கூந்தல் வளர்ச்சிக்கு வீட்டிலே இயற்கையான கற்றாழை ஹேர் ஆயில் | How to Make Aloe Vera Hair Oil in Tamil

How to Make Aloe Vera Hair Oil in Tamil

கற்றாழை எண்ணெய் செய்முறை | Homemade Aloe Vera Hair Oil in Tamil

அன்றைய காலத்தில் வாழ்ந்த பெரியவர்கள் உடலை மட்டும் ஆரோக்கியமாய் வைத்தது இல்லாமல் கூந்தலையும் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். அதற்கு முக்கிய காரணம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டதால் தான். இன்றைய சந்ததியினருக்கு பெரும்பாலும் இருக்கும் பிரச்சனையில் ஒன்று முடி உதிர்வு. இந்த முடி உதிர்வு பிரச்சனை ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி தொடர்ந்து இருந்துக்கொண்டே இருக்கிறது. பலர் தங்களுக்கு முடி அதிகமாக உதிர்ந்துக்கொண்டே இருப்பதால் கடைகளில் விளம்பரப்படுத்தும் பலதரப்பட்ட ஹேர் ஆயிலை பயன்படுத்துவதால் அதிக முடி இழப்பு பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு வீட்டிலே தயாரிக்கப்பட்ட கற்றாழை ஹேர் ஆயில் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். வாங்க அதனை எப்படி நாமே தயாரிக்கலாம் என்று தெரிந்துக்கொள்ளலாம்..

முடி வளர ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி?

கற்றாழை ஹேர் ஆயில் – தேவையான பொருள்:

  • கற்றாழை – 1 நறுக்கியது
  • தேங்காய் எண்ணெய் – 1/2 பவுல்
  • சுடு தண்ணீர் – சிறிதளவு

கற்றாழை ஹேர் ஆயில் செய்முறை விளக்கம்:

ஸ்டேப்: 1

கற்றாழை எண்ணெய் தயாரிப்பதற்கு முதலில் சுத்தமான ஒரு கற்றாழையை கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

ஸ்டேப்: 2

அடுத்து ஒரு சிறிய பவுலில் உருக்கி வைத்துள்ள தேங்காய் எண்ணெயை அதில் சேர்க்கவும்.

ஸ்டேப்: 3

தேங்காய் எண்ணெயை சேர்த்த பிறகு அதனுடன் நறுக்கி வைத்துள்ள கற்றாழையை சேர்க்கவும்.

ஸ்டேப்: 4

அடுத்து சூடான நீரில் கற்றாழை எண்ணெயினை வைத்து 5-10 நிமிடம் வரை ஹீட் செய்யவும்.

ஸ்டேப்: 5

எண்ணெயை ஒரு மரக் கரண்டியைப் பயன்படுத்தி கிளறவும்.

ஸ்டேப்: 6

இப்போது கற்றாழை எண்ணெயை சிறிது நேரம் ஆற வைக்கவும்.

30 நாட்களில் முடி நீளமாக வளர செய்யும் இந்த ஹேர் ஆயில்..!

 

ஸ்டேப்: 7

ஆற வைத்த பிறகு எண்ணெயை வடிகட்டி கொள்ளவும். அந்த ஹேர் ஆயிலை தலையில் நன்றாக மசாஜ் போன்று செய்து 40 நிமிடம் முதல் 1 மணிநேரம் தலையில் ஊறவைக்க வேண்டும்.

ஸ்டேப்: 8

அதன்பிறகு மைல்டான ஷாம்பூவால் தலையை வாஷ் செய்துக்கொள்ளலாம்.

நன்மைகள்:

  • கற்றாழை ஹேர் ஆயிலானது புதிதாக முடி வளர்ச்சி அடைவதற்கு உதவியாக இருக்கிறது.
  • கற்றாழையில் அதிகமாக வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்துள்ளதால் முடி உதிர்வினை தடுத்து நிறுத்துகிறது.
  • இந்த ஹேர் ஆயிலை தொடர்ந்து பயன்படுத்துவதால் முடி வளர்ச்சி அடைவதோடு மட்டுமல்லாமல் உதிராமலும் இருக்கும்.
  • கற்றாழை ஹேர் ஆயில் கூந்தலை மிருதுவாக வைத்திருக்கும்.
 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Natural Beauty Tips