புயல் உருவாவது எப்படி? | Puyal Eppadi Varukirathu in Tamil
வாசகர்கள் அணைவருக்கும் வணக்கம். இப்பதிவில் புயல் எப்படி உருவாகிறது என்பதை கொடுத்துள்ளோம். இயற்கையின் சீற்றத்தை மட்டுமே யாராலும் கட்டுப்படுத்த முடியாது. இயற்கை நமக்கு தரும் மழை பல நேரங்களில் சந்தோசமாக இருந்தாலும் சில நேரங்களில் கவலையை வழங்குகிறது. அந்த கஷ்டத்திற்கும் மனிதர்களாகிய நாம் செய்யும் ஒரு சிறிய தவறுகளால் தான். பூமி இப்போது அதிக அளவில் வெப்பமாகி வருகிறது. அதற்கு காரணம் வளிமண்ட மாசு, இதற்கும் மனிதனே காரணம்.
இயற்கையில் உருவாகும் புயலாக இருக்கட்டும் சுனாமியாக இருக்கட்டும் அது உருவாவது அறிவியலால் இயற்கையில் ஏற்படும் சிறு மாற்றம் பெரிய ஒரு நிகழ்வை உருகாக்கிறது. அந்த சிறு மாற்றங்களால் உருவாக்குபவை தான் புயல். புயலினால் பல இழப்புகளை நாம் கண்டு இருக்கின்றோம். அந்த புயல் உருவாக பூமி வெப்பமாதல் மிகவும் முக்கிய காரணமாக அமைகிறது. இன்றைய பதிவில் புயல் எப்படி உருவாகிறது என்பதனை தெரிந்துகொள்ளவோம் வாருங்கள்.
சூறாவளி புயல் எப்படி உருவாகிறது ?
- பூமியின் நிலநடுக்கோட்டுக்குப் பகுதியில், வெப்பத்தால் கடல் நீர் சூடாகிறது.
- இதனால் ஆவியாகும் கடல் நீர், கடலின் மேற்பரப்பில் சூழ்ந்துள்ள காற்றுடன் கலக்கிறது. இந்த சூடனாக ஈரக்காற்று, செங்குத்தாக மேல் நோக்கி செல்கிறது. கடலின் மேற்பரப்பில் இருந்த பெரும்பாலான காற்று மேல் நோக்கி சென்று விடுவதால், அந்த இடத்தில் குறைவான காற்றே மீதம் உள்ளது. இதனால், அந்த பகுதியில், காற்றழுத்தம் குறைகிறது.
- இந்த குறைந்த காற்று அழுத்தத்தை நிரப்ப, அதன் சுற்றுப் பகுதியில் உள்ள வளி மண்டலக் காற்று சுழன்று விரைகிறது.
- இவ்வாறாக, மேலே சென்று தங்கும் சூடான ஈரக்காற்று, குளிர்ந்து, நீர்த்திவலைகள் உறைந்து மேகமாகிறது. இந்த மேகமானது காற்றுடன் சேர்ந்து சுழல்கிறது.
- இந்த நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இப்படி தொடர்ந்து நெடைபெறும் ஆவியாதலால் அந்த பகுதியை மையமாக கொண்டு குறைந்த காற்று அழுத்த மண்டலம் உருவாகிறது. அந்த குறைந்த அழுத்த பகுதியை நிரப்ப வலிமையான காற்று தேவைப்படுகிறது. இந்த காற்று குறைந்த அழுத்த பகுதியை சுற்றி சுழன்று அந்த குறைந்த அழுத்த பகுதியை நிரப்ப முயல்கிறது.
- காற்றின் வலிமை அதிகரித்துக்கொண்டே செல்வதால் அது புயலாக மாறுகிறது. சுழலும் மேகக்கூட்டங்களின் மைய பகுதி கண் என்று அழைக்கப்படுகிறது. சுழலும் மேக கூட்டங்களை உள்ளடக்கிய காற்று, நகர்ந்து கரையை அடையும் போது நிலப்பகுதியை புயலுடன் கூடிய மழை தாக்குகிறது. நிலத்தில் காற்று பயணிக்கும் போது அது வலுவடைகிறது.
செயற்கை மழையை உருவாக்குவது எப்படி தெரியுமா
இதுபோன்று பயனுள்ள அறிவியல் தகவல் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | அறிவியல் |