உங்க Name K Start ஆகுதா அதிர்ஷ்டசாலி நீங்க | K Letter Name Characteristics in Tamil
K Letter Name Characteristics in Tamil – ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. பொதுவாக எல்லாரோட பெயர்களும் எதாவது ஒரு எழுத்தில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. அந்த வகையில் ஆங்கில எழுத்துக்களில் k என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கிறதா? அப்படியென்றால் உங்கள் குணாதிசயங்கள் எப்படி இருக்கும்? நீங்கள் எப்படி பட்டவர்கள் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க.
K என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்குதா? அப்போ நீங்க இப்படித்தான் இருப்பீங்க..!
கிங் என்றால் மிக பெரிய அம்சத்தை கொண்ட வார்த்தையே K என்ற எழுத்தில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. ஆக உங்கள் பெயர் K-யில் ஆரம்பிக்கிறது என்றால் கண்டிப்பாக நீங்கள் ஆண்களாக இருந்தால் ராஜாவை போன்றும், பெண்களாக இருந்தால் ராணியை போன்ற என்னத்தை கொண்டவராக இருப்பீர்கள்.
K என்ற எழுத்து நியூமராலஜி வருசையில் 2 ஆகும். இது சூரிய குடும்பத்தில் எதை குறிக்கும் அப்படின்னா சந்திரனை குறிக்கும். 9 கிரகங்களில் மிகவும் குளிர்ச்சியான கிரகம் எது என்றால் அது சந்திரனை மட்டும் தான் குறிக்கிறது. ஆக K எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர்களை கொண்டவர் பொதுவாக மிகவும் கூல் டைப் என்று சொல்லலாம். எந்த விஷயத்தையும் மிகவும் சகஜமாக எடுத்துக்கொள்பவர் ஆவார்.
கிங் என்றால் மிக பெரிய அம்சத்தை கொண்ட வார்த்தையே K என்ற எழுத்தில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. ஆக நீங்கள் ஏதாவது துறைகளில் பணிபுரியும் போது அவற்றில் மிகவும் கிங் போன்று தலைமை தாங்குபவராக தான் இருப்பீர்கள்.
உங்களிடம் அதிகளவு தாய்மை உணர்வு இருக்கும். அனைவரிடமும் பாசமாக பழகக்கூடியவர், உங்களிடம் மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை இருக்கும். அதிகளவு இரக்ககுணம் கொண்டவராக தான் நீங்கள் இருப்பீர்கள்.
நீங்கள் பொதுவாக அனைவரிடமும் மிக எளிதாக பழகிவிடுவீர்கள். ஆனால் என்ன உங்களுக்கு அமையும் வாழ்கை துணை கண்டிப்பாக அப்படி இருக்க வாய்ப்பில்லை இந்த விஷயத்தில் மட்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘A’ வாக இருந்தால் உங்களின் குணம் இப்படி தான் இருக்கும்..!
K என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கிறது என்றால் கண்டிப்பாக நீங்கள் கலைத்துறைகளில் சிறந்து விளங்க கூடியவராக இருப்பீர்கள். அல்லது அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பீர்கள்.
உங்கள் உடன்பிறப்புகள் உங்களிடம் உதவியை எதிர்பார்ப்பதற்கு முன்பே அவர்களது கஷ்டங்களை புரிந்து கொண்டு உதவி செய்வீர்கள்.
இருப்பினும் உங்களுடைய மனம் மிகவும் மென்மையானது என்பதால் உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் உங்கள் ஏதாவது விளையாட்டிற்கு சொன்னால் கூட அதற்கு அதிகளவு உணர்ச்சிவசப்படுவீர்கள்.
சிறிய வயதில் நீங்கள் பொறுப்பில்லாமல் சுற்றிக்கொண்டு இருந்திருந்தாலும், குறிப்பிட்ட வயது வந்ததும் நீங்கள் மிகவும் பொறுப்பானவராக இருப்பீர்கள்.
சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொண்டு, அந்த சூழ்நிலையையும் நல்ல முறையாக கொண்டு செல்லும் வல்லமை உங்களிடம் இருக்கும்.
குறிப்பாக உங்கள் வாழ்க்கையில் லட்சியம், குறிக்கோளுடன் இருப்பீர்கள் அந்த குறிக்கோளில் வெற்றி பெற அதிக முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
தன்னை விரும்பும் நபரையும், தான் விரும்பும் நபரையும் ரொம்ப அன்பாகவும், கனிவாகவும் பார்த்துக்கொள்வார்கள். அக்கறையாகவும் இருப்பார்கள். ஆக தன்னை விரும்பும் நபரையும், தான் விரும்பும் நபரையும் நன்றாக பார்த்துக்கொள்வார்கள்.
இவர்கள் மனதில் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி நினைத்து கொண்டே இருப்பார்கள். அதாவது நடந்தது, நடந்துகொண்டு இருப்பது, நடக்க இருப்பது அது போன்ற விஷயங்களை பற்றி நினைத்து கொண்டே இருப்பார்கள்.
இவர்கள் ஒருபோதும் சோம்பேறியாக இருக்க மாட்டார்கள், கடின உழைப்பாளி என்று சொல்லலாம். அதேபோல் ஒரு வேலையை செய்யும்போது மிகவும் கவனமாக செய்து முடிப்பார்கள்.
தன்னம்பிக்கையும், துணிவும் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு சில சமயம் கோவம் அதிகமாக வரும்.
கடவுள் நம்பிக்கை இவர்களிடம் கொஞ்சம் குறைவாக தான் இருக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 S என்ற வார்த்தையில் பெயர் கொண்வர்கள் இப்படித்தான் இருப்பார்களாம்..!
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |