கருடன்,குருவி, காகம் மூன்றில் ஒன்றை உங்கள் மனதில் நினைத்துக்கொள்ளுங்கள் உங்களை பற்றி கூறுகிறேன்

3 birds personality test in tamil

கருடன், குருவி, காகம் மூன்றில் ஒன்றை உங்கள் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள் உங்களை பற்றி கூறுகிறேன்

ஹாய் நண்பர்களே..! இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்களை பற்றி அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறதா..? அப்படி என்றால் கருடன், குருவி, காகம் மூன்றில் ஒன்றை உங்கள் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மனதில் நினைத்த பறவை உங்களை பற்றி என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்.

கருடன்:

நீங்கள் கருடனை மனதில் நினைத்து கொண்டீர்கள் என்றால் இது உங்களுக்கானது. கருடன் பறவை இனத்திருக்கே தலைவன் அல்லது ராஜாவாக திகழக் கூடியது. அதனை போலவே நீங்களும் நீங்கள் இருக்கக்கூடிய இடத்தில் தலைமையில் அல்லது உங்களுக்குத்தான் முதன்மை கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பீர்கள்.

வானத்தில் மிக உயரத்தில் பறக்கக்கூடியது இந்த கருடன் அதனை போலவே  உங்களுடைய எண்ணங்களும்,செயல்களும் மற்றவர்களை விட உயர்வாக இருக்கும். மேலும் உங்களுடை இலட்சியங்களும் மற்றவர்களைவிட உயர்வாக தான் இருக்கும்.

தன்னை விட பெரிய பறவையாக  இருந்தாலும் அதனுடன் சண்டை போடும் துணிவு கருடனுக்கு உண்டு. அதே போல நீங்களும் உங்களுடைய கருத்துக்களை துணிவாக மற்றவர்களிடம் எடுத்துரைப்பீர்கள்.

குருவி:

நீங்கள் குருவியை மனதில் நினைத்து கொண்டீர்கள் என்றால் இது உங்களுக்கானது. பொதுவாக நீங்களும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புவீர்கள். தனது துணையுடன் அதிக நேரத்தை செலவளிக்கக்கூடிய பறவைகளில் குருவியும் ஒன்று. அது போலவே நீங்களும் உங்களின் அன்புக்குரியவர்களுடன் அதிக நேரத்தை செலவழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பீர்கள்.

மிக முக்கியமாக காதல் உணர்வை அதிக அளவு வெளிப்படுத்தக்கூடிய பறவைகளில் குருவியும் ஒன்று அதனை போலவே நீங்களும் காதல், அன்பு, அரவணைப்பு போன்றவற்றை அதிக அளவு வெளிப்படுத்தும் நபர்களாக இருப்பீர்கள்.

குருவி தனக்காகவும் தனது குடும்பத்திற்காகவும்  பொறுப்பாக கூடு கட்டி ஒற்றுமையாக வாழும் அதனை போலவே நீங்களும் உங்கள் குடும்பத்திற்காக எதையும் செய்வீர்கள்.

பார்ப்பதற்கு மிகவும் அழகாவும் சிரித்த முகம் உடையவர்களாகவும் இருப்பீர்கள்.

காகம்:

நீங்கள் காகத்தை மனதில் நினைத்து கொண்டீர்கள் என்றால் இது உங்களுக்கானது. கூட்டமாக வாழக்கூடிய பறவை இனங்களில் இதுவும் ஒன்று. அதனை போல் நீங்களும் அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்பவர்களாக இருப்பீர்கள். காலத்திற்கு ஏற்றது போல்  நடந்து கொள்வீர்கள். மேலும் எல்லா சூழ்நிலைகளிலும் வளைந்து கொடுத்து நடந்து கொள்பவராக இருப்பீர்கள்.

நமது சாஸ்திரத்தில் காகத்தை முன்னோர்களின் மறு பிறவியாக கூறப்படுகிறது. அதனால் நீங்களும் முன்னோர்களின் மீது அதிக மதிப்பு கொண்டவர்களாக இருப்பீர்கள். ஆபத்து  ஒன்று வந்து விட்டால் அனைத்து காகங்களும் ஒன்றுகூடிவிடும்.

அதனை போலவே நீங்களும் உங்களின் அன்புக்குரியவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அதனை தீர்க்க உங்களால் முடிந்த அளவு உதவிப் புரிவீர்கள்.

திருநீறு, குங்குமம், சந்தனம் இதில் ஏதேனும் ஒன்றை உங்கள் மனதில் நினைத்து கொள்ளுங்கள் உங்களை பற்றி சொல்கிறேன்

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்