வீரமங்கை வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு | Velu Nachiyar History in Tamil

Advertisement

வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாறு | Rani Velu Nachiyar History in Tamil

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் வீரமங்கை வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றினை படித்து தெரிந்துக்கொள்ளுவோம். ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் வீரமங்கை வேலுநாச்சியார். இந்திய சுதந்திரத்திற்காக வெள்ளைய கும்பினி அரசை எதிர்த்து போரிட்ட முதல் பெண்மணி என்று ஜான்சிராணியையே இன்று வரை சொல்லி வருகிறார்கள். ஜான்சிராணிக்கு முன்னரே ஆங்கிலேயரை எதிர்த்த முதல் வீரமங்கை வேலுநாச்சியார். ஆம்.. ஜான்சிராணி 1830-ம் ஆண்டில் பிறந்தார். ஆனால் இவருக்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1730-ஆம் ஆண்டிலே வேலுநாச்சியார் பிறந்துவிட்டார். வாங்க வேலுநாச்சியாரின் வரலாற்றினை விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

velunachiyar in tamil

வேலுநாச்சியார் பெற்றோர்

  • ராமநாதபுரத்தில் வேலுநாச்சியார் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் செல்லமுத்து தேவர் தாயாரின் பெயர் சத்தந்தி’ முத்தாத்தாள் ஆவார். இவர்களுக்கு 1730 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு வேலுநாச்சியார் என்று பெயர் சூட்டினார்கள். அரசுரிமைக்கு ஆண் வாரிசை தான் அரசர்கள் எதிர்ப்பார்ப்பார்கள். ஆனால் பிறந்ததோ பெண் குழந்தை. வேலுநாச்சியாரின் தந்தை பெண் குழந்தை பிறந்துவிட்டது என்று மனம் களங்கவில்லை.
  • தன்னுடைய மகளுக்கு குதிரை ஏற்றம், வாள்வீச்சு, சிலம்பம், வளரி என்ற ஆயுதத்தை கையாளல் போன்ற போர்கள பயிற்சிகளை கற்றுக் கொடுத்தார். தன்னை சுற்றி பத்து பேர்களை நிற்க வைத்து கடுமையாக பயிற்சி பெற்றார். பயிற்சிகளையும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டார். வேலுநாச்சியாருக்கு தாய்மொழியான தமிழை மட்டும் சொல்லிக்கொடுக்காமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம், உருது, சமஸ்கிருதம், ஆங்கிலம் என ஆறு மொழிகளையும் கற்றுக்கொடுத்தார்.

 வேலுநாச்சியாரின் திருமண வாழ்க்கை:

  • அன்றைய காலத்தில் எல்லாம் பெண்களுக்கு 12 அல்லது 13 வயதில் திருமணம் செய்து வைப்பது வழக்கம். தன்னுடைய மகளுக்கு ஒரு வீரன் தான் மாப்பிள்ளையாக வர வேண்டும் என்று நினைத்தார். சிவகங்கை சீமையை ஆளும் முத்துவடுக நாதரே தன் மகளுக்கு ஏற்ற மணாளர் என்பதை உணர்ந்து அவருக்கே 1746-ல் திருமணம் முடித்து வைத்தார். முத்து வடுகநாதருக்கும் வேலுநாச்சியாரின் வீர செயல்கள் மிகவும் பிடித்து இருந்தது. வேலுநாச்சியாருக்கு பிறகு முத்து வடுகநாதர் கௌரி நாச்சியாரை மணந்தார்.

