Happy Birthday Wishes in Tamil Words
இந்த உலகத்திற்கும் உங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்திய நாள் நீங்கள் பிறந்த மால் தான். சிலர் பிறந்த நாளின் முக்கியத்துவத்தை உணரவேயில்லை. சில பேர் நான் பிறந்த நாள் கொண்டாடுவதையே நிறுத்திவிட்டேன் என்று சலிப்பாக சொல்லுகின்றனர். நாம் இந்த பூமியில் பிறப்பதன் மூலம் பல்வேறு சொந்தங்களை ஏற்படுத்துகின்றோம். சிலருக்கு செல்லப்பிள்ளையாக கூட மாறுகின்றோம். பிறந்த நாளை கொண்டாடுகிற அளவிற்கு நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் சின்ன வாழ்த்து மற்றும் மகிழ்ச்சியான வார்த்தைகள் போதும் பிறந்த நாளை சந்தோஷப்படுத்துவதற்கு. உங்கள் அன்புக்கு உரியவர்களின் பிறந்த தினத்தில் சிறந்த வாழ்த்துக்களை கூறி அவர்களை மகிழ்ச்சிப்படுத்துங்கள். உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்துக்களை கூறுவதற்கு கவிதை மூலம் வாழ்த்துக்களை தொகுத்துள்ளோம். அதை பற்றி காண்போம் வாங்க..
Birthday Wishes in Tamil Text:
நீண்ட ஆயுளோடும் நல்ல சுவற்றோடும்
இறைவன் அருளோடும் தாய் தந்தை ஆசையோடும்
மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் நூற்றாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
வேஷம் போடுபவர்களுக்கு கிடைக்கும்
மதிப்பும் மரியாதையும் பாசம் காட்டுபவர்களுக்கு கிடைப்பதில்லை.
இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
குடிசையில் இருப்பவரெல்லாம் ஏழையும் அல்ல,
மாளிகையில் இருப்பவர் எல்லாம் பணக்காரனும் அல்ல,
மனதிருப்தியோடு இருப்பவனே உண்மையான பணக்காரன்.
அனைத்து செல்வங்களும் பெற்று பெருமையுடன் வாழ
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உனக்கு வரும் சோதனைகள் அனைத்தும்
வாழ்த்து சொல்லும் சாதனையாக மாற வேண்டும்.
சிறிய வயதில் வரும் கனவுகள் அனைத்தும்
சீராகவும் செம்மையாகவும் வளர வேண்டும்.
இதழ்கள் சிரித்து வாழ இதயம் இமயத்தை தொட வேண்டும்
அம்மா பிறந்தநாள் கவிதை வரிகள்..!
உன் உதடுகள் புன்னகையாய் மலரட்டும் உன் உள்ளம்
அன்பால் பெருகட்டும்
உன் கனவுகள் அனைத்தும் விண்ணை தொடட்டும்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
உங்கள் கனவுகள், எண்ணங்கள்
அனைத்தும் நிறைவேறும் படி
இந்த பிறந்தநாள் அமைந்திட
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
பிறப்பின் நகர்வு அற்புதமானது
ஒவ்வொரு முறை வரும் போதும்
மிகவும் அழகாகிறது.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
உன் பிறந்தநாளைப் பார்த்து
மற்ற நாட்களெல்லாம்
பொறாமைப்படுகிறது.
உன் பிறந்தநாளில்
பிறந்திருக்கிலாம் என்று.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
என்றென்றைக்கும் ஆரோக்கியத்தோடும்
நிறைவான தன்னம்பிக்கையோடும்
உன் வாழ்க்கையை வெல்ல
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வித்தியாசமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்..!
இதுபோன்று வாழ்த்துக்கள் சம்மந்தப்பட்ட பதிவுகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Wishes in Tamil |