Fistula Symptoms in Tamil
நம் உடலில் நோய்கள் வருவதற்கு, முன்பு அறிகுறிகள் வெளிப்படும். அறிகுறிகள் வெளிப்படுவதை கவனிக்காமல் நோய்கள் முற்றிய நிலையில் மருத்துவரிடம் கவனிக்கிறார்கள். நாம் ஒவ்வொரு நோய்க்கான அறிகுறிகளை அறிந்து கொண்டாலே நோய்களை ஆரம்பத்திலேயே விரட்டி விடலாம்.
இன்றைய காலத்தில் ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுவதில்லை. இதனால் பல நோய்கள் உடலில் ஏற்படுகிறது. அதனால் நீங்கள் ஒவ்வொரு நோய்க்கான அறிகுறிகளை அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் பிஸ்துலா என்றால் என்ன, அதன் அறிகுறிகள் போன்றவற்றை அறிந்து கொள்வோம் வாங்க..
பிஸ்துலா என்றால் என்ன.?
பிஸ்துலா என்பது பெருங்குடல் மற்றும் ஆசனவாய் தோலின் இடையே உருவாகும் ஒரு அசாதாரண சிறிய பாதை ஆகும். குடல் சுரப்பியில் உள்ள சீழ் பவுத்திரத்திற்கு வழிவகுக்கிறது. குடல் கால்வாய் என்பது பெருங்குடல் மற்றும் ஆசனவாய் இடையில் உள்ள குழாய் ஆகும், இந்த குழாய் உள்ள பகுதியில் எண்ணிலடங்கா சுரப்பிகள் உள்ளன.
வகைகள்:
- பிஸ்துலா என்பது எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படும், இவை உருவாகும் இடத்தை பொறுத்து இதனை வேறு விதமாக குறிப்பிடலாம். எந்த இடத்தில் பிஸ்துலா ஏற்படும் என்பதை கீழே பார்த்து அறிந்து கொள்ளவும்.
- தமனி மற்றும் ஒரு நரம்பு
- கருப்பை வாய் மற்றும் யோனி
- கழுத்து மற்றும் தொண்டை
- பித்த நாளங்கள் மற்றும் தோலின் மேற்பரப்பு
- மண்டை ஓடு மற்றும் நாசி சைனஸ்
- குடல் மற்றும் பிறப்புறுப்பு
- வயிறு மற்றும் தோலின் மேற்பரப்பு
- தொப்புள் மற்றும் குடல்
- நுரையீரலில் உள்ள தமனி மற்றும் நரம்பு
- கருப்பை மற்றும் பெரிட்டோனியல் குழி (வயிறு மற்றும் உள் உறுப்புகளுக்கு இடையே உள்ள இடைவெளி)
- உடலின் பெருங்குடல் மற்றும் மேற்பரப்பு, ஆசனவாயைத் தவிர வேறு ஒரு திறப்பு வழியாக மலம் வெளியேறும்
பிஸ்துலா ஏற்பட காரணம்:
- பிஸ்துலா ஏற்பட இடத்தை பொறுத்து காரணங்கள் மாறுபடுகின்றன.
- காசநோயினால் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
- புற்றுநோய் சிகிச்சைக்காக கதிர்வீச்சு செய்கிறவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
- அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு ஏற்படும்.
- இரைப்பை குடல் சம்மானந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்களுக்கு பிஸ்மிலா ஏற்படும்.
- உங்களுக்கு உடலில் ஏதும் பிரச்சனை இருந்தும் அதற்காக மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டிருப்பவர்களுக்கும் ஏற்படுகிறது.
பிஸ்துலா அறிகுறிகள்:
- உடல் வலி
- ஆசனவாயைச் சுற்றி வலி
- உடல்நிலை சரியில்லை அல்லது சங்கடமாக இருப்பது போன்ற தெளிவற்ற உணர்வு
- யோனியில் இருந்து தொடர்ந்து சிறுநீர் கசிவு
- வெளிப்புற பெண் பிறப்புறுப்பு உறுப்புகளில் எரிச்சல்
- குமட்டல்
- வயிற்று வலி
- வாந்தி
- காய்ச்சல்
- எடை இழப்பு
- வயிற்றுப்போக்கு
- மலச்சிக்கல்
- அடிக்கடி சிறுநீர் பாதை தொற்று
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |