வெரிகோஸ் வெயின் அறிகுறிகள்
ஹலோ நண்பர்களே..! நாம் வாழும் இந்த அவசர உலகம் எவ்வளவு மாறி இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். எங்கு பார்த்தாலும் புகை மண்டலமும், சுற்றுசூழல் மாசும், துரித உணவுகளும் தான் காணப்படுகிறது. அதிலும் இந்த அவசர உலகில் பலரும் சாப்பிட கூட நேரமில்லாமல் வேலைக்கு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் சத்தான உணவுகளை உண்டு நோய்களை விரட்டி வந்தார்கள். ஆனால் நாம் மருந்து மாத்திரைகளை உண்டு புதிது புதிதாக நோய்களை கண்டுபிடித்து வருகின்றோம். இது தான் உணவே மருந்து என்ற காலம் மாறி மருந்தே உணவு என்ற காலத்தில் வாழ்ந்து வருகின்றோம். இந்த நிலையில் யாருக்கு என்ன நோய் வரும் என்றே சொல்லமுடியாது. அதுபோல ஒவ்வொரு நோய்க்கும் ஒரு அறிகுறி இருக்கும். அந்த வகையில் இன்று வெரிகோஸ் வெயின் நோயின் அறிகுறிகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
இதெல்லாம் இருந்தால் மன அழுத்தம் நோயின் அறிகுறிகளாம் |
வெரிகோஸ் வெயின் என்றால் என்ன..?
வெரிகோஸ் வெயின் என்பது நரம்புகள் சுருட்டிக்கொண்டு சருமத்தின் மேற்பரப்பில் காணப்படும் பாதிப்பாகும். இது கால் நரம்புகளையே அதிகமாக பாதிக்கிறது. இந்த நோய் வருவதற்கு முக்கிய காரணம், நாம் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தாலோ அல்லது நடந்தாலோ நரம்புகளின் அழுத்தம் காரணமாக உடலின் கீழ் பகுதியான காலில் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
தினமும் 10 மணி நேரத்திற்கு மேல் நின்று வேலை செய்பவர்களுக்கு, ‘வெரிகோஸ் வெயின்’ எனப்படும் நரம்பு சுருட்டும் பிரச்சனை ஏற்படுகிறது. அதுபோல உடல் பருமன் இருந்தால், இப்பிரச்சனை வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதிக உடல் எடையால், இது ஆண்களை விட, பெண்களை அதிகம் பாதிக்கிறது என்றும் கூறப்படுகிறது.
இந்த நோய் இருப்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டறியலாம். அதை இங்கு காண்போம்.
ஃபைப்ராய்டு கருப்பை கட்டி அறிகுறிகள் என்ன தெரியுமா |
வெரிகோஸ் வெயின் அறிகுறிகள்:
- கால்களில் வலி அல்லது கனமான உணர்வு
- கீழ் கால்களில் எரியும், துடித்தல், தசைப்பிடிப்பு மற்றும் வீக்கம்
- நீண்ட நேரம் உட்கார்ந்து அல்லது நின்றால் மோசமான வலி.
- ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நரம்புகளைச் சுற்றி அரிப்பு
வீங்குவது - வலிக்கிற நரம்புகளைச் சுற்றியுள்ள தோலின் நிறத்தில் மாற்றங்கள்
- அடர் ஊதா அல்லது நீல நிற நரம்புகள் தெரியும்
- நரம்புகள் முறுக்கப்பட்டதாகவும், வீங்கியதாகவும் தோன்றும்.
இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டும்.
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |