அரசு விரைவு பேருந்தில் போனால் பெண்களுக்கு பல நன்மைகள்..!

Advertisement

Ladies Seat Reservation in Bus Rules

பொதுவாக நம் அனைவருக்கும் பேருந்து பயணம் என்பது பிடிக்கும். சிலருக்கு பிடிக்காது. ஏனென்றால் பஸ் என்றால் கூட்டமாக இருக்கும் என்பதால் தான் சிலருக்கு பஸ் பிடிக்காது. சிலருக்கு ஊரை சுற்றி பார்த்துக்கொண்டு போகலாம் என்பதால் மிகவும் பிடிக்கும். பஸ் என்றால் பாடல் பாடும் அதனை கேட்டுக்கொண்டே பயணம் செய்யலாம் என்பதால் பிடிக்கும். அவ்வளவு ஏன் 15 நிமிடத்திற்கு ஒரு முறை பஸ் வசதி இருக்கும். அதனாலும் சிலருக்கு பிடிக்கும்.

சிலர் வெளி ஊரிலிருந்து வந்தால் கூட பேருந்தில் முன் பதிவு செய்யபட்டு தான் அதில் பயணம் செய்வார்கள். பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி முன்பதிவு செய்யலாம். முக்கியமாக பெண்களுக்கு முன்பதிவுகளுக்கு ஒதுக்கீடு செய்ய 2 இருக்கைகள் இருந்தது. இப்பொது பெண்களுக்கு 4 இருக்கைகள்  ஒதுக்கீடு. அதனை பற்றிய செய்திகளை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Ladies Seat Reservation in Bus Rules:

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் 1,078 பேருந்துகள் உள்ளன. அதாவது கீழ் மிதவை, இருக்கை, படுக்கை, குளிர்சாதன வசதி, கழிவறை உள்ளிட்ட பல்வேறு சொகுசு வசதிகள் கொண்ட பேருந்துகள் உள்ளது. இதில் நீண்ட தூரம் பயணம் செய்ய 251 வழித்தடங்களில் இப்பேருந்துகள் பயணிக்கிறது. அது எவ்வளவு தூரம் என்றால் 300 கிலோ மீட்டர் தூரம் வரை செல்கிறது.

இதில் முன்பு பெண்களுக்கு முன்பதிவு செய்யும் போது அவர்களுக்கு 2 இருக்கைகள் இருந்தது. ஆனால் இப்போது 4 இருக்கைகளாக உயர்த்தப்படும் என்று போக்குவரத்து துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

Latest News 👇👇 இல்லத்தரசிகளே உங்களுக்கு தான் இந்த நற்செய்தி.. என்னனு தெரிஞ்சிக்கோங்க.. 

இதன் படி 4 இருக்கைகள் ஒதுக்கீடு அமுலுக்கு வந்தது. படுக்கை அறை மட்டுமே உள்ள பேருந்துகள் என்றால் 4 படுக்கை அறையும், உட்கார்ந்து செல்லும் பேருந்தாக இருந்தால் 4 சிட்டுகளும், 2 உட்கார்ந்து செல்லும் சிட்டுகளும் ஒதுக்கீடு செய்யப்படும்.

இதனை இணையதளம் (www.tnstc.in) அல்லது tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்யும் போது, பெண்களுக்கான இருக்கைகள் மஞ்சள் நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படி முன்பதிவு செய்திருந்தால் இளம்சிவப்பு நிறத்தில் மாறிவிடும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு நற்செய்தி அறிவிப்பு

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement