Ambedkar Motivational Quotes in Tamil
விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர்,பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். அம்பேத்கர் சமூக சீர்திருத்தவாதியாக மட்டும் இல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவ மேதையாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும், வரலாற்று ஆசானாகவும் சிறந்து விளங்கியவர். இவர் ஏப்ரல் 14-ம் தேதி 1981-ம் ஆண்டு இந்த மண்ணிற்கு வந்தார்.
இவரின் தன்னம்பிக்கை கவிதைகளை இந்த பதிவின் காணலாம். ஏனென்றால் வாழ்க்கையில் எல்லாரும் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணம் தான் இருக்கும். சில நேரங்களில் துவண்டு விழும் நிலை ஏற்படும். அப்போது உங்களை ஊக்கப்படுத்தி கொள்வதற்கு இவரின் தன்னம்பிக்கை கவிதைகள் உதவியாக இருக்கும்.
Inspirational Ambedkar Quotes in Tamil:
1.வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் கவலை வேண்டாம். யார் பாராட்டினாலும்,பாராட்டா விட்டாலும் கடமையை செய்வோம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும் போது எதிரியும் நம்மை மதிக்கத் துவங்குவான்.
2. எவனோருவன் தானே சரணடையாமல் மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல் அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கிறானோ அவனே சுதந்திர மனிதன்.
3. ஆடுகளைத் தான் கோவில்களின் முன் வெட்டுகிறார்கள் சிங்கங்களை அல்ல.ஆடுகளாக இருக்க வேண்டாம் சிங்கங்களாக வீறு கொண்டு எழுங்கள் .
4. இந்த சமூகம் உங்களுக்கு சுதந்திரமான உணர்வைத் தராத வரை சட்டம் எத்தகைய விடுதலையை உங்களுக்கு அளித்தாலும் பயன் இல்லை.
5. அறிவைத் தேடி ஓடுங்கள். நாளைய வரலாறு உங்கள் நிழலாக தேடி ஓடி வரும்.
6. ஒரு மனிதனின் சிறந்த அடையாளம் சுய மரியாதை அதை இழந்து வாழ்வதுதான் பெரிய அவமானம் .
7. . உலகில் யாரும் தெய்வீக குணங்களுடன் பிறப்பது இல்லை.ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொறுத்துத்தான் முன்னேற்றமோ வீழச்சியோ ஏற்படுகிறது.
8..மற்றவர்களின் எல்லாத் தேவைகளையும் நிவர்த்தி செய்தால்தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால் அந்தப் பெயர் ஒருபோதும் தேவையில்லை.
9. எப்போதோ சொன்ன ஒரே கருத்தை சிந்தனையுள்ள எந்த மனிதனும் பிடித்துக் கொண்டிருக்க மாட்டான் .
10. சிறந்த எதிர்காலத்தை உருவாக்க தற்போதைய இன்பங்களை தியாகம் செய்து பாடுபடுங்கள் . குறிக்கோளை எட்டும் வரை தீ போல சுடும் கடும் துன்பங்களை ஏற்று தியாகம் செய்யுங்கள்
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |