மூக்கின் மேல் உள்ள கருவளையம் நீங்க | How to Remove Black Marks on Nose Quickly in Tamil
சிலருக்கு மூக்கின் மேல் கரும்புள்ளிகள், மூக்கு பகுதி சொரசொரப்பாகவும் இருக்கும். மூக்கின் மேல் இருக்கும் கரும்புள்ளிகள் அவர்களுடைய சரும அழகையே கெடுத்துவிடும். அதிலும் மூக்கிற்கு பக்கவாட்டில் இருக்கும் கரும்புள்ளிகளால், அவ்விடமே கருமையாகவும், அசிங்கமாகவும் காணப்படும். கண் பார்வை திறன் குறைவால் ஒரு சிலர் தொடர்ந்து கண்ணாடி அணிவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் மூக்கு பகுதியில் தழும்புகள் போன்று கருப்பாக இருக்கும். இது மாதிரியான மூக்கில் ஏற்படும் தழும்புகள், மூக்கில் கரும்புள்ளிகளுக்கு நாம் கடைகளில் கெமிக்கல் கலப்படம் செய்து விற்பனை செய்கின்ற கிரீம் வகைகளை பயன்படுத்தி இருப்பதை விட சரும அழகை நாமே வீணடித்து கொள்கிறோம். வீட்டில் உள்ள எளிமையான பொருள்களை வைத்தே மூக்கில் இருக்கக்கூடிய கருந்திட்டுகளை எப்படி போக்கலாம் என்று சில டிப்ஸ்களை பார்க்கலாம் வாங்க..
முகத்தில் கரும்புள்ளி மறைய டிப்ஸ் |
கடலை மாவு:
டிப்ஸ் 1: சிறிதளவு கடலை மாவை எடுத்து ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் போல் தயார் செய்துக்கொள்ளவும். அதனை மூக்கின் மேல் தடவி, கீழிருந்து மேலாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் மூக்கில் உள்ள கரும்புள்ளிகள் நாளடைவில் மறைந்துவிடும்.
சர்க்கரை:
டிப்ஸ் 2: சிறிதளவு எலுமிச்சை சாறில் சர்க்கரையை சேர்த்து பேஸ்ட் போன்று ஒரு கலவையை தயார் செய்துக்கொள்ளவும். அந்த பேஸ்டை, மூக்கின் மேல் தடவி ஸ்கரப் செய்து கழுவினால், மூக்கில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள் முற்றிலும் நீங்கிவிடும்.
பட்டை:
டிப்ஸ் 3: பட்டையை இடித்து பொடி செய்து அதனுடன் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, மூக்கில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் வைத்து, பின் தண்ணீர் தொட்டு ஸ்கரப் செய்து கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கும்.
கண்ணாடி அணிவதால் மூக்கில் தழும்பு வந்துடுச்சா..! அப்போ இதை ட்ரை பண்ணுங்க..! |
தயிர்:
டிப்ஸ் 4: ஓட்ஸ் பொடியை தயிருடன் சேர்த்து கலந்து, முகத்தில் தேய்த்து கழுவி வந்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் மட்டுமின்றி கரும்புள்ளிகளும் நீங்கும்.
முட்டை:
டிப்ஸ் 5: முட்டையின் வெள்ளைக் கருவை தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி காய வைத்து, பின் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், மூக்கில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள் மறையும்.
டூத் பேஸ்ட்:
டிப்ஸ் 6: பல் துலக்கும் டூத் பேஸ்ட்டை மூக்கின் மேல் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவினால், மூக்கின் மேல் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள் காணாமல் போய்விடும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |