வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தாடை நோய் தோன்றும் அறிகுறிகள் என்ன..? | TMJ Symptoms in Tamil..!

Updated On: June 16, 2025 6:03 PM
Follow Us:
TMJ Symptoms in Tamil
---Advertisement---
Advertisement

TMJ Symptoms in Tamil

வணக்கம் வாசகர்களே..! நாம் வாழும் இந்த அவசர உலகில் பலரும் சாப்பிட கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதுபோல எங்கு பார்த்தாலும் சுற்றுசூழல் மாசுபடும், துரித உணவுகளும், புகை மண்டலமும் தான் காணப்படுகிறது. இந்த நிலையில் யாருக்கு எப்போது என்ன நோய் வரும் என்றே சொல்ல முடியாது அல்லவா..! அப்படி நம் உடலில் ஏதாவது பாதிப்பு இருந்தால் அதை எப்படி கண்டறிவது என்று யோசிப்பீர்கள். அதுபோல இந்த பதிவின் வாயிலாக ஒவ்வொரு நோய்க்கான அறிகுறிகளை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று தாடை நோய் அறிகுறிகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இதய நோயின் அறிகுறிகள்

தாடை நோய் அறிகுறிகள்: 

tmj symptoms

தாடை நோய் என்பது ஆங்கிலத்தில் Temporomandibular Joint Disorders என்று அழைக்கப்படுகிறது. இந்த மூட்டு (TMJ) கோளாறுகள் தாடை மூட்டுகள் மற்றும் தாடையை சுற்றியுள்ள தசைகள் மற்றும் தசைநார்களை பாதிக்கும் நிலைகள் ஆகும். அதுபோல இதை டெம்போரோமாண்டிபுலர் மூட்டுகள் என்று அழைக்கப்படுகிறது.

இந்த தாடை நோய்கள் அதிர்ச்சி, உணவுகளை அழுத்தம் கொடுத்து உண்ணுவது, கீல்வாதம் அல்லது தேய்மானம் ஆகியவற்றால் ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த டெம்போரோமாண்டிபுலர் மூட்டுகள் உங்கள் முகத்தின் இருபுறமும் அல்லது உங்கள் காதுகளுக்கு முன்னால் அமைந்துள்ளன.

இரவு நேரத்தில் தாமதமாக தூங்குவதால் இதய நோய் ஏற்படுமா..!

அதுபோல TMJ செயலிழப்பு 20 முதல் 40 வயதுடையவர்களை அதிகம் பாதிக்கிறது. அதிலும் ஆண்களை விட பெண்களே அதிகம் என்று சொல்லப்படுகிறது.

இந்த நோய் ஒருவருக்கு இருக்கிறது என்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டறியலாம். இந்த TMJ நோய்க்கான அறிகுறிகளை கீழ் காணலாம்.

  • தாடை வலி
  • தலைவலி
  • காதுவலி
  • கழுத்து அல்லது தோள்களில் வலி
  • உங்கள் வாயை அகலமாக திறப்பதில் சிரமம்
  • உங்கள் வாயைத் திறக்கும் போதும் அல்லது மூடும் போதும் தாடை மூட்டில் சத்தம், உறுத்தல் அல்லது தட்டுதல் போன்ற ஒலிகள் ஏற்படும்.
  • உங்கள் முகத்தில் ஒரு சோர்வு உணர்வு
  • உணவு மெல்லுவதில் சிரமம்
  • உங்கள் காதுகளில் சத்தம் ஒலிப்பது
  • உங்கள் பற்கள் ஒன்றாகப் பொருந்திய விதத்தில் மாற்றங்கள்
  • உங்கள் முகத்தின் பக்கத்தில் வீக்கம்
  • பல் வலி

TMJ Meaning in Tamil:

TMJ என்பது Temporomandibular Joint அர்த்தமாக இருக்கிறது. இவை தாடையின் மூட்டு ஆகும். இவை மண்டை ஓட்டை தடையுடன் இணைக்கிறது. இப்படி இணைப்பதால் தான் வாயை திறக்கவும், பேசவும் முடியுது. அதுமட்டுமில்லாமல் நம்மால் சாப்பிடவும், உதவுகிறது.

தாடை நோய் ஏற்பட காரணம்:

  • தாடை காயம்
  • பற்களை அரைத்து கொள்ளுதல், பல்லை பிடுங்குதல்

TMJ செயலிழப்பதற்கான காரணம்:

  • உங்களுடைய கருவியாக பயன்படுத்துதல், அதாவது துணி மற்றும் கவர்களை வாயால் கடிப்பது
  • பேனா, பென்சில் அல்லது பிற பொருட்களை மெல்லுதல்
  • பூமர் மெல்வது
  • அதிகமாக தாடைகளுக்கு வேலை கொடுப்பது
  • வெறும் வாயை அரைப்பது அல்லது மெல்வது

மேல் கூறியுள்ள காரணங்களால் தாடை ஆனது செயலிழிக்க ஆரம்பிக்கும். அதனால் இது போன்ற செயல்களை செய்யாமல் தாடையை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.

இந்த அறிகுறிகள் இருக்கா.. அப்போ இரத்த உறைவாக தான் இருக்கும்

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now