பொங்கல் பண்டிகை வரலாறு | Pongal History in Tamil

Advertisement

பொங்கல் பண்டிகையின் வரலாறு | History of Pongal Festival in Tamil

History of Pongal Festival in Tamil: தமிழர் திருநாளான பொங்கலை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். தமிழர் வாழும் அனைத்து இடங்களிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையில் ஒன்று இந்த தை பொங்கல். சூரிய கடவுளுக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விதமாக இந்த பண்டிகை தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. நாம் இந்த தொகுப்பில் பொங்கல் பண்டிகையின் வரலாறு பற்றி பார்க்கலாம் வாங்க.

தைப்பொங்கல் வரலாறு 

Pongal History in Tamil – பொங்கல் பண்டிகையின் வரலாறு  

  • பொங்கல் பண்டிகை தை மாதம் 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆடி மாதத்தில் பயிரிடப்பட்ட நெல் தை மாதத்தில் அறுவடை செய்யப்பட்டு நல்ல விளைச்சலை தரும் மாதமே இந்த பொங்கல். இந்த விளைச்சலை கொடுத்த இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக சர்க்கரை பொங்கல் சமைத்து மாட்டுக்கும், சூரியனுக்கும் படைத்து நாமும் உண்டு வாழ்வது தான் இந்த பொங்கல் பண்டிகை.
  • பொங்கல் விழா வருவதற்கு முன்னரே பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க ஆரம்பித்துவிடுவார்கள். வீட்டை சுத்தப்படுத்துவது, வீட்டிற்கு புதிய சுண்ணாம்பு அடிப்பது போன்று ஊரே திருவிழா கோலத்தில் காணப்படும். பொங்கல் விழா இந்த திருநாட்டில் நான்கு நாள் கொண்டாடப்படுகிறது.

ராம ஜென்ம பூமி வரலாறு

போகி பொங்கல் வரலாறு – Pongal History in Tamil – Pongal Celebration in Tamil:

pongal history in tamil language

  • மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று, பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் இந்த போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலுமே போகி பண்டிகையாகும்.
  • பழைய பொருட்களையும், உபயோகமற்ற பொருட்களையும் தூக்கி எரியும் வழக்கம் உள்ளது. வீட்டில் உள்ள பொருட்களை மட்டுமல்ல நம் மனதில் இருக்கும் தேவையற்ற எண்ணங்களையும், தீய எண்ணங்களையும் விட்டொழிப்பதற்காக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகை அனைவரது வீட்டிலும் கொண்டாட மாட்டார்கள் ஒரு சில வீட்டில் கொண்டாடுவார்கள்.
  • போகி பண்டிகை கொண்டாடும் வீட்டின் கூரையில் பூலாப்பூ, காப்பு கட்டுதல் சொருகுவார்கள். சங்க காலத்தில் இந்த தினத்தன்று ஒப்பாரி வைப்பது பழக்கமாக இருந்தது என ஆய்வுகள் கூறுகின்றன, ஒப்பாரி வைப்பதற்கான காரணம் புத்தர் இறந்த தினமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

தைப்பொங்கல்: – பொங்கல் பண்டிகை வரலாறு – Pongal Pandigai in Tamil:

pongal history in tamil

  • தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு முதல் நாள் புது பானை, புது ஆடை வாங்குவார்கள். வீட்டின் வாசலில் பொங்கல் கோலம் போடுவார்கள்.
  • வீட்டின் முன் புது அடுப்பு வைத்து, புது பானையில் புது அரிசி இட்டு முற்றத்தில் பொங்கல் வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். பொங்கலுக்கு புதிய கரும்பு, புதிய காய்கறிகள் என அனைத்தையும் புதியவைகளையே பயன்படுத்துவார்கள். பானையில் மஞ்சள், குங்குமம் வைத்து பொங்கலிட ஆரம்பிப்பார்கள். பொங்கல் பொங்கி வரும்போது குடும்பத்தில் உள்ள அனைவரும் பொங்கலோ! பொங்கல் என்று கூச்சலிட்டு வரவேற்பார்கள்.
  • பொங்கல் பொங்கியதும் அதை சூரிய தேவனுக்கும், கால் நடைக்கும் படைத்து விட்டு பின்பு உண்பார்கள்.

மாட்டு பொங்கல் வரலாறு- பொங்கல் பண்டிகை வரலாறு:

பொங்கல் பண்டிகை வரலாறு

  • தைப்பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுவது மாட்டு பொங்கல். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழா கொண்டாடப்படுகிறது.
  • மாட்டு பொங்கலன்று மாட்டு தொழுவத்தை மற்றும் கால்நடைகளை சுத்தம் செய்து அதன் கொம்புகளில் மஞ்சள், குங்கும பொட்டு வைத்து, மாலை அணிவித்து, தொழுவத்திலே பொங்கல் செய்து வழிபடுவார்கள்.
  • தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மாட்டு பொங்கலன்று கொண்டாடப்படுகிறது. மதுரையில் உமிழ் நீர் தெளித்தல் என்ற மரபு பின்பற்றப்படுகிறது.

காணும் பொங்கல் வரலாறு – Pongal History in Tamil:

history of pongal festival in tamil

  • இந்த பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது காணும் பொங்கல் என்று அழைப்பார்கள். இது பெண்களுக்கான பண்டிகை ஆகும். காணும் பொங்கலன்று மக்கள் அனைவரும் தங்களது உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர்.
  • பண்டிகையன்று பல போட்டிகள் ஒவ்வொரு ஊர்களிலும் நடக்கும். கோலப்போட்டி, உரி அடித்தல், மரம் ஏறுதல் போன்ற போட்டிகள் இருக்கும்.
  • நான்கு நாட்களும் மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> Varalaru

 

Advertisement