வேலுநாச்சியார் பற்றி கட்டுரை

வேலுநாச்சியாரின் கணவர் வீரமரணம் அடைந்த கதை:

  • சிவகங்கை சீமையை நல்ல விதமாக ஆட்சி செய்து வந்தார் முத்து வடுகநாதர். அவர் நேராகவே சென்று தனது விவசாய பணிகளை கவனித்துக்கொள்வார். இவருக்கு உதவி செய்வதற்காக மந்திரி தாண்டவராய பிள்ளை, மருது சகோதரர்கள், வேலு நாச்சியார் உடன் இருந்தனர். சிவகங்கை சீமையானது நல்ல சீரும் சிறப்புடன் இருப்பதாக தெரிந்துக்கொண்டான் ஆற்காடு நவாப் முகமது அலி.
  • நவாப் முகமது அலி சிவகங்கை சீமைக்கு சிறிய படையினை அனுப்பி வைத்து கப்பம் கேட்டு அனுப்பினார். உடனே முத்துவடுகநாதர் யார் யாருக்கு கப்பம் கட்ட வேண்டுமென்று கேட்டார். நவாப் யாரது இந்த தேசத்திற்கு மன்னரா? சல்லிக்காசு கூட கப்பம் என்ற பெயரில் கொடுக்கமாட்டேன் என்று கூறினார் முத்துவடுகநாதர்.
  • படைத்தளபதி வந்த பத்தாம் நாளே முகம்மது அலியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ‘பாளையக்காரர்களில் நீங்களும் பூலித்தேவனும் தான் கப்பம் கட்ட மறுக்கிறீர்கள். கப்பம் கட்டாத பூலித்தேவனும் நாட்டை விட்டே துரத்தினதை அறிவீர்கள் அல்லவா? உடனே கப்பம் கட்டுங்கள். இல்லையெனில் சிவகங்கையில் நீங்கள் ஆட்சி ஆள முடியாது. கடிதத்தை படித்தவுடன் முத்துவடுகநாதருக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. அப்போது வேலுநாச்சியாருக்கு பிறந்த மகள் வெள்ளச்சி நாச்சியாருடன் கொல்லங்குடியில் தங்கியிருந்தார்.
  • 1772-ல் நவாப் சிவகங்கை மீது போர் தொடுத்தான். முத்துவடுகநாதரும் தம் படையினரோடு போரினை எதிர்த்தார். வடுக நாதரின் வாள் சுழற்சிக்கு முன்பாக நவாப் படையினரால் தாக்கு பிடிக்க முடியவில்லை. பெருத்த இழப்புகளோடு பின் வாங்கி ஓடினர். நவாப் மற்றும் கும்பினி படையினர். அடிபட்ட நவாப் மீண்டும் நம்மளை சீண்டாமல் இருக்க மாட்டார்கள் என்று எண்ணி மருது சகோதரர்களுக்கு கடுமையான பயிற்சியை வழங்க உத்தரவு வழங்கினார்.
  • “மிஸ்டர் பான்ஸோர், சிவகங்கை சீமையை கைப்பற்ற வேண்டும். முத்து வடுக நாதரை கைது செய்ய வேண்டும். அவரை நேரடியாக தாக்கினால் வெற்றி பெற முடியாது. நமது ஒற்றர்களை, அவரின் செயல்பாடுகளை கண்காணிக்கச் செய்து தக்க சமயத்தில் தாக்கி சீமையை நாம் கைப்பற்ற வேண்டும் என்று கூறினான் நவாப் முகம்மது அலி.
  • 772-ல் ஆண்டு, ஜுன் 21-ம் தேதி முகம்மது அலி மகன் உம்தத்-உல்-உம்ரா, தளபதி ஜோசப் ஸ்மித் தலைமையில் சிவகங்கையை நோக்கி படையுடன் சென்றான். இன்னொரு – கும்பினி தளபதி பான்ஸோர் தனது படையுடன் சிவகங்கையை நோக்கி சென்றான். ஆனால் உம்தத்-உல்-உம்ரா, சிவகங்கையை விட்டு சோழபுரத்தை கைப்பற்ற சென்றான். பான்ஸோர் சிவகங்கை சென்றான்.
  • 25.06.1772 அன்று நள்ளிரவு பூஜையில் கலந்துக் கொள்ள காளையார் கோவிலில் காண்டிருக்கும் காளிஸ்வரரை தரிசிக்க தன் இளைய மனைவி கௌரி நாச்சியாருடன் முத்துவடுகநாதர் கோவிலில் தங்கியிருந்தார். கோவிலுக்கு வெளியே சிறு படை இருந்தது. திடீரென்று கோவிலை சுற்றி தளபதி பான்ஸோர் பெரும்படை நின்றது. என்னிடம் நேரில் மோத தைரியம் இல்லாமல் நட்ட நடு ராத்திரியில் இறைவனுக்கு பூஜை செய்யும் போதா, வந்து தாக்குவது’ என்று குமுறிய முத்துவடுகநாதர் கும்பினி படையோடு மோதினார்.
  • பான்ஸோர் பீரங்கியோடு வந்திருந்தான். அதன் மூன் வாள்வீச்சு எடுபடவில்லை. கடும்போரில் பல வெள்ளைய தலைகளை பறித்த முத்துவடுகநாதர், அப்போரில் வீரமரணம் அடைந்தார்.பான்ஸோரிடம் இருந்து வேலு நாச்சியார் மட்டும் தப்பித்து சிவகங்கை சென்றார்.

வேலுநாச்சியாரின் அரசியல் வாழ்க்கை:

  • வேலுநாச்சியார் சிவகங்கை சென்றதுடன் மருது சகோதரர்கள் தாண்டவராயன் பிள்ளை ஆகியோருடன் சேர்ந்து திண்டுக்கல் சென்று அவர் ஹைதர் அலியை சந்தித்தார். ஹைதர் அலி உதவியுடன் அங்கு 8 ஆண்டுகள் தங்கி போருக்கு வியூகம் வகுத்து ஹைதர் அலி வழங்கிய காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை மற்றும் பீரங்கி ஆகியவைகளுடன் சிவகங்கை நோக்கி திரும்பினார்.
  • சிவங்கங்கை திரும்பிய வேலுநாச்சியார் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து பான்ஸோரை தாக்கி போரிட்டார்.தன்னுடைய பெண் படை வீரர்களின் தளபதியாக இருந்த குயிலி தானே ஒரு மனித வெடிகுண்டாக மாறி ஆயுத கிடங்கில் குதித்து உயிரிழப்புப்படை தாக்குதல் நடத்தியதில் அதனையும் அளிக்க இறுதியாக பான்ஸோரை வென்று மீண்டும் சிவகங்கை மண்ணை கைப்பற்றினார்.

வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு:

  • 1780-ம் ஆண்டு பொது மக்களின் வெற்றி முழக்கத்தோடும் பெரும் வரவேற்போடும் 8 ஆண்டுகள் கழித்து தமது மண்ணில் காலடி பதித்தவர் வேலு நாச்சியார். மீண்டும் சிவகங்கைக்கு வேலு நாச்சியார் அரசியனார். மருது சகோதரர்கள் மந்திரியானார்கள். வேலு நாச்சியார் அரசி ஆனதை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

வெள்ளச்சி நாச்சியார் அரசியாதல்:

  • வேலு நாச்சியாருக்கு 50 வயது ஆனதால் தனது மகளை சிவகங்கை சீமைக்கு அரசியாக்கினாள். மருது சகோதரர்களும் அதற்கு ஆதரவு அளித்தார்கள்.
  • மக்களுக்கான சேவையில் தன்னை முழுவதும் வேலு நாச்சியார் அர்ப்பணித்து கொண்டவர். நாட்டில் விவசாயம் பெருகியது, பல ஊர்களை சாலைகளை அமைத்து கொடுத்தார், வணிக வளர்ச்சி சிறப்பாக இருந்தது, பழைய கோவில் கோபுரத்தினை அழகாக உயர்த்தி காட்டினார், கோவில்களுக்கு தேரினை மரத்திலே காணிக்கையாக செலுத்தியவர்.

வேலுநாச்சியாரை காத்த உடையாள்:

  • முத்து வடுக நாதர் போரில் வீரமரணம் அடைந்தார். மருதுசகோதரர்கள், பிள்ளை ஆகியோருடன் வேலுநாச்சியார் குதிரையில் தப்பிச் சென்று கொண்டிருந்தார். அவர்கள் தப்பி செல்வதை அறிந்த கும்பினியார் அவர்களை பின் தொடர்ந்து சென்றார். சிவகங்கை சீமை என்றாலே மருது சகோதரர்கள் பெயர்கள் பளிச்சிடும். இவர்கள் இல்லாமல் சிவகங்கை இல்லை. அது போன்று வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறும் இவர்கள் இல்லாமல் முழுமை பெறாது.
  • பெரிய மருதுவுக்கு 19 வயதும், சின்ன மருதுவுக்கு 15 வயதும் ஆன போது அவர்களை மொக்கை பழனியப்ப சேர்வை, சிவகங்கை மன்னரிடம் அழைத்துச் சென்றார். காட்டிற்குள் சென்றதும் ஒரு புலி, மரத்தின் மீதிருந்தப்படி அரசர் மேல் பாய, உடன் வந்த படைவீரர்கள், புலியின் சீற்றத்திற்கு பயந்து ஓடினர். பெரிய மருது புலியின் தலையை தாக்க, சின்ன மருது அதன் வாலைப் பிடித்து சுழற்றி வீசி எறிந்தார்
  • இவர்களின் வீரத்தினை பார்த்துவிட்டு முத்துவடுகநாதர் பெரிய மருதுவை போர் படைத்தளபதியாகவும், சின்ன மருதுவை மாதிரியாகவும் பணிக்கு அமர்த்திக்கொண்டார்.

ஏற்பட்ட போர்:

  • இராணிக்கும், மருதுவிற்கும் இடையே 1788-ம் ஆண்டு கருத்து வேறுபாடு அதிகமாக ஏற்பட்டது. சிவகங்கைக்குள் ஒரு பிரிவு ஏற்பட்டது. அடிக்கடி இரு பிரிவிற்கும் சண்டை ஏற்பட்டு கொண்டே இருந்தது.
  • இராணியின் ஆட்கள், மருது சகோதரர்களின் ஆட்களால் மிகவும் பாதிக்கப்பட்டனர். சிவகங்கையில் மருது சகோதரர்கள், இராணி இருவரும் சண்டைப் போட்டுக் கொள்வதை அறிந்த நவாப் இதுதான் தக்க சமயம் என்று தனது பிரதான மந்திரியை சிவகங்கைக்கு அனுப்பி வைத்தான்.
  • வேலுநாச்சியாருக்கும், நவாப் மந்திரிக்கும் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி சிவகங்கை சீமையை விட்டு மருது சகோதரர்கள் விலகி செல்ல வேண்டும். தனது பிள்ளைகளாய் இருந்த மருது சகோதரர்கள் தன்னோடு முரண்டு பிடித்து போனது கால கொடுமையாக இருந்தது. நாம் பிரிந்து இருந்தாலும் நமது எண்ணம் முழுவதும் சிவகங்கையை வேறு எவரும் ஆளக் கூடாது என்பதுதான் வேலுநாச்சியார் எண்ணமாக இருந்தது.
  • நாம் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் சீமைக்கு தான் ஆபத்து. நாம் சமரசம் செய்து கொள்வோம் வாருங்கள்.’ மருது சகோதரர்கள் இராணியின் அழைப்பை ஏற்று சிவகங்கை சென்றனர்.
  • நாம் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் சீமைக்கு தான் ஆபத்து. நாம் சமரசம் செய்து கொள்வோம் வாருங்கள்.’ மருது சகோதரர்கள் இராணியின் அழைப்பை கற்று சிவகங்கை சென்றனர்.

வேலுநாச்சியாரின் இறப்பு:

  • மக்கள் மனதில் எப்போதும் நிலைத்து வாழும் வேலு நாச்சியார் அவர்கள் 23.12.1796-ஆம் ஆண்டு உலகத்தை விட்டு உயிர் துறந்தார்.
  • இந்திய வரலாற்றிலே கணவன் இறந்தும் உடன்கட்டை ஏறாமல் தன்னுடைய கணவனை கொன்றவனை நான் கொல்லாமல் சாக மாட்டேன் என்று சவால் விட்டவர் வேலு நாச்சியார்.
  • இந்திய சுதந்திர போராட்ட களத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக முதல் முதலாக போர் தொடுத்த வீரப்பெண்மணி இவரே. பல பெண்களுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவர் வீரப்பெண்மணி வேலு நாச்சியார்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil

 

Advertisement