சந்திர கிரகணம் 2023 எப்போது
பொதுவாக மக்கள் அதிகமாக நம்பிக்கை குணம் கொண்ட ஒருவராக இருப்பார்கள். ஏனென்றால் இதோ ஒரு செயலோ அல்லது விஷயமோ ஆச்சரியப்படுத்தும் வகையில் இருந்தால் போதும் உடனே அதனை நம்பி விடுவார்கள். ஆனால் அறிவியல் ரீதியாக நாம் ஏதேனும் விஷயத்தை கூறினால் அதனை அவ்வளவாக நம்ப மாட்டார்கள். ஏனென்றால் அறிவியல் ரீதியான செயல்களை நம்மால் காண முடியாது என்பதே முக்கிய காரணமாக இருக்கிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நாம் சில விஷயங்களை மட்டும் அதிலும் குறிப்பாக வானில் நிகழக்கூடிய சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தை காண்பார்கள். அதேபோல் இத்தகைய கிரகணத்தின் போது சற்று எச்சரிக்கையாகவும் இருப்பார்கள். ஆகவே 2023-ஆம் ஆண்டிற்கான சந்திர கிரகணம் எப்போது என்று பார்க்கலாம் வாங்க…!
சந்திர கிரகணம் அக்டோபர் 2023:
2023-ஆம் ஆண்டிற்கான சந்திர கிரகணம் ஆனது வரும் 28-ஆம் தேதி இரவு தொடங்கி 29-ஆம் தேதி அதிகாலை வரை இருக்கிறது. அதாவது சனி மற்றும் ஞாயிறு என இரண்டு கிழமைகளிலும் நடக்கிறது.
அந்த வகையில் 28-ஆம் தேதி அன்று சந்திரன் ஆனது பூமியினுடைய மங்கலான நிழல் வட்டத்தில் நுழைந்தாலும் கூட மறுநாள் 29-ஆம் தேதியே பூமியின் இருண்மையான நிழலில் நுழையும்.
இந்த சந்திர கிரகணம் ஆனது 1 மணி 19 நிமிடங்கள் வரையிலும் நிகழக்கூடிய ஒன்றாக இருக்கிறது. மேலும் இது மிக சிறிய அளவில் மட்டுமே தெரியக்கூடிய ஒன்றாக இருப்பதனால் பகுதி நேர சந்திர கிரகணம் எனப்படும். இதன் படி பார்க்கையில் சந்திரனின் முழு பகுதிகளில் 0.126 மட்டுமே தெரியும்.
புதன் கிரகம் பற்றிய மிகவும் சுவாரசியமான தகவல்கள்
சந்திர கிரகணம் பார்க்கும் இடம்:
இன்னும் ஓரிரு நாட்களில் நடக்கக்கூடிய இந்த கிரகணத்தை இந்தியாவில் உள்ளவர்கள் காணலாம். மேலும் ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா என கிழக்கு அரைக்கோளத்தில் சில பகுதிகளில் சந்திர கிரகணம் தெரியும் வாய்ப்பு ஆனது இருக்கிறது.
சந்திர கிரகணம் நேரம்:
இந்த சந்திர கிரகணத்திற்கான நேரம் என்பது 29-ஆம் தேதி அதிகாலை 01:05 மணிக்குத் தொடங்கி 02:24 மணி வரை நிகழும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Science |