வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஆதித்யா L1 குறித்து இஸ்ரோ நிறுவனத்தின் புதிய அப்டேட் வந்தாச்சு என்ன தெரியுமா..?

Updated On: November 30, 2023 8:12 AM
Follow Us:
aditya l1 isro for new update sun x in tamil
---Advertisement---
Advertisement

Aditya L1 ISRO for New Update Sun X

நம்முடைய இளம் பருவத்தில் வானத்தில் இவ்வளவு தூரத்தில் காணப்படும் இந்த சூரியன் மற்றும் நிலவில் அப்படி என்ன தான் இருக்கிறது. ஏன் இது மட்டும் கைகளுக்கு எட்டாத அளவில் இருக்கிறது என இதுபோன்ற கேள்விகள் அதிகமாக தோன்றும். ஆனால் இவை அனைத்திற்கும் அந்த பருவத்தில் என்ன தான் சரியான விடையினை கூறினாலும் கூட அது ஏற்றுக்கொள்ள முடியாத அல்லது புரியாத ஒன்றாகவே இருக்கும். வளர்ந்து வந்த பிறகே இவற்றிற்கு எல்லாம் பின் இருப்பது அறிவியல் என்று நமக்கு தெரிய வரும்.

ஆனால் இவ்வாறு தெரிந்த பிறகு அதிகமாக அறிவியல் வளர்ச்சியில் ஆர்வம் இருக்கும். அதனை எப்படி எத்தகைய முறையில் வெளிக்காட்டுவது என்று எல்லாம் தெரியாது. இவ்வாறு நாம் இருந்தாலும் கூட நமது நாட்டில் இருந்து எண்ணற்ற சோதனகைகள் நடந்து கொண்டு தான் உள்ளது. தற்போது கூட சந்திராயன் 3 மற்றும் ஆதித்யா L1 என இவை இரண்டும் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் நிலையில் இருந்தது. இப்படி இருக்கும் பட்சத்தில் தற்போது ஆதித்யா L1 குறித்த புதிய அப்டேட்டை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அது என்ன என்று விரிவாக பார்க்கலாம் வாங்க.!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஆதித்யா L1 குறித்து இஸ்ரோ நிறுவனத்தின் புதிய தகவல்:

கடந்த மாதத்திற்கு முன்பாக செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி அன்று ஆதித்யா L1 ஸ்ரீஹரிகோட்டாவில் சத்தீஷ் தவான் என்ற ஏவுதளத்தில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இது பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவியில் உள்ளது.

ஆதித்யா எல் 1 விண்கலம்

ஆதித்யா L1 1,475 கிலோ கிராம் எடையினையும், பவுண்டுகள் முறைப்படி பார்க்கும் பட்சத்தில் ஆதித்யா L1, 3,252 பவுண்டுகளும் இருக்கிறது. மேலும் ஆதித்யா L1, 7 தனித்துவமிக்க பேலோடுகளையும் கொண்டிருக்கிறது.

மேலும் இது முற்றிலும் சூரியனினை பற்றிய விவரங்களை கணக்கிட வேண்டும் என்ற நோக்கத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் வெற்றிகரமாக சூரியனின் சுற்று வட்டப்பாதையில் தனக்கான இடத்தினையும் நிலைநாட்ட வைத்தது ஆதித்யா L1.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தற்போது முதலாவதாக ஆதித்யா L1 ஆனது சூரியனுடைய அனலில் இருந்து வெளியாகும் X கதிர்களை வெற்றிகரமாக படம் பிடித்து அனுப்பி வைத்துள்ளது.

அந்த வகையில் ISRO நிறுவனம் ஆதித்யா நிறுவனம் கடந்த மாதம் 29-ஆம் தேதி வெளியிட்டுள்ள X கதிர் படத்தினை தற்போது வெளியிட்டுள்ளது.மேலும் இத்தகைய வெளியீடு ஆனது சூரிய ஆற்றல், எலக்ட்ரான்கள் என இவற்றை எல்லாம் சிறந்த முறையில் ஆய்வு செய்வதற்கு சிறந்த ஒன்றாக இருக்கும் என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.

செயற்கை மழையை உருவாக்குவது எப்படி தெரியுமா 

இதுபோன்று பயனுள்ள அறிவியல் தகவல் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> அறிவியல்
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now