நரை முடி கருமையாக டிப்ஸ்
ஹாய் நண்பர்களே வணக்கம்.. பொதுவாக பலருக்கு முன் நெற்றி பகுதியில் மட்டும் வெள்ளை முடி அதிகமாக தெரியும். மற்ற பகுதியில் முடி கருமையாக தான் இருக்கும். இருப்பினும் முன் நெற்றியில் மட்டும் அந்த வெள்ளை முடியை பார்ப்பதற்கு மிகவும் அசிக்கமாக இருக்கும். இதற்காக கடைகளில் விற்கப்படும் ஹேர் டையை வாங்கி பயன்படுத்துவார்கள். இருப்பினும் அவற்றில் அதிகளவு கெமிக்கல் நிறைந்திருக்கும், இதனால் அதிக பக்க விளைவுகளை தான் நாம் சந்திக்க வேண்டியதாக இருக்கும். அப்பறம் எப்படி வெள்ளை முடியை கருப்பாக மாற்ற முடியும் என்று யோசிக்கலாம். அதற்கும் வழியிருக்கிறது. இயற்கையான முறையில் ஹேர் டை தயார் செய்து பயன்படுத்தலாம். அதை எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
ஹெர்பல் ஹேர் டை தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்:
- கருஞ்சீரகம் – இரண்டு ஸ்பூன்
- மருதாணி பவுடர் – மூன்று ஸ்பூன்
- அவுரி பொடி – ஐந்து ஸ்பூன்
ஹெர்பல் ஹேர் டை செய்முறை:
கருஞ்சீரகத்தை மிக்ஸியில் செய்து நன்றாக பொடி செய்துகொள்ளுங்கள், அதன் பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடம் அரைக்கவும்.
பிறகு அரைத்த கருஞ்சீரகத்தை ஒரு சுத்தமான பவுலில் மாற்றி கொள்ளுங்கள். பிறகு இதனுடன் மருதாணி பவுடர் மூன்று ஸ்பூன், அவுரி பொடி ஐந்து ஸ்பூன் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
அவ்வளவு தான் கலவை தயார் இதனை நரைமுடி உள்ள இடத்தில் அப்ளை செய்து 1/2 மணி நேரம் காத்திருக்கவும். பிறகு தலை அலசுங்கள் வாரத்தில் ஒரு முறை இந்த டிப்ஸை பாலோ செய்து வந்தாலே தலையில் எங்கு நரைமுடி இருந்தாலும் அது கருமையாக மாறிவிடும்.
ஒருமுறை ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்..
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 ஒரு நிமிடத்தில் அனைத்து நரை முடியும் கருப்பாக மாறும் அஞ்சனக்கல் ஹேர் டை அதிசயம் ஆயுசுக்கும் நரை முடி வராது
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |