் எந்தவொரு சிரமமும் இல்லாமல் பயணம் செய்ய ஏற்பாடு செய்து தரப்படும். தொமுச உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களைச் சோ்ந்த போக்குவரத்து ஊழியா்களை வைத்து நாளை வழக்கம் போல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் பற்றி பொங்கலுக்கு பிறகு முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் தேதி

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை