மன அழுத்தம் நோயின் அறிகுறிகள்
நம் முன்னோர்கள் காலத்தில் உணவே மருந்து என்றிருந்தது. ஆனால் தற்போது மருந்தே உணவாகி விட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நோய்கள் வருவது இயல்பாகி விட்டது. இதனை சரி செய்வதற்கு பலரும் மாத்திரைகளை தான் பயன்படுத்துகின்றனர். நோய் வந்த பிறகு அதற்கான தீர்வை காண்பதை விட நோய்கள் வருவதற்கு முன்னரே தெரிந்து கொள்வது நோயை சரி செய்வதற்கு உதவியாக இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் மன அழுத்தம் நோயின் அறிகுறிகள் பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
மன அழுத்தம் என்றால் என்ன.?
மன அழுத்தம் என்பது உடல் உடனடி அச்சுறுத்தல் அல்லது ஆபத்தில் இருப்பதாக நினைக்கும் போது உங்கள் நரம்பு மண்டலத்தின் முதன்மையான மற்றும் உடனடி பதில் மன அழுத்தம்.
மன அழுத்தம் என்பது உங்கள் உணர்வுகளை உயர்த்துவதன் மூலம் உங்களைப் பாதுகாக்க உங்கள் உடல் முயல்கிறது மற்றும் உங்கள் மன அழுத்தத்தின் மூலத்தில் கவனம் செலுத்தி எச்சரிக்கையாக இருங்கள். அதிக அவசரகால சூழ்நிலைகளில், அல்லது உற்சாகமான, ஆபத்தான அல்லது அச்சுறுத்தும் சூழ்நிலைகளில் உடல் அட்ரினலின் மற்றும் கார்டிசோல் உள்ளிட்ட மன அழுத்த ஹார்மோன்களின் எழுச்சியை வெளியிடுவதாக அறியப்படுகிறது.
மன அழுத்தம் மற்றும் கோபம் குறைய யோகாசனம்..!
மன அழுத்தம் வருவதற்கான காரணங்கள்:
சில உறவுகள் மூலமாகவும் மன அழுத்தம் ஏற்படும்.
பொருளாதார பிரச்சனையாலும் மன அழுத்தம் ஏற்படும்.
திருமணம், இடமாற்றம், அதிக வேலை போன்ற பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது.
மன அழுத்தம் நோயின் அறிகுறிகள்:
உங்களிடம் நம்பிக்கை குறைந்து, எப்பொழுதும் கவலையாக இருப்பீர்கள்.
மகிழ்ச்சியாக இருக்க கூடிய நேரத்தில் உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.
சில விஷயங்களுக்கு எரிச்சல் அல்லது விரக்தி அடைவீர்கள்.
சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே இருக்காது,இதனால் பசியின்மை காணப்படும்.
தூங்குவதில் பிரச்சனை ஏற்படும்.
உடல் சோர்வாக காணப்படுவீர்கள்.
முக்கியமான விஷயங்களை நினைவில் வைத்து கொள்வதற்கு தடுமாறுவீர்கள்.
தலைவலி, வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
தற்கொலை எண்ணங்கள் ஏற்படும்.
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |