Driving Licence எடுக்கப் போறீங்களா.. அரசு கொண்டுவந்துள்ள புதிய திட்டம்

Advertisement

Driving License Government Fees

இன்றைய காலத்தில் வீட்டிற்கு வீட்டில் பைக், கார் என இருக்கிறது. இதற்கு முதலில் ஓட்ட தெரிந்திருக்கனும், அடுத்து அதற்கான லைசென்ஸ் வைத்திருப்பது அவசியமானது. ஆனால் பலரும் லைசென்ஸ் இல்லாமல் வண்டிகளை ஓட்டுகின்றனர், இதனை காவல் துறை அதிகாரி கண்டுபிடித்து அதற்கான கட்டணத்தை வசூலிக்கின்றனர். லைசென்ஸ் வாங்க வேண்டும் என்றால் ஏதாவது ஒரு சென்டரில் பணத்தை செலுத்தி பெறுகின்றனர். இதற்காக அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அதனை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..

டிரைவிங் லைசென்ஸ் எடுக்க அரசு கொண்டு வந்துள்ள திட்டம்:

இதுவரையிலும் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு இரண்டு வகையான முறைகள் கடைப்பைடிக்கப்பட்டு வருகிறது. ஒன்று ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் மூலமாக பயிற்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்து பெறுவது, மற்றொன்று தானாக விண்ணப்பித்து ஓட்டுநர் உரிமம் பெரும் முறைகள் இருக்கிறது.

இதில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் மூலமாக உரிமத்தை பெறுவதற்கு அதிக பணத்தை கட்ட வேண்டியிருக்கும். தானாக வாகனம் ஒட்ட தெரிந்தவர்களும் வாகனம் இல்லாததால் பயிற்சி பள்ளியை தேடி செல்ல வேண்டியுள்ளது.

இந்த நிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையானது புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த தானாக வாகனம் ஓட்ட தெரிந்தவர்களுக்கு சொந்த வாகனம் இல்லை என்றாலும் பிரச்சனை இல்லை. இதற்காக ஒவ்வொரு ஆர்டியோ அலுவலகத்திலும் தனி வாகனம் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக தமிழ்நாடு அரசானது 62 கோடி செலவில் 145 ஓட்டுநர் உரிம தேர்வு வாகனம் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

இதன் மூலம் ஓட்டுநர் உரிமத்தை பெறுவதற்கு ஆன்லைன் மூலமாக 50 ரூபாய் செலுத்தி ஓட்டுநர் உரிம தேர்வு வாகனத்தை எடுத்து கொண்டு ஆர்டிஓ முன்பு வாகனத்தை ஓட்டி காட்டி விட்டு ஓட்டுநர் உரிமத்தை பெற்று கொள்ளலாம்.

ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள். ஓட்டுநர் உரிமம் ஆன்லைனில் பெறுவது எப்படி

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement