டிமென்ஷியா என்பது என்ன நோய்..? இந்த நோயின் அறிகுறிகள் என்ன தெரியுமா..?

Advertisement

Dementia Meaning in Tamil

வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக நாம் வாழும் இந்த காலகட்டம் எவ்வளவு மாறி இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். எங்கு பார்த்தாலும் வாகன புகைகளும், தொழிற்சாலை கழிவுகளும் தான் காணப்படுகிறது. இவ்வளவு ஏன் வயல் வெளிகளை அழித்துவிட்டு பிளாட் கட்டி வருகிறார்கள். இதனால் நமக்கு என்ன பயன் இருக்கிறது சொல்லுங்கள். நாம் நம் எதிர்கால சந்ததியினருக்கு பெரிய ஆபத்தை தான் உருவாக்கி வருகின்றோம். சரி இது நம் அனைவருக்குமே தெரிந்த ஓன்று தான். இன்றைய நிலையில் மக்கள் அனைவரும் உணவை விட மருந்து மாத்திரைகளை தான் அதிகமாக உட்கொள்கிறார்கள். இவ்வளவு ஏன் இன்றைய நிலையில் யாருக்கு என்ன நோய் வரும் என்றே சொல்ல முடியாது. அதுபோல ஒவ்வொரு நோய்க்கும் ஒரு அறிகுறி இருக்கும். அந்த வகையில் இன்று டிமென்ஷியா என்பது என்ன நோய்..? இதன் அறிகுறிகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

இந்த அறிகுறி இருந்தால் உடனே மருத்துவரை பாருங்கள்

டிமென்ஷியா என்பது என்ன..? 

Dementia Meaning in Tamil

டிமென்ஷியா என்பது அறிவாற்றல் செயல்பாட்டில் ஏற்படும் ஒரு நோயாகும். இது அறிவாற்றல் இழப்பு மற்றும் நடத்தைக்கான செயல்பாடுகள் போன்றவைகளை இழக்கச் செய்வதினால் ஒருவரின் தினசரி வாழ்க்கை முறையில் பாதிப்பு ஏற்படுகிறது. அதை தான் ஞாபக மறதி என்று சொல்கின்றோம்.

அதாவது ஞாபக மறதி நோயை தான் டிமென்ஷியா என்று சொல்கின்றோம். அதுபோல இந்த நோயின் காரணமாக ஒருவரின் ஞாபகம், மொழித்திறன், காட்சிப் புலனுணர்வு, பிரச்சனை தீர்க்கும் திறன், சுய மேலாண்மை, கவனக்குறைவு, கவனம் செலுத்தல் போன்ற செயல்பாடுகளில் குறைபாடு ஏற்படுகிறது.

வெரிகோஸ் வெயின் நோயின் அறிகுறிகள் என்ன தெரியுமா

டிமென்ஷியா வர காரணம் என்ன..? 

Dementia Meaning in Tamil

நரம்பு செல்களில் ஏற்படும் விரிவான சேதமே டிமென்ஷியாவின் அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது. இது மூளைக்கு செல்லும் இரத்த குழாய்களில் உண்டாகும் சேதத்தினால் ஏற்படுகிறது. பெரும்பாலும் இந்த நோய் வயதானவர்களை தான் பாதித்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை. டிமென்ஷியா இளம்பெண்களையும், குழந்தைகளையும் தான் அதிகம் பாதிக்கிறது. சரி இந்த நோயின் அறிகுறிகளை கீழ் காணலாம்.

👉குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் 5 உணவுகள்

டிமென்ஷியா அறிகுறிகள்: 

  1. நினைவாற்றல் இழப்பு,
  2. மோசமான தீர்ப்பு மற்றும் குழப்பம்
  3. பேசுவது, புரிந்துகொள்வது மற்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவது, அல்லது வாசிப்பது, எழுதுவது போன்றவற்றில் சிரமம்.
  4. அடிக்கடி எல்லா விஷயங்களையும் மறப்பது
  5. ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்வது
  6. எதிலும் ஆர்வம் இல்லாமல் இருப்பது
  7. இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்து கொள்வது
  8. கோபத்தை வெளிப்படுத்துவது
  9. மற்றவர்களின் மேல் அக்கறை இல்லாமல் இருப்பது
  10. மனஅழுத்தம்
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement