Tn Ration Shop QR Code Scanner
ரேஷன் கடை என்பது பெரும்பாலும் அனைத்து ஊரிகளிலும் இடம் பெற்றிருக்கிறது. இத்தகைய ரேஷன் கடைகளில் மாதந்தோறும் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கடையில் விநியோகம் செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் ஒவ்வொரு விலையில் விற்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்கையில் நாம் ரேஷன் கடைக்கு செல்ல வேண்டும் என்றால் முதலில் அதற்கு தேவையான தொகை, பொருட்களை வாங்குவதற்கான பைகள் முதலியவற்றை எடுத்துச்செல்ல வேண்டும். ஆனால் இனி யாரும் ரேஷன் கடைக்கு பொருட்களை வாங்க கையில் பணம் எடுத்துச் செல்ல வேண்டாம். ஏனென்றால் தமிழக அரசின் புதிய அறிவிப்பு ஒன்று வந்துள்ளது. அத்தகைய அறிவிப்பு முறையானது மக்களுக்கு முற்றிலும் பயன்படும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அத்தகைய அறிவிப்பினை பற்றிய செய்தியினை தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
ரேஷன் கடைகளில் UPI வசதி அமல்:
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் பயன்பெறும் வகையில் தான் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சில இலவச சலுகையினையும் அறிவித்துள்ளது.
இவ்வாறு இருக்கையில் தமிழக அரசானது அனைத்து ரேஷன் கடைகளிலும் UPI வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
இத்தகைய அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக ரேஷன் கடையில் UPI வசதி பொருத்தும் திட்டம் ஆனது நேற்று காஞ்சிபுரத்தில் மாநகராட்சியில் உள்ள M.VM.P என்ற ரேஷன் கடையில் UPI வசதி மூலம் ரேஷன் கடையில் பொருட்கள் விநியோகம் செய்யும் முறையினை கூட்டுறவு சங்க பதிவாளர் சண்முகசுந்தரம் அவர்கள் தொடங்கி வைத்தார்.
மேலும் இதன் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள 7 நகர கூட்டுறவு சங்கம், 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், 10 மருந்தகம் மற்றும் 602 ரேஷன் கடைகள் என அனைத்து இடங்களிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது .
இனி மக்கள் அனைவரும் கையில் பணம் எடுத்து வராமல் உங்களுடைய மொபைலில் உள்ள Phone pay, Gpay மற்றும் Paytm ஆகியவற்றின் மூலம் பணத்தினை செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
Latest News 👇👇 இல்லத்தரசிகளே உங்களுக்கு தான் இந்த நற்செய்தி.. என்னனு தெரிஞ்சிக்கோங்க..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |