இனி மருந்து சீட்டில் கேப்பிட்டல் எழுத்தில் தான் எழுதணும்
இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் உடல்நல குறைபாடு ஏற்பட்டால் மருத்துவரை நாடி தான் செல்கின்றோம். நமக்கு என்ன செய்கிறது என்று மருத்துவர்களிடம் கூறினால் அவர்களுக்கு தகுந்தது போல தான் மருந்து, மாத்திரைகளை தான் எழுதி தருவார்கள். அந்த சீட்டை பார்த்தால் நமக்கு ஒன்றும் புரியாது. அப்படி கிறுக்கி வைத்திருப்பார்கள். இதில் சுகாதார துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது என்ன மாற்றம் என்று இந்த முழு பதிவை படித்து அறிந்து கொள்ளுங்கள்.
Doctors to Write Prescription in Capital Letters:
மருத்துவர்கள் எழுதும் கையெழுத்து ஆனது மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று நீண்ட நாட்களாக இருக்கிறது. இந்த கையெழுத்தை நாம் எவ்வளவு தான் படித்திருந்தாலும் அதனை புரிந்து கொள்ள முடியவில்லை. மனிதர்களுக்கு மட்டுமில்லை மெடிக்களில் வேலை பார்க்கும் மருத்தாளருக்கும் புரிவதில்லை.
சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2024-25 (முழு விவரங்கள்)
மருத்துவர்கள் எழுதி தரும் எழுத்தானது கிறுக்கி வைத்திருப்பார்கள். இவர்கள் எழுதி தரும் மருந்து, மாத்திரைகள் மருந்தாளருக்கு புரிந்து சரியாக எடுத்து கொடுத்தால் தான் நோயாளிகளுக்கு நோய்கள் சரியாகும். ஒருவேளை தவறாக எடுத்து கொடுத்து விட்டால் அதனால் பக்க விளைவுகள் அதிகமாகவிடும். இதனால் மக்கள் மற்றும் மருந்தாளர்கள் மருத்துவர்கள் மருந்து சீட்டில் எழுதும் எழுத்தானது புரியும் படி இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரொம்ப நாட்களாக கேட்டார்கள்.
இந்த நிலையானது அதிகமாகி ஒடிசா உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் மருத்துவர்கள் எழுத்தோய் தரும் மருந்துகள் புரியும் படி இருக்க வேண்டும். இதற்கான செயல்பாட்டை தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவு கொடுத்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் தேசிய மருத்துவ கவுன்சில் ஆனது இதற்கான நடவடிக்கையை எடுத்தது. இதனால் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு புரியும் வகையில் மருந்துகளின் பெயர்களை எழுதி தர வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இதனை அடுத்து தமிழ்நாட்டிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு எழுதி தரும் மருந்து சீட்டில் உள்ள எழுத்தானது கேப்பிட்டல் எழுத்தில, நோயாளிகளிகளுக்கு புரியும் வகையில் இருக்க வேண்டும் என்று தமிழக சுகாதார துறை கூறியுள்ளது.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |