முப்படை தளபதி பிபின் ராவத் வரலாறு | Bipin Rawat History Tamil

bipin rawat history tamil

பிபின் ராவத் வரலாறு | Bipin Rawat History Tamil

Bipin Rawat History Tamil: நாம் இந்த நாட்டில் சுதந்திரமாக உலாவி வருவதற்கும், பயமில்லாமல் நிம்மதியாக உறங்குவதற்கும் முக்கிய பங்கு வகிப்பவர்கள் ராணுவ வீரர்கள். ராணுவ வீரர்களின் பங்கு இந்த உலகத்தில் மிகவும் முக்கியமானது. நம் உயிரை காப்பதற்காக பாடுபடும்  பல ராணுவ வீரர்களில் மிகவும் போற்றுதலுக்குரிய ராணுவ வீரர்களுள் ஒருவர் பிபின் ராவத் அவர்கள். நாம் இந்த தொகுப்பில் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் அவர்களின் வாழ்க்கை வரலாறை பற்றி அறிந்து கொள்ளலாம் வாங்க.

பிறப்பு – பிபின் ராவத் வாழ்க்கை வரலாறு:

பிபின் ராவத் வரலாறு

 • இவர் மார்ச் மாதம் 16ம் தேதி 1958-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் பவுரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் பிபின் லக்ஷ்மண் சிங் ராவத் . இவர் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவர். இவருடைய தந்தையின் பெயர் லெட்சுமண் சிங் ராவத். இவருடைய குடும்பத்தில் உள்ளவர்கள் வம்சாவளியாக ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். இவருடைய மனைவி பெயர் Madhulika Rawat. இவருக்கு இரண்டு மகள்கள்.

கல்வி – ராணுவ தளபதி பிபின் ராவத் -Ppn Ravath History in Tamil:

 • பிபின் ராவத் அவர்களின் தந்தை இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக இருந்தவர். இவர் தனது கல்வியை டேராடூன் மற்றும் சிம்லாவில் படித்து முடித்தார். ராணுவ கல்வியை டேராடூனில் படித்து பயிற்சி பெற்றவர்.
 • பாதுகாப்பு பிரிவு உயர் அதிகாரி பட்ட படிப்பை வெலிங்டனில் முடித்தார். பின்னர் தனது (ராணுவ) உயர் கல்வியை அமெரிக்காவில் உள்ள ஃபோர்ட் லீவன்வொர்ட் எனும் ஊரில் படித்து முடித்தார். மெட்ராஸ் பல்கலை கழகத்தில் M.Phil பட்டம் பெற்றார். மேலாண்மை மற்றும் computer science படிப்பிலும் பட்டம் பெற்றுள்ளார்.

ராணுவ பயணம் – Bipin Rawat History Tamil:

 முப்படை தளபதி பிபின் ராவத் வரலாறு

 • 1978-ம் ஆண்டு முதல் இவரது ராணுவ பயணம் தொடர ஆரம்பித்தது. டிசம்பர் மாதம் 1978-ம் தந்தை பணியாற்றிய குழுவிலேயே ராணுவத்தில் இருக்கும் கூர்க்கா துப்பாக்கி படை ஐந்தாவது பட்டாலியனில் பணியாற்ற தொடங்கினார்.
 • ராணுவத்தில் இவர் திறமையின் காரணமாக மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார். 19-வது காலாட்படை உரி பிரிவில் உயர் அதிகாரியாக பொறுப்பு வகித்தார். ராணுவத்தில் இவர் செய்த முக்கிய பணியாக இவர் நடத்திய உரி தாக்குதல் இருந்தது.
 • மத்திய அரசால் ராணுவ தலைமை அதிகாரியாக 2016-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். முன்பு இருந்த ராணுவ ஜெனரல் தல்பீர்சிங் சுஹாக் Retired-க்கு பின் இந்திய ராணுவத்தின் 27வது தலைமை அதிகாரியாக டிசம்பர் மாதம் 31-ம் தேதி பொறுப்பேற்றார்.
 • 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி இந்திய ராணுவத்தின் முப்படை தளபதியாக பிபின் ராவத் அவர்கள் மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜனவரி மாதம் 2020-ம் ஆண்டு முப்படைகளின் தளபதியாக பொறுப்பேற்றார். இதற்கு முன்னர் மூன்று படைகளுக்கு வெவ்வேறுத் தலைவர்கள் இருந்தனர். இவர் தான் இந்தியாவின் முதல் முப்படை ராணுவ தளபதியாவார்.

மறைவு – பிபின் ராவத் வரலாறு:

 • ராணுவத்தில் பல சாதனைகளை புரிந்த பிபின் ராவத் அவர்கள் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி இந்த மண்ணுலகை விட்டு விண்ணுலகை அடைந்தார்.

விருதுகள் மற்றும் பதக்கங்கள் – History of Bipin Rawat in Tamil:

 • பரம் விசிஷ்ட் சேவா விருது,
 • யுத்தம் யுத்த சேவா விருது
 • சேனா விருது
 • அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் (Ati Vishisht Seva Medal)
 • யுத் சேவா பதக்கம் (Yudh Seva Medal)
 • விஷிஷ்ட் சேவா பதக்கம் (Vishisht Seva Medal )
 • Wound Medal
 • சாமன்ய சேவா விருது
 • சிறப்பு சேவை பதக்கம்
 • ஆபரேஷன் பராக்ரம் பதக்கம் (Operation Parakram Medal)
 • Sainya Seva Medal
 • உயர் சேவை பதக்கம் (High Altitude Service Medal)
 • விதேஷ் சேவா பதக்கம்
 • 50th Anniversary of Independence Medal
 • 30, 20 & 9 Years Long Service Medal
 • மொனுஸ்கோ (Monusco)
வீரமங்கை வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு
ரவீந்திரநாத் தாகூர் வரலாறு

 

இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil