கண் அழுத்த நோய் அறிகுறிகள்

Advertisement

Eye Pressure Symptoms in Tamil

ஹாய் நண்பர்களே வணக்கம்.. பொதுவாக நமது உடலில் பிரஷர் அதிகமாவது ஒரு பிரச்சனை என்று நமக்கு தெரியும், அது என்ன கண் பிரஷர் அதிகமாகுது. இது என்ன பிரச்சனை, எப்படி கண் பிரஷர் ஆகும், அதனுடைய அறிகுறிகள் என்ன என்பது குறித்த தகவலை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.

கண் அழுத்த நோய்:

நாம் கண்களால் பார்க்கும் அனைத்து விஷயத்தையும் நம் மூளைக்கு அனுப்புவது நமது கண் நரம்புகள் தான். இந்த கண் நரம்பை கண் நீர் அழுத்த நோயானது பாதிக்கும். கண் நீர் அழுத்தத்தால் கண்களில் அதிக அழுத்தம் ஏற்பட்டு படிப்படியாக பார்வை நரம்பு பாதிக்கப்பட்டு, பார்வையிழப்பு ஏற்படும்.

கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டால் அதனை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஏன் என்றால், ஆரம்ப நிலையிலேயே இந்த பாதிப்பைக் அறிந்து அதற்கான சிகிச்சை முறையை  பின்பற்றினால் பார்வையிழப்பைத் தவிர்க்கலாம். ஒருவேளை உங்களுக்கு கண்களில் அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டால் வருடத்திற்கு ஒருமுறை கண்களைப் பரிசோதனை செய்துகொள்ளவும்.

இதையும் செய்து கிளிக் படியுங்கள் 👇
குளிர் காய்ச்சல் வருவதற்கான அறிகுறிகள்..!

காரணங்கள் & அபாயக் காரணிகள்:

பொதுவாக, அனைவரது கண்களில் ஒரு திரவம் இருக்கும். கண்களிலேயே உருவாகும் இந்த திரவமானது கண்களுக்கு பலூன் போன்ற அமைப்பைத் தருகிறது. ஆரோக்கியமான கண்களில் பழைய திரவமானது தானாக கண்களிலிருந்து வெளியேற்றப்பட்டு புதிதாக உற்பத்தியாகும். ஆனால் கண் நீர் அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட கண்களிலிருந்து பழைய திரவமானது வெளியேறாமல் கண்களிலேயே தேங்கி இருக்கும். கண்களில் தேங்கும் இந்த திரவமானது கண்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும். பார்வை நரம்பை வெகுவாக பாதிக்கும்.

பின்வரும் காரணிகளால் கண் நீர் அழுத்தம் ஏற்படலாம்:

  • பரம்பரைக் காரணிகள்
  • கிட்டப் பார்வை
  • தூரப் பார்வை
  • வயது
  • கார்டிகோ ஸ்டிராய்டு மருந்துகளை அதிகளவில் எடுத்துக் கொள்ளுதல்
  • கண்களில் அடிபடுதல்
  • சர்க்கரை நோய்

ஆரம்ப நிலையில் நோய் இருந்தால் எவ்வித அறிகுறியும் நேரிடையாகத் தெரியாது. 40 வயதைத் தாண்டியவர்களுக்கு இந்த நோய் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, 40 வயதினர் தங்கள் கண்களை வருடத்திற்கு ஒருமுறை கண்களை முறையாகப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

நினைவில் கொள்ள வேண்டியவை:கண் அழுத்த நோய்

நோய் முற்றினால் பார்வை முற்றிலும் பாதிக்கப்பட்டால் இழந்த பார்வையை மீண்டும் பெற முடியாது. எனினும், ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிந்தால் பார்வையிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். கண் மருத்துவரிடம் முறையான சிகிச்சை செய்துகொள்வதன் மூலம் பார்வையிழப்பைத் தற்காத்துக் கொள்ளலாம்.

குழந்தைப்பருவ கண் நீர் அழுத்தம்:

பிறந்த குழந்தைகளுக்குக்கூட கண் நீர் அழுத்தம் ஏற்படலாம். கண்புரை நோய் காரணமாக குழந்தைப் பருவத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட குழந்தைகளுக்கு கண் நீர் அழுத்தம் ஏற்படலாம்.

பொதுவான சில அறிகுறிகள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு குழந்தைப்பருவ கண் நீர் அழுத்தம் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

இதையும் செய்து கிளிக் படியுங்கள் 👇
இந்தெந்த அறிகுறிகள் இருந்தா அது தொழுநோயாம் அது என்னென்ன அறிகுறிகள் என்று தெரிந்து கொள்ளுங்க..!

கண் அழுத்த நீர் அறிகுறிகள்:

  • பெரிதாக உள்ள கருவிழி
  • கண்களில் அதிகமாக நீர் வெளியேறுதல்
  • குழந்தைகள், ஒளியைப் பார்க்காமல் தவிர்த்தல்

இந்த அறிகுறிகள் இருந்தால் கண் நீர் அழுத்தமாகத் தான் இருக்கும் என பயப்படத் தேவையில்லை. மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்பதை இந்த அறிகுறிகள் உணர்த்துகின்றன. பெரிய குழந்தைகளுக்கு இது போல அறிகுறிகள் எதுவும் இருக்காது.

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement