ரேஷன் கடையில் இனி இந்த பொருட்களும் கிடைக்கும்..! அந்த என்ன பொருள் தெரியுமா..?

Advertisement

Ration Card Big Update Tamilnadu

பொதுவாக நமக்கு மலிவான விலையில் தான் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் அதனை சரியாக மாதம் மாதம் வாங்கிக்கொள்ள வேண்டும். கொஞ்சம் விட்டால் பொருட்கள் நமக்கு கிடைக்காது என்று நாம் ரேஷன் கடையில் சொல்லி கேட்டிருப்போம். கடையில் சில பொருட்கள் வழங்கி வருகிறார்கள். ஆனால் இது குறித்து உழவர் உழைப்பாளர் கட்சியும் முக்கிய வேண்டுகோள் ஒன்றை தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அது என்ன கோரிக்கை என்பதை பற்றி இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!

Ration Card Big Update Tamilnadu:

ரேஷன் கடையில் பாமாயில்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவும், ஏற்கனவே தமிழக அரசை வலியுறுத்தியிருந்தார்.

இது குறித்து அமைச்சர் சக்கரபாணியும் 2 மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் ஒரு பேட்டி தந்திருந்தார். தமிழகத்தில் விவசாயிகள் தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதனை விரைவில் முதல்வரின் கவனத்திற்கு எடுத்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

அதேபோல் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய போது ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.  முதல்கட்டமாக கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இனி அனைத்து அரசு அலுவலகத்திலும் கைரேகை பதிப்பு இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement