பொடுகு தொல்லையிலிருந்து விடுபட டிப்ஸ் !!!

Advertisement

பொடுகு நீங்க எளிய முறை ..!

தற்போது அனைவரும் சந்திக்கின்ற ஒரு மிகப்பெரிய பிரச்சனை எது அப்படினு கேட்டால் கண்டிப்பாக அது பொடுகு தொல்லை என்று தான் சொல்வாங்க. இந்த பொடுகு பிரச்சனை வந்துவிட்டால் முடி அதிகமாக உதிர்ந்து கொட்டும் அதுமட்டுமின்றி மீன் செதில் போன்று தலை முழுவதும் வெள்ளையாக காணப்படும்.

newபொடுகு தொல்லை தீர இதை TRY பண்ணுங்க..!

இந்த பொடுகு தொல்லை ஏற்படுவதற்கு என்ன காரணம், பொடுகு நீங்க என்ன வழிகள் உள்ளன என்று இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!

இவற்றின் முக்கிய காரணங்கள்:

தலையில் பொடுகு வர காரணம் பல இருக்கின்றது. தலைமுடியை நன்கு அலசாமல் இருப்பது, தலைமுடியை எண்ணெயை பசையுடன் அழுக்காக வைத்துக்கொள்வது, தலைகுளித்துவிட்டு தலைமுடியை நன்றாக துவட்டாமல் இருப்பது.

தேவையற்ற கெமிக்கல் ஷாம்பு பயன்படுத்துவது மற்றும் பொடுகு உள்ளவரின் சீப்பை பயன்படுத்துவது என்று பல காரணங்கள் உள்ளது.

இந்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். இல்லை என்றால் முடி அதிகமாக உதிர ஆரம்பித்துவிடும்.

சரிவாங்க இன்று www.pothunalam.com-யில் பொடுகு தொல்லை நீங்க என்னென்ன டிப்ஸ் இருக்கிறது என்று பார்ப்போம்.

பொடுகு நீங்க எளிய முறை (Dandruff home remedies in tamil)

பொடுகு நீங்க எளிய முறை 1:

இந்த பொடுகு நீங்க மலை வேம்பு இலையுடன் துளசி இலையை சேர்த்து நன்றாக அரைத்து சாறு பிழிந்து தலைமுடியின் வேர் பகுதியில் நன்றாக தேய்க்க வேண்டும்.

பின்பு சிறிது நேரம் கழித்து தலைகுளிக்கவும். இந்த முறையை தொடர்ந்து செய்து வர பொடுகு தொல்லை படிப்படியாக குறையும்.

பொடுகு நீங்க எளிய முறை 2:

பொடுகு நீங்க எளிய முறை – சின்ன வெங்காயத்தை உங்களது தலைமுடிக்கு தேவையான அளவு எடுத்து கொண்டு, அவற்றை அரைத்து கொள்ளவும். பின்பு அவற்றை வடிகட்டி கொள்ளவும்.

இப்பொழுது அவற்றை தலையில் தேய்த்து 15 நிமிடம் வரை தலையில் வைத்திருந்து பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் தலை குளிக்கவும்.

இந்த முறை பொடுகு குணமாக ஒரு சிறந்த வழியாகும்.

பொடுகு நீங்க எளிய முறை 3:

பொடுகு நீங்க (dandruff home remedies in tamil) வெந்தியத்தை இரவில் ஊறவைத்து அவற்றை மறுநாள் காலை எடுத்து மிக்சி அல்லது ஆட்டுக்கல்லில் செம்பருத்தி இலையையும் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து 1/2 மணி நேரம் வரை காத்திருக்கவும்.

பின்பு தலை குளிக்க பொடுகு தொல்லை நீங்கும். அதுமட்டுமின்றி உடல் உஷ்ணம் தணியும்.

பொடுகு நீங்க எளிய முறை 4:

வறட்சியின் காரணமாக கூட பொடுகு பிரச்சனை ஏற்படுகிறது. எனவே வாரத்தில் ஒரு முறையாவது நல்லெண்ணெயை தலையில் தேய்த்து குளித்து வர பொடுகு தொல்லை நீங்கும்.

பொடுகு தொல்லை தீர இயற்கை வழிகள்..!

பொடுகு தொல்லை தீர இயற்கை வழிகள் 1:

இந்த பொடுகு நீங்க (dandruff home remedies in tamil) தலைக்கு பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயை சாதாரணமாக தலைக்கு தேய்க்க பயன்படுத்தாமல் அவற்றில் சிறிதளவு வசம்பு பவுடரை சேர்த்து ஊறவைத்து பின்பு அவற்றை தலை தேய்க்க பயன்படுத்தினால், பொடுகு நீங்கும்.

பொடுகு தொல்லை தீர இயற்கை வழிகள் 2:

இந்த பொடுகு குணமாக (dandruff home remedies in tamil) மருதாணி இலையை அரைத்து கொள்ளவும். அவற்றுடன் தயிர் மற்றும் இரண்டு துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து சில நேரங்கள் மட்டும் காத்திருக்கவும்.

பின்பு தலை அலசவும். இவ்வாறு வாரத்தில் ஒருமுறை செய்து வர பொடுகு தொல்லை நீங்கும்.

ஆண்களின் முகத்தை பட்டுபோல வைக்கும் பப்பாளி இலை..!

பொடுகு தொல்லை தீர இயற்கை வழிகள் 3:

இந்த பொடுகு குணமாக (dandruff home remedies in tamil) ஆலிவ் எண்ணெயுடன் சிறிதளவு இஞ்சி சாறு கலந்து, தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து தலைகுளிக்க பொடுகு தொல்லை நீங்கும். இந்த முறையை தொடர்ந்து செய்து வர வேண்டும்.

பொடுகு தொல்லை தீர இயற்கை வழிகள் 4:

இந்த பொடுகு குணமாக தேங்காய் எண்ணெயுடன் வேப்ப எண்ணெயை கலந்து தலையில் தேய்த்து வர பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம்.

பொடுகு நீங்க மருந்து ..!

பொடுகு நீங்க மருந்து 1:

இந்த பொடுகு குணமாக பாலுடன் மிளகு தூள் சேர்த்து தலையில் தேய்க்கவும். பின்பு 15 நிமிடங்கள் வரை காத்திருக்கவும்.

பின்பு தலை குளிக்க, பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம்.

பொடுகு நீங்க மருந்து 2:

இந்த பொடுகு தொல்லை நீங்க (dandruff home remedies in tamil) ஒரு கப் மரிக்கொழுந்துடன், 1/2 கட்டு வெந்தியகீரையை சேர்த்து நன்றாக அரைத்து தலைமுழுவதும் பேக் போட்டு 10 நிமிடம் வரை தலையில் வைந்திருந்து பின்பு தலை தேய்த்து குளிக்க தலையில் இருக்கும் பொடுகு நீங்கி விடும்.

பொடுகு நீங்க மருந்து 3:

இந்த பொடுகு நீங்க (dandruff home remedies in tamil) முட்டையின் வெள்ளை கருவை தனியாக எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு 2 ஸ்பூன் கலந்து தலையில் தேய்த்து வர பொடுகு தொல்லை முற்றிலும் நீங்கும்.

பொடுகு நீங்க மருந்து 4:

இந்த பொடுகு நீங்க (dandruff home remedies in tamil) வேப்பங்கொட்டைகளின் தோலை அரைத்து விழுதாக்கி,  நல்லெண்ணெய் தேய்த்து தலையை வாரி, தலை முழுவதும் வேப்ப விழுதைத் தடவி பேக் போடவும்.

ஒரு மணி நேரம் கழித்து சீப்பால் வாரினால், பேன், ஈறு வெளியில் வந்துவிடும். பொடுகு தொல்லையும் மறையும்.

பொடுகு குணமாக டிப்ஸ் ..!

பொடுகு குணமாக டிப்ஸ் 1:

இந்த பொடுகு நீங்க (dandruff home remedies in tamil) தேங்காய் எண்ணெயுடன் சிறிதளவு கற்பூரத்தை போட்டு ஊறவைக்கவும்.

பின்பு அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வர பொடுகு தொல்லை மறைந்து விடும்.

பொடுகு குணமாக டிப்ஸ் 2:

இந்த பொடுகு நீங்க (dandruff home remedies in tamil) வாரத்தில் ஒரு முறை தலைக்கு தயிர் தேய்த்து குளித்து வந்தாலும் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம்.

பொடுகு குணமாக டிப்ஸ் 3:

பொடுகு நீங்க (dandruff home remedies in tamil) எலுமிச்சை சாறுடன் தேங்காய் எண்ணெயை கலந்து தலையில் தேய்த்தாலும் அல்லது தயிருடன் எலுமிச்சை சாறை கலந்து தலையில் தேய்த்து 10 நிமிடம் வரை காத்திருக்கவும் பின்பு தலை குளித்து வர பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம்.

வாரத்தில் ஒருமுறை மேல் கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்-யில் ஏதாவது ஒன்றை பின்பற்றினாலே போதும் பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம்.

newபேரழகு முகத்திற்கான SPL சந்தனம் ஃபேஸ் பேக்!!! சந்தனம் அழகு குறிப்பு..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000..!
Advertisement