அணுக்கரு இயற்பியலின் அடிப்படை கருத்துக்கள்…..

Advertisement

Nuclear Physics

நம்மை சுற்றியுள்ள எளிமையான அறிவியலை நாம் தெரிந்துகொள்வது நமக்கு நமது சுற்றுசூழலை பற்றி ஒரு தெளிவை தரும். அறிவியல் என்பது கடினமானது கிடையாது நம்மை சுற்றி இருக்கும் ஒவ்வொரு பொருட்களிலும் அறிவியல் உள்ளது. அதனை நாம் கூர்ந்து கவனிக்கும் போது அதில் எண்ணற்ற நிகழ்வுகள் நிகழ்வதை காணமுடியும். உலகமே திரும்பி பார்க்க வைக்கக்கூடிய ஆராய்ச்சி என்றால் அது அணுக்கரு ஆராய்ச்சி, இதனை நேர்மையையாகவும் எதிர்மறைக்கவும் பயன்படுத்த முடியும். அதன் விளைவுகள் மிகவும் பெரியதாக இருக்கும். பள்ளி மாணவர்களுக்கு முக்கியமான ஒரு பாடத்திட்டமாக இப்போதும் அணுக்கரு இயற்பியல் தான். இன்று அந்த அணுக்கரு இயற்பியலை பற்றிய அடிப்படை கருத்துக்களை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Atomic Physics | அணுக்கரு இயற்பியல்:

அணுக்கரு இயற்பியல் என்பது அணுக்கருக்களின் அமைப்பு, அவற்றின் உருவாக்கம், நிலைத்தன்மை மற்றும் சிதைவு பற்றிய ஆய்வு ஆகும்.
அணுவில், இயற்கையாக உள்ள அணுக்கரு சக்தி, சமச்சீர்மை பண்புகள்.
அணுகருவில் உள்ள புரோட்டான், நியூட்ரான் மற்றும் புரோட்டான்களுக்கு உட்பட ஹாட்ரான்களுக்குள் உள்ள குவார்க்குகளுக்கு இடையே ஏற்படும் சிக்கலான தொடர்புகளைப்ஆய்வு செய்வதை அணுக்கரு இயற்பியல் ஆகும்.

அணு என்றால் என்ன ?

அணு என்பது ஒரு தனிமத்தின் மிகச் சிறிய மூலக்கூறு ஆகும். அணுக்கள் மிகவும் சிறியவை.

அணு அமைப்பு என்றால் என்ன?

ஒரு தனிமத்தின் அணு அமைப்பு அதன் கருவின் அமைப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள எலக்ட்ரான்களின் அமைப்பைக் குறிக்கிறது.

பொருளின் அணு அமைப்பு புரோட்டான்கள் , எலக்ட்ரான்கள் மற்றும் நியூட்ரான்களால் ஆனது .

புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் அணுவின் உட்கருவை உருவாக்குகின்றன. இது அணுவிற்கு சொந்தமான எலக்ட்ரான்களால் சூழப்பட்டுள்ளது. ஒரு தனிமத்தின் அணு எண் அதன் கருவில் உள்ள மொத்த புரோட்டான்களின் எண்ணிக்கையை விவரிக்கிறது.

அணு மாதிரிகள்:

18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில், பல விஞ்ஞானிகள் அணு மாதிரிகள் உதவியுடன் அணுவின் கட்டமைப்பை விளக்க முயன்றனர்.
இந்த மாதிரிகள் ஒவ்வொன்றும் அதன் சொந்த தகுதிகள் மற்றும் குறைபாடுகளைக் கொண்டிருந்தன மற்றும் நவீன அணு மாதிரியின் வளர்ச்சிக்கு முக்கியமாக இருந்தன. ஜான் டால்டன், ஜேஜே தாம்சன், எர்னஸ்ட் ரதர்ஃபோர்ட் மற்றும் நீல்ஸ் போர் போன்ற விஞ்ஞானிகளால் இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் இருந்தன. அணுவின் அமைப்பு குறித்த அவர்களின் கருத்துக்கள் இந்த துணைப்பிரிவில் விவாதிக்கப்பட்டுள்ளன.
இதுபோன்று பயனுள்ள அறிவியல் தகவல் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> அறிவியல்
Advertisement