Powerful Motivational Quotes for Work in Tamil
பொதுவாக எந்த வேலையாக இருந்தாலும் சரி அதில் ஆர்வம் இருந்து செய்தால் தான் அந்த வேலையை நன்றாக செய்ய முடியும். உதாரணமாக ஒரு நாளைக்கு அம்மா வீட்டில் சமை என்று கூறுகிறார்கள் என்று வைத்து கொள்வோம். நீங்கள் அதனை சமைப்பதற்கு உங்களிடம் ஆர்வம் இருந்தால் தான் அந்த சமையல் நன்றாக இருக்கும்.
அது போல இன்றைய காலத்தில் கணவன்,, மனைவி இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். வருடத்தில் 365 நாட்களும் வேலைக்கு செல்ல வேண்டியிருக்கிறது. இந்த வேலையை நாம் 365 நாளும் விரும்பியே செய்கிறார்களா.! என்றால் நிச்சயம் இல்லை. சில நாட்கள் மனம் வெறுத்து செய்வார்கள். சில பேரிடம் அவர்கள் செய்கின்ற வேலைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்காது. அதனால் வேலையை வெறுப்பார்கள். அவர்களுக்காக இந்த பதிவில் வேலையில் ஊக்கமளிக்க கூடிய கவிதைகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
Motivational Quotes For Work in Tamil:
1.திறமையின் அடிப்படையில் உழைக்காதபோது கடின உழைப்பு திறமைகளை முந்தும் – டிம் நாட்கே
2. உழைப்புக்கு (work) முன்னால் சாதனை (Success) வரும் என்பது அகராதியில் மட்டும்தான். – விடால் சஸ்ஸுன்
3. வெற்றி என்பது பொதுவாகத் தன்னை முழுவதுமாக அந்த வேலைகளில் ஈடுபடுத்தியவர்களுக்குத்தான் கிடைக்கும். – ஹென்ரி டேவிட்
4. சிறந்ததை நோக்கிச் செல்ல நல்லதை இழக்க பயம் கொள்ளாதீர்கள். – ஜான் டி.ராக்ஃபெல்லர்
5. உங்களின் அழகான கனவுகளை நம்பினால்தான், எதிர்காலம் நீங்கள் நினைப்பதுபோல் அமையும். – எலியோனர் ரூஸ்வெல்ட்
உங்களை ஊக்குவிப்பதற்கான சில வரிகள்
6. முக்கால்வாசி வாழ்க்கை என்பது உங்களுடைய பணிதான், அதில் திருப்தியடைய வேண்டுமென்றால் அதற்கு முதலில் நீங்கள் செய்வதுதான் சிறந்த வேலை என்பதை உணர வேண்டும். – ஸ்டீவ் ஜாப்ஸ்
7. வெற்றிக்கான பாதையும் தோல்விக்கான பாதையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கும். – கொலின் ஆர். டேவிஸ்
8. வெற்றியின் வழி சந்தோஷம் இல்லை. சந்தோஷத்தின் வழிதான் வெற்றி. செய்வதை சந்தோஷத்துடன் செய்தாலே முழுமையாகச் செய்துவிடலாம். – ஆல்பர்ட் ஸ்கெவெயிட்ஸர்
19. வாய்ப்புகள் வராது, நீங்கள்தான் உருவாக்க வேண்டும். – கிறிஸ் க்ராஸர்
10. உங்களால் முடியும் என்பதை நம்புங்கள், அப்போதே பாதி அளவு முன்னேறி விட்டீர்கள் என்று அர்த்தம். – தியோடர் ரூஸ்வெல்ட்
11. கடிகாரத்தைப் பார்க்காதீர்கள், நீங்கள் வேலை செய்வதில் கவனம் செலுத்துங்கள். முன்னேறுங்கள். – சாம் லிவென்சன்
12. உங்கள் பணியில் சிறந்து விளங்க வேண்டுமென்றால், அதற்கு உங்கள் பணியை நேசித்து செய்வது மட்டும்தான் ஒரே வழி. – ஸ்டீவ் ஜாப்ஸ்
13. மூளையில் பயத்தை வைத்துக்கொண்டு உங்களை சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள். மனதில் உங்கள் கனவை வைத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்லுங்கள். – ராய் டி பென்னட்
14. வெற்றி என்பது அடுக்கடுக்கான தோல்விகளிலும் உற்சாகம் இழக்காமல் கற்றுக்கொள்வதுதான். – வின்ஸ்டன் சர்ச்சில்
15. வெற்றி என்பது உங்களிடம் என்ன இருக்கிறது என்பதைப் பொறுத்ததல்ல, நீங்கள் யார் என்பதைப் பொறுத்துதான். – போ பென்னட்
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |