Mental Illness Symptoms in Tamil
உடலை எவ்வளவு ஆரோக்கியமாக வைத்து கொள்கிறமோ அதேபோல் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் குறை ஏற்பட்டால் உடலில் ஏற்படும் அறிகுறிகளை கண்டு அதனை சரிசெய்து விடலாம். ஆனால் மனநோய் ஏற்பட்டால் உடலில் தாமதமாக தான் அறிகுறிகள் தோன்றும். அத்தகைய அறிகுறிகள் ஆனது நீண்ட காலம் வெளியில் தெரியாமல் இருக்கும். சில அறிகுறிகள் தென்படும்போதே விரைவாக எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். எனவே மனநோய் ஏற்பட்டால் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
மனநோய் என்றால் என்ன.?
மனநோய் என்பது ஒரு நபரை உணர்ச்சி ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மற்றும் நடத்தை ரீதியாகவும் பாதிக்கும் சுகாதார நிலைமைகளை குறிக்கிறது. அதாவது ஒரு நபரின் சிந்தனை, உணர்வு, நடத்தை மற்றும் மனநிலை போன்றவற்றை பாதிக்கும் நிலைமையை குறிப்பதாகும். உடல் நோயை போன்றே இதற்கும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். [/su_highlight]What is Mental Illness Symptoms in Tamil:
தூக்கமின்மை:
பசியின்மை, தூக்கமின்மை போன்றவை தொடர்ந்து நீடித்தால் அவற்றை சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது. இவை மனநோய்கான அறிகுறிகளாக கூட இருக்கலாம். இரண்டு வாரங்களுக்கு மேல் பசியின்மை, தூக்கமின்மை போன்றவை ஏற்பட்டால் நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மன அழுத்தம் குறைய வாய்ப்பு உள்ளது.
தாடை நோய் தோன்றும் அறிகுறிகள் என்ன..
வழக்கமான நடவடிக்கையில் மாற்றம்:
ஒருவருடைய வழக்கமான நடவடிக்கையில் அசாதாரண மாற்றங்கள் ஏதும் தெரிந்தால் அது மனநோய்க்கான அறிகுறி ஆகும். அதாவது தேர்வில் தோல்வி, விளையாட்டில் தோல்வி, பிடித்த செயல்களில் ஈடுபடாமல் இருப்பது போன்றவை மன ஆரோக்கியத்தை பாதிக்கும் செயல்கள் ஆகும். இச்சிந்தனையில் இருந்து விடுபடாமல் இருக்கும்போது மன அழுத்தம் தோன்றி மனநோயாக மாறுகிறது.
கவனம் சிதறல்:
மனநோய் பாதிப்புக்குள்ளானவர்கள் சிந்தித்து வேலை செய்வதும் அதில் கவனம் இல்லாமல் இருப்பதும் மனநோயின் அறிகுறியாகும். மேலும் நினைவுத்திறன், சிந்தனை திறன் மற்றும் பேச்சில் தடுமாற்றம் ஏற்படுவதும் ஆகும்.
பதற்றம் ஏற்படுதல்:
நெருக்கமான நபர்கள், உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்பவர்கள் உங்களை விட்டு விலகி செல்வது போன்ற உணர்வுகள் மனநோயின் அறிகுறியாகும். மேலும் எப்போதும் பதற்றத்துடன் இருப்பதும், பயப்படுவதும், மற்றவர்கள் மீது தேவையில்லாமல் சந்தேகம் கொள்வதும் மனநோயின் அறிகுறியாகும்.
மனநோயின் வகைகள்:
- மனக்கவலை கோளாறுகள்
- மனநிலை கோளாறுகள்
- மனநல கோளாறுகள்
- உண்ணும் கோளாறுகள்
- உந்துவிசை கட்டுப்பாட்டு கோளாறுகள்
- அப்செசிவ்-கம்பல்சிவ் கோளாறு
- பிந்தைய மனஉளைச்சல் சீர்கேடு மற்றும் விலகல் கோளாறு
- உண்மைக் கோளாறு மற்றும்
- TIC கோளாறு
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |