பொடுகு தொல்லை நீங்க உப்பு போதுமா ? TRY பண்ணுங்க

பொடுகு நீங்க

பொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வழிகள்..!

பொதுவாக ஆண்கள், பெண்கள் இருவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை பொடுகு தொல்லைதான்.

இது பொடுகு தொல்லை (dandruff home remedies in tamil) வருவதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், ஒழுங்கற்ற பராமரிப்பு, தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பதினாலும், சரியாக தலை அலசாமல் இருப்பதினாலும், தினமும் தலைக்கு ஷாம்பு போடுவதினாலும் என பல காரணங்கள் இருக்கின்றது.

இந்த பிரச்சனையை சரிசெய்வதற்கு உப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. முக்கியமாக உப்பு சருமத்தை அழகுபடுத்த மட்டுமின்றி தலைமுடியில் இருக்கும் பொடுகையும் போக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது.

பொடுகு நீங்க சில இயற்கை வழிகள்

சரி இந்த பகுதில் பொடுகு நீங்க (dandruff home remedies in tamil) என்னென்ன இயற்கை வழிகள் உள்ளன என்பதை பற்றி இப்போது நாம் காண்போம் வாங்க..!

பொடுகு வர காரணம் :

தலையில் பொடுகு வர காரணம் பல இருக்கின்றது. தலைமுடியை நன்கு அலசாமல் இருப்பது, தலைமுடியை எண்ணெயை பசையுடன் அழுக்காக வைத்துக்கொள்வது, தலைகுளித்துவிட்டு தலைமுடியை நன்றாக துவட்டாமல் இருப்பது.

தேவையற்ற கெமிக்கல் ஷாம்பு பயன்படுத்துவது மற்றும் பொடுகு உள்ளவரின் சீப்பை பயன்படுத்துவது என்று தலையில் பொடுகு வர காரணம் பல இருக்கின்றது.

இந்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். இல்லை என்றால் முடி அதிகமாக உதிர ஆரம்பித்துவிடும்

பொடுகு நீங்க எளிய வழிகள்

பொடுகு நீங்க உப்பு:

உப்பு தலைமுடியில் இருக்கும் பொடுகை வெளியேற்ற மிகவும் பயன்படுகிறது. எனவே உப்பு இரண்டு ஸ்பூன் எடுத்து கொண்டு, சிறிதளவு தண்ணீரில் கலந்து கொள்ளவும்.

பின்பு அவற்றை தலைமுடியின் வேர்ப்பகுதியில் மென்மையாக 10-15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

பின்பு மைல்டு ஷாம்பு போட்டு தலை அலச வேண்டும்.

இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் தலையில் இருக்கும் பொடுகு பிரச்சனை விரைவில் குணமாகும்.

பொடுகு நீங்க எளிய முறை

1. பொடுகு தொல்லை தீர (dandruff home remedies in tamil) வாரத்தில் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து தலை தேய்த்து குளித்து வர பொடுகு தொல்லை நீங்கும்.

2. பொடுகு நீங்க எளிய முறை (dandruff home remedies in tamil) நெல்லிக்காய் பொடி, வெந்தய பொடி மற்றும் சிறிதளவு தயிர் சேர்த்து தலை தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின்பு தலை தேய்த்து குளித்து வர பொடுகு தொல்லை நீங்கும்.

பொடுகு நீங்க எலுமிச்சை :

எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தாலோ.

அல்லது:

எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.

பொடுகு குணமாக வினீகர் :-

பொடுகு குணமாக (dandruff home remedies in tamil) வினீகர் சமமான அளவில் தண்ணீரையும், வினீகரையும் சேர்த்து ஒரு கலவையை தயாரித்துக் கொள்ளுங்கள்.

இந்த கலவையை தலைச் சருமத்தில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். காலை எழுந்தவுடன் மிதமான ஷாம்புவால் தலை முடியை அலசுங்கள்.

அழகான சருமம் பெற அற்புதமான அழகு குறிப்புகள்!!!

பொடுகு குணமாக முட்டை :-

பொடுகு குணமாக (dandruff home remedies in tamil) இரண்டு முட்டைகளை எடுத்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள். அந்த கலவையை தலைச் சருமத்தில் தடவி, பின் ஒரு மணி நேரம் கழித்து முடியை அலசுங்கள்.

இந்த சிகிச்சை பொடுகை ஒழிக்க மட்டுமல்லாமல், முடி உதிர்வை கட்டுப்படுத்தவும் உதவும்.

பொடுகு குணமாக பாதாம் எண்ணெய் :-

பொடுகு நீங்க (dandruff home remedies in tamil) பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தி, தலைச் சருமத்திற்கு மசாஜ் செய்யுங்கள்.

இரவு முழுவதும் நன்கு ஊற விட்டு, காலையில் எழுந்ததும், தலையை ஷாம்பு கொண்டு அலச வேண்டும்.

பொடுகு நீங்க கற்றாழை :-

பொடுகு தொல்லை தீர (dandruff home remedies in tamil) குளிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் கற்றாழை ஜெல்லை, தலைச் சருமத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள்.

20 நிமிடங்கள் கழித்து ஒரு ஷாம்புவை கொண்டு தலையை அலசிக் கொள்ளவும். இவ்வாறு செய்வதினால் பொடுகு தொல்லை நீங்கும்.

பொடுகு தொல்லை தீர வேப்பிலை:

சில வேப்ப இலைகளை எடுத்து, அதை நன்கு பேஸ்ட் செய்து, அதனை அப்படியே தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து, வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் தலையை அலச வேண்டும்.

இவ்வாறு செய்தால் பொடுகு தொல்லை நீங்கி தலை முடி போஷாக்குடன் இருக்கும்.

பொடுகு குணமாக பழங்கள்:

சமமான அளவைக் கொண்ட, ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்களை கொண்டு ஒரு பசையை தயாரித்துக் கொள்ளுங்கள். அதனை தலை முடி ஸ்கால்ப்பில் நன்றாக தடவிக் கொள்ளுங்கள்.

20 அல்லது 30 நிமிடங்கள் கழித்து ஷாம்புவால் தலையை அலச வேண்டும். இவ்வாறு செய்வதினால் பொடுகு பிரச்சனை மிக விரைவில் சரியாகும்.

தலைமுடி அடர்த்தியாக வளர எண்ணெய் ..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.