வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இவர்களுக்கெல்லாம் பொங்கல் பரிசு ரூ.1000 கிடையாதா? அதிர்ச்சி தகவல்!!!

Updated On: January 5, 2024 8:24 PM
Follow Us:
All these people will not get Pongal gift of 1000 rupees
---Advertisement---
Advertisement

யாருக்கெல்லாம் பொங்கல் பரிசு 1000 ரூபாய் கிடையாது!!! – All these people will not get Pongal gift of 1000 rupees

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும். இந்த நன்னாள் அனைத்துத் தொழில்களுக்கும், ஏன், மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2-ம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் வரும் தை ஒன்றாம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் யாருக்கெல்லாம் 1000 ரூபாய் ரொக்கம் கிடைக்கும், யாருக்கெல்லாம் 1000 ரூபாய் கிடைக்காது என்பதை இப்போது பார்ப்போம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2024-ம் ஆண்டில் நிகழும் கிரகணங்கள்.. நம்மால் பார்க்க முடியாது..

யாருக்கெல்லாம் 1000 ரூபாய் ரொக்கம் கிடைக்கும், யாருக்கெல்லாம் 1000 ரூபாய் கிடைக்காது?

மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

மேலும் ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை இம்மாதம் பொங்கல் திருநாள் முன்னதாக அதாவது வரும் ஜனவரி 10-ஆம் தேதி அன்றே, மகளிர் உரிமைத் தொகை பெற்று வரும் 1.15 கோடி மகளிரின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் தேதி

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை