போட்டி தேர்வுகளுக்கு தமிழக அரசின் இலவச பயிற்சி விண்ணப்பிப்பது எப்படி?

Advertisement

Tamil nadu Government Announcement Free Competitive Exam Coaching Class

பெரும்பாலும் இன்றைய காலத்தில் இருப்பவர்கள் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதற்காக தங்களை தயார் படுத்தி வருகிறார்கள். சில பேர் வீட்டிலேயே தங்களை தயார்படுத்தி கொள்கிறார்கள். சில பேர் தனியாரின் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்கிறார்கள். சில பேருக்கு பயிற்சி வகுப்பிற்கு சென்று படிக்கச் வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு பணம் இல்லாததால் செல்ல முடியாத சூழ்நிலை இருக்கும். அவர்களுக்காக இந்த பதிவில் உதவும் வகையில் அரசானது ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனை பற்றிய தகவலை இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

Free Competitive Exams Coaching Tamilnadu:

அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பான் “TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு , தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்டு வரும் போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி மையங்கள் மூலமாகக் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருக்கிறது.

2024-25 நிதியாண்டு பட்ஜெட்டின் Top Highlights

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 பேருக்கும், சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 பேருக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சியில் சேர்ந்து கொள்வதற்கு மாணவர்களை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பதற்கு 29.01.2024 முதல் 12.02.2024 தேதி வரை கால அவகாசம் கொடுக்கபடுகிறது.

மேலும் பயிற்சி வகுப்பு 6 மாதங்கள் நடத்தப்படும். இந்த பயிற்சி ,மையங்களில் உணவு மற்றும் தங்கும் இடம் வசதியில்லை. திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பயிற்சிகள் வழங்கப்படும்.

இந்த பயிற்சியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.cecc.in  இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்:

இந்த பயிற்சிக்கான மாணவர்களை 10-ம் வகுப்பில் எடுத்துள்ள மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 நாட்கள் வேலை 3 நாட்கள் ரெஸ்ட் எங்கு தெரியுமா

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement