பேஷியல் டிப்ஸ் (Facial tips in tamil)..!
பேஷியல் டிப்ஸ்: இந்த பகுதியில் இந்தியர்களின் முகத்திற்கேற்ப SPL ஃபேஷியல் அழகு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த நிறத்தவர்களாக இருந்தாலும் அவர்களது நிறத்தை மேலும் அதிகரிக்க இவற்றில் SPL ஃபேஷியல் அழகு குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த முறைகள் அனைத்தையும் தொடர்ந்து செய்துவர நீங்களே அதிக பலனை உணர முடியும். சரிவாங்க SPL ஃபேஷியல் பற்றி தெரிஞ்சிக்கலாம்..!
![]() |
கருமையான சருமத்திற்கு – பேஷியல் டிப்ஸ் (Facial tips in tamil):-
பலருக்கு இருக்கும் பிரச்சனை இது, சூரிய கதிர்களின் தாக்குதலால் பாதிக்கப்படும் முகங்களுக்காகவே இருக்கிறது பிளாட்டினம் ஃபேஷியல். இந்த ஃபேஷியல்(பேஷியல் டிப்ஸ்) முகத்தில் இருக்கும் கருமையை நீக்கி முகத்தை பொலிவுபெற செய்யவும், பளபளப்பான சருமத்தையும் தரும்.
மேலும் இறந்த செல்களை நீக்கி எப்பொழுதும் முகத்தை வெண்மையாக வைத்துக்கொள்ள உதவுகிறது பிளாட்டினம் ஃபேஷியல்.
வறட்சியடைந்த சருமத்திற்கு – பேஷியல் டிப்ஸ் (Facial tips in tamil):-
மிகவும் வறட்சியடைந்த சருமமா உங்களுக்கு?
வறட்சியின் காரணமாக சருமம் எப்பொழுதும் சொரசொரப்பா இருக்கா?
அப்படினா கிளாசிக் ஃபேஷியல் மற்றும் பிளான்ட் ஸ்டெம் செல் ஃபேஷியல். இவை முகத்திற்கு முதலில் அதிக ஈரப்பதத்தை தந்து, பிறகு முக செல்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.
மேலும் தாவர செல்களை கொண்டு முகத்தில் ஃபேஷியல் செய்தால் முகம் மிகவும் இளமையாக இருக்கும்.
முகப்பருக்கள் நீங்க – பேஷியல் டிப்ஸ் (Facial tips in tamil) :-
பெரும்பாலும் அனைவருக்கும் இருக்கும் பிரச்சனை இது. முகப்பருக்கள் முக அழகையே கொடுத்து விடும்.
இதற்காகவே இருக்கிறது ஜெம் ஃபேஷியல் பல வகையான நவ ரத்தினங்களை கொண்டு முகத்தை அழகு செய்வதே இந்த ஃபேஷியல் முறையின் முக்கிய பங்கு.
இந்த ஃபேஷியல் செய்வதினால் முகப்பருக்கள் நீங்கி இழந்த சரும அழகை மீண்டும் தரும்.
![]() |
எண்ணெய் சருமத்திற்கு – பேஷியல் டிப்ஸ் (Facial tips in tamil):-
எண்ணெய் பசை இருக்கும் சருமத்திற்கு இருக்கவே இருக்கு பேர்ல் ஃபேஷியல், சில்வர் ஃபேஷியல். இவற்றை சருமத்திற்கு செய்து வர முகத்தில் வழியும் எண்ணெய் பசை நீங்கி முகத்தை அழகாக வைத்துக்கொள்கிறது.
இந்த ஃபேஷியல் செய்வதற்கு முன் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
பிறகு மாஸ்குகள் போன்றவற்றை பயன்படுத்தி வர எண்ணெய் வடிந்து கொண்டிருக்கும் முகம் அழகாக மாறும். அதன் பிறகு மேல் கூறப்பட்டுள்ள பேர்ல் ஃபேஷியல், சில்வர் ஃபேஷியல் செய்யலாம்.
கலவை சருமத்திற்கு – பேஷியல் டிப்ஸ் (Facial tips in tamil):-
சிலரின் முகம் எந்தவித முக சாயலையும் சார்ந்திருக்காது.
அவர்களுக்கென்று ஒரு அழகிய முக பூச்சு இருக்கிறது.
பிளாட்டினம் மற்றும் ஜெம் ஆகிய இரு வகை ஃபேஷியல்களும் இவர்களின் முகத்திற்கு மிக அழகாக இருக்கும்.
அத்துடன் இளமையான முக அழகையும் இது ஏற்படுத்தும்.
முகத்தில் உள்ள எல்லா வகை அழுக்குகளையும் நீக்கி அழகிய தோற்றத்தை கொடுக்கும்.
Facial Tips in Tamil – முக்கிய குறிப்பு:-
எந்தவகை ஃபேஷியல்களும் தொடர்ந்து செய்யாமல் 4 – 6 வார இடைவெளி இட்டு திரும்ப ஃபேஷியல் செய்ய வேண்டும்.
இவ்வாறு இடைவெளி விட்டு ஃபேஷியல் செய்யாமல் தொடர்ந்து செய்து வந்தால் முகத்தின் அழகை குறைக்க நீங்களே வழிவகுக்கின்றீர்கள் என்று தான் சொல்லமுடியும்.
எந்த வகை ஃபேஷியல் செய்தாலும் முகத்தை நன்கு சுத்தம் செய்து விடவும். முகத்தில் ஃபேஷியல் செய்த பின் நன்கு மசாஜ் செய்தால்தான் முக அழகு அதிகரிக்கும்.
இவற்றின் நன்மைகள்:-
முகத்தில் ஃபேஷியல் செய்வதினால் முக அழகை மேம்படுத்த இயலும்.
முகம் எப்போதும் இளமையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
ஃபேஷியல் செய்வதினால் முகத்தில் எந்தவித பிரச்சனைகளும் ஏற்படாது.
முக தசைகளை செயல்படுத்தி முகத்தை பளிச்சென்று காட்டும்.
![]() |
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |