Black Fungus Symptoms in Tamil
வணக்கம் பிரண்ட்ஸ்..! நாம் வாழும் இந்த அவசர உலகம் எப்படி இருக்கிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். எங்கு பார்த்தாலும் புகை மண்டலமும் சுற்று சூழல் மாசும் தான் காணப்படுகிறது. இப்படி ஒரு சூழலில் நாம் வாழ்வதே ஆச்சர்யம் தான். அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் நோய்களை உணவு மூலம் குணப்படுத்தினார். ஆனால் மருந்து மாத்திரைகளை உணவாக உண்டு உயிர் வாழ்கின்றோம்.
இவ்வளவு ஏன் நோய்க்கு மருந்து கண்டுபிடித்த காலம் மாறி புதிது புதிதாக நோய்களை கண்டறிந்து வருகின்றோம். இப்படி ஒரு காலத்தில் யாருக்கு என்ன செய்யும் என்றே சொல்ல முடியாது. சரி நாமும் இந்த பதிவின் வாயிலாக தினமும் ஒவ்வொரு நோய்க்கான அறிகுறிகளை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று கருப்பு பூஞ்சை நோய் இருந்தால் என்ன அறிகுறிகள் தோன்றும் என்று பார்க்கலாம் வாங்க..!
வெரிகோஸ் வெயின் நோயின் அறிகுறிகள் என்ன தெரியுமா |
கருப்பு பூஞ்சை நோய் வர காரணம் என்ன..?
கருப்பு பூஞ்சை என்பது ரைசோபஸால் ஏற்படும் கடுமையான ஆக்கிரமிப்பு பூஞ்சை தொற்று ஆகும். இது பொதுவாக நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களில் காணப்படுகிறது.
கருப்பு பூஞ்சை பாதிப்பு என்பது ஒருவகையான பூஞ்சைத் தொற்று காரணமாக ஏற்படுகிறது. சுற்றுச்சூழலில் பூஞ்சை வித்துக்களுடன் தொடர்பு ஏற்படுபவர்களுக்கு, இந்த கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பூஞ்சைத் தொற்று தோலில் இருக்கும் காயங்கள் மூலம் உடலுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தும்.
இதெல்லாம் இருந்தால் மன அழுத்தம் நோயின் அறிகுறிகளாம் |
கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள்:
- இருமல்
- காய்ச்சல்
- மார்பு வலி
- மூக்கு
- சைனஸ் நெரிசல்
- கடுமையான தலைவலி
- மூச்சுத் திணறல்
- தோல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது
- மூக்கில் அடைப்பு மற்றும் இரத்தப்போக்கு
- கண்களின் வீக்கம் மற்றும் கண்ணில் வலி
- கண் இமைகள் பாதிப்பு
- மங்கலான மற்றும் இறுதியாக, பார்வை இழப்பு.
- மூக்கைச் சுற்றி கருப்பு நிற புள்ளிகள் இருக்கலாம்.
மேற்கண்ட அறிகுறிகள் ஒருவருக்கு இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |