2024-ம் ஆண்டில் நிகழும் கிரகணங்கள்.. நம்மால் பார்க்க முடியாது..

Advertisement

2024 Kiraganam Date and Time

நாம் இப்பொழுது 2024-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துவிட்டோம், இந்த ஆண்டு நிகழ  கிரகங்களை பற்றி தான் நாம் இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம். இந்த ஆண்டு மொத்தமாக நான்கு கிரகங்கள் நிகழ இருக்கிறது. இந்த நான்கு கிரங்களையும் நாம் எங்கு காண முடியும்.

குறிப்பாக இந்தியாவில் இந்த நான்கு கிரகங்களும் தெரியுமா? அதனை மக்கள் பார்க்க முடியும். அதேபோல் தமிழ் நாட்டில் இந்த கிரகங்களை நாம் பார்க்க முடியுமா? எந்த நேரத்தில் கிரகங்கள் நிகழ இறுகியது. என்பது குறித்த முழுமையான விளக்கங்களை இப்பொழுது நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

எங்களுடைய டெலிகிராம் சேனலை பின் தொடர்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 t.me/pothunalam

சூரிய மற்றும் சந்திர கிரகணம் 2024: தேதி மற்றும் நேரம்:

2024 Kiraganam Date and Time

சந்திர கிரகணம் 2024 தேதி மற்றும் நேரம் – chandra grahan 2024 in india date and time in tamil:

முதல் சந்திர கிரகணம் முழு நிலவு நாளில் அதாவது மார்ச் 25, 2024 அன்று நிகழ உள்ளது, அது  காலை 10:23 மணிக்கு தொடங்கி மதியம் 03:02 மணிக்கு முடிவடையும் . இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் காணமுடியாது, ஏனெனில் இதனுடைய நிகழ்வு பகல் நேரத்தில் நடைபெறுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் தேதி

பகுதி சந்திர கிரகணம் 2024 தேதி மற்றும் நேரம் – santhira kiraganam 2024 date and time in tamil:

மற்றொரு சந்திர கிரகணம் செப்டம்பர் மாதம் முழு நிலவு நாளில் அதாவது  செப்டம்பர் 18, 2024 அன்று விழும். இந்த சந்திர கிரகணம்  காலை 07:43 மணிக்கு தொடங்கி 08:46 மணிக்கு முடிவடையும்.  இருப்பினும் இந்த சந்திர கிரகணத்தையும் நாம் இந்தியாவில் காண முடியாது ஏன் என்றால் இதுவும் பகல் நேரத்தில் தான் நிகழ இருக்கிறது.

முழு சூரிய கிரகணம் 2024 தேதி மற்றும் நேரம் – suriya kiraganam 2024 date and time in tamil:

முதல் முழு சூரிய கிரகணம்  ஏப்ரல் 8, 2024 அன்று நிகழும். இது ஏப்ரல் 8 ஆம் தேதி பிற்பகல் அதாவது  நள்ளிரவு 21:12 மணிக்குத் தொடங்கி, ஏப்ரல் 9, 2024 அன்று அதிகாலை 02:22 மணிக்கு முடிவடையும்.  இந்த முழு சூரிய கிரகந்தையும் இந்தியாவில் பார்க்க முடியாது. காரணம் இந்த முழு சூரிய கிரகணம் இரவில் நிகழ இருக்கிறது.

வளைய சூரிய கிரகணம் 2024 தேதி மற்றும் நேரம்:

இது 2024 ஆம் ஆண்டில் மற்றொரு சூரிய கிரகணமாக இந்த வளைய சூரிய கிரகணம் இருக்கும். இந்த வளைய சூரிய கிரகணத்தை இந்தியாவில் காணப்படாது. இது  அக்டோபர் 2 ஆம் தேதி பிற்பகல் 21:13 மணிக்குத் தொடங்கி, அக்டோபர் 3, 2024 அன்று அதிகாலை 03:17 மணிக்கு முடிவடையும் . இந்த வளைய சூரிய கிரகணம்  7 நிமிடங்கள் மற்றும் 21 வினாடிகள் நீடிக்கும் மற்றும் அதன் உச்சத்தில், சூரியனின்  93 சதவீதம்  மூடப்பட்டிருக்கும், இதன் காரணமாக பூமியில் இருந்து ஒரு பளபளப்பான வளையம் போல் தோன்றும். இரவில் நிகழவுள்ள வளைய சூரிய கிரகணம் பார்ப்பவர்களின் கண்களுக்கு தென்படாது.

இந்த ஆண்டு தோன்றும் நான்கு கிரகங்களையும் இந்தியாவில் காணமுடியாது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தஞ்சையிலிருந்து விமான சேவை தொடக்கம்..

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement