Germany Employee Holidays
படித்து முடித்ததும் அரசு துறைக்கோ அல்லது தனியாரிடம் வேலைக்கு செல்வோம். அதில் அரசு துறையில் வேலைக்கு சென்றால் அரசு விடுமுறை எப்போதெல்லாம் இருக்கிறதோ அப்போதெல்லாம் விடுமுறை விடப்படும். அதுவே தனியாரின் வேலை பார்க்கும் போது ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருக்கும். மற்றபடி ஏதவாது பெஸ்டிப்பல் நேரத்தில் விடுமுறை விடுவார்கள். சொந்தமாக தொழில் செய்கிறவர்களுக்கு அவர்களே என்றைக்கும் வேண்டுமானாலும் விடுமுறை எடுக்கலாம். விடுமுறை விடப்பட்டாலும் ரெஸ்ட் எடுக்க முடியவில்லை என்று கவலைப்படுபவர்கள் ஏரளாமானோர் இருக்கிறார்கள் அந்த வகையில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறையாம். அது எங்கே என்று இந்த பதிவை முழுமையாக படித்து அறிந்து கொள்ளுங்கள்.
வாரத்தில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை எங்கு:
உலகம் முழுவதிலும் வாரத்தின் 7 நாட்களில் 5 நாட்கள் வேலை நாட்களாகவும், சனி, ஞாயிறு விடுமுறையாகவும் அல்லது 6 நாட்கள் வேலை நாட்களாகவும் ஞாயிறு விடுமுறையாகவும் பல்வேறு வகையான வேலை, விடுமுறை நாள் நடைமுறையில் இருக்கிறது. இது ஒவ்வொரு துறையை பொருத்தியது மாறுகிறது. இந்நிலையில் சமீப காலமாக சில நாடுகள் வேலை நாட்களுக்கு இணையான விடுமுறை நாட்கள் அளிப்பது குறித்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்பு சுவீடன் நாட்டில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறையை அறிவித்திருந்தது. இந்த முறையினால் பணியாளர்கள் மகிச்சியாகவும், வேலைகளை அதிக ஆர்வத்தை காட்டினார்கள். இதனை தொடர்ந்து ஜெர்மனி நாட்டிலும் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறையை சோதிப்பதாக கூறியுள்ளார்கள். இந்த முறையானது இன்றிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. மேலும் இவை 6 மாதத்திற்கு சோதனை செய்யப்படும்.
இந்த திட்டத்தில் ஜெர்மனியில் உள்ள 45 நிறுவனங்கள் பங்கேற்க போகிறார்கள். இதனால் நாட்டில் குறைந்த பணியாளர்கள் வேலை செய்யும் பிரச்சனை இருக்காது. மேலும் பணியாளர்களின் மனநிலை, மற்றும் ஆரோக்கியம் மேம்படும், அதுமட்டுமில்லாமல் வேலை திறனும் அதிகரிக்கும் என்று ஜெர்மனி அரசு கூறியுள்ளது.
2024-25 நிதியாண்டு பட்ஜெட்டின் Top Highlights
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